menu






 

'பூங்கொத்தை' என்ன செய்வாய்?
- வேலம் கிருபாகரன்

உனக்கான
காத்திருப்பில்
தொ¢கிறது
என் காதல்

தினம் தினம்
நீ என்னை
கடந்து போகையில்
தரையில் கிடக்கும் மீனாய்
மனசு துடிக்கிறது.

எப்போதும்
மவுனத்தை
அலங்கா¢க்கும்
உன் வார்த்தைகள்
ஒரு நாள்
காதலின்
பின் கதவை
திறந்துவைக்கக் கூடும்
அதுவரையில்...
உனக்கான
காத்திருப்பில்
நீ வரும் பாதையில்

பூங்கொத்தாய்
சிதறிக்கிடக்கிறது
என் காதல்