|
தேர்தல் வாக்குறுதி
வருந்தாதே
தாத்தா!
உன் கூன் முதுகு கூட
குனிய கூடாதென்று
கோஷமிட்டு வருகிறார்கள்
உன் கண்ணீர் காய்வதற்குள்
துடைத்திட
பட்டு கைகுட்டை வருகிறது
அதை புகைப்படம் பிடிப்பார்கள்
இறக்க இருக்கிறவர்களுக்கு
ஏற்றமிகு திட்டங்களாம்
விண் சந்திர மண்ணில்
வீட்டுமனை பட்டா
காது குளிர கேட்டுக்கொள்
எல்லாம் இலவசம்
கண்குளிர பார்த்துக்கொள்
ஐந்துவருடம் காத்திருக்கவேண்டும்
வயிற்றுக்கு உணவில்லையா
வருந்தாதே
தேர்தலன்று தேடிவரும்
நடக்க இயலவில்லையா?
நீ கஷ்டப்படாதே
சொகுசு வண்டி
குடிசைக்கே வரும்
ஆனால் ஒரு கவலை
ஐந்தாண்டுக்கு ஒருமுறைதான்
தேர்தலாம்!
ஐயையோ!
இது தொ¢ந்தால்...
தினம் தினம்
தேர்தல் தருவோமென
இதுவும் ஒரு
வாக்காகி விடும்!
- ந. ஏகம்பவாணன்
|