menu






 

நீயின்றி...

- வேலம். கிருபாகரன்

எப்படித்தான்
நுழைந்தாயோ
என் கண்ணிலும்
என் உயி¡¢லும்
முழுவதுமாய் நீ?!

நீ வந்த
பின்தானே
எனக்கான நேரத்தை
துல்லியமாய் சொன்னது
என் வீட்டு கடிகாரம்

தலைகூட வாராதவன்
தலைப்பாகை அணிந்ததும்
முகங்கூட கழுவாதவன்
முகச்சாயம் பூசியதும்
'அ, ஆ' அறியாதவன்
அகடவிகடம் சொன்னதும்
'க, ங, ச' தொ¢யாதவன்
கவிதைப் பக்கம் போனதும்
உன்னால்தான் என்பதை
அறிவாயா பெண்ணே?

நீ
மவுனத்தை சொன்னாய்
நானோ
மறுஜென்மம் போனேன்.

வோ¢ழந்துப்போன
என் காதல் செடியில்
மழைக்கால காற்றாய்
நீ வந்தாய் பெண்ணே!

உன் பார்வை ஒன்றுதான்
எனக்கான ஆக்ஸிஜன்
இதுவன்றி உலகில்
உயிர்வாழ்தல் அ¡¢து

அதுபோல்தான்
நானும்
நீ இன்றி எனக்கு
வேறேது உலகு.

கால்நனைய மனமின்றி கரையோரம் இருந்தவனை ஆழிப்பேரலை கடலுக்குள் இழுத்தது போல் காதலே வேண்டாம் என எதிர் திசையில் பயணித்த ஒருவனை சட்டென திருப்பியது அவள் பார்வை. வெடிவைத்தும் பிளக்காத பாறை ஒன்று, அந்த பார்வைக்கு களிமண்ணாய் இளகியது. பூக்களையே மிதித்தவன் முள்ளுக்கும் வலிக்கும் என்ற மாயை நிகழ்ந்தது.

காதல் படுத்தும் பாடுகள்தான்
எத்தனை எத்தனையோ?


அப்படி வந்துவிட்ட காதலை, காலம் அவனுக்கு பு¡¢யவைத்தபோது காலத்தைப் போலவே அவனும், அவளுக்காய் தினம் தினம் அவள் வரும் வழியில் நின்றுக்கொண்டிருக்கிறான்.

எந்த அலையாவது தன்னை
கடலுக்குள் இழுத்துப்போகாதா என.