|
காதல்

தூறும் மேகம்
குடை மறந்ததில் மகிழ்ச்சி
அவள் முந்தானையில் நானும்

நீ தெருக்கோடிக்கு சென்று
திரும்பி பார்க்கும் போதெல்லாம்
மெய்ப்பிக்கப்படுகிறது நம் காதல்!

என்றேனும்
தொ¢யவேனும் எனக்கு...
நீ 'குதிரைவால்' போட்டால்
உன் சங்கு கழுத்திலும்
ஒற்றை சடைபோட்டால்
பிருஷ்டம் தொட்டும்
ரெட்டை சடை பின்னலில்
உன் தோள்களிலும்
என்னதான் சொல்கிறது?
நடக்கும்போது ஆடும்
உன் கூந்தல்


உன் பெயரை
என் குழந்தைக்கு
சூட்ட முடியவில்லை
மனைவியின் பெயரே
உன் பெயரானதால்!

சுவரொட்டியில் சி¡¢த்தபடி நான்
ஐந்தாமாண்டு நினைவஞ்சலி
குழந்தையோடு கடந்தவள் பார்த்திருப்பாளா?

எட்டாவது சுரம்
உன் புன்னகை?

புதியராகம்
உன் சினுங்கல்கள்!


ஆதாமும் ஏவாளும்
ஆப்பிள் கடித்தது
நாம் பசியாறத்தான்!

மன்னியுங்கள்
இந்த கவிதை
தழுவப்பட்டதுதான்
முழுவதுமாக அவளை!

சில தருணங்களில்
வெய்யிலுக்கு நன்றி சொல்வேன்
நம் நிழல்களை இணைப்பதால்!

நீ பேசினால்
எதுவும் மறப்பதில்லை
கொஞ்சம்
என் பாடங்களை
படித்துக்காட்டேன்!
- ந. ஏகம்பவாணன்
|