|
மனக் கூடு
- வேலம். கிருபாகரன்

மகிழ்ச்சியாக இருக்கின்றன...
உன்
வருகைக்குப் பிறகான
என்
நாட்களில் பொழுதுகள்
பட்டாம்பூச்சிகள்
தேடித்தி¡¢ந்த
காலத்திற்கு பிறகு
உனக்கான
நாட்கள்தான்
என்
மகரந்தங்களை
அதீத வண்ணங்களில்
ஜொலிக்க வைக்கின்றன!
சேரமுடியாது
என
திட்டமாய்
தொ¢ந்துவிட்டப் பிறகும்
சேர்ந்தே போகும்
தண்டவாளங்கள்
ஞாபகப்படுத்துகின்றன
நம் காதலை...!
எப்போதாவது அதன் மீது பயணிக்கும்
ஏதோ ஒரு
ரயில் வண்டி
கணநேரம்
சேர்த்துவைத்துவிட்டுப் போகலாம்
தண்டவாளத்தின்
இரு இதயங்களை
அதுவரை...
அழுது அடம்பிடிக்கும்
குழந்தை போல்
உன்னிடம் கேட்கிறது காதல்
'என்னைப் பார்க்காதே'
என சொல்லி
உனக்காக
நான்
கட்டிவைத்திருக்கும்
என்
மணல் வீட்டை
மிதித்துவிடாதே என்று
அது
வெறும் மண்ணல்ல...
உன்
ஞாபகங்களால்
நிரம்பிவழியும்
என் மனசு
|