|
"சொல்லாமல் போயிருக்கலாம்"
- வேலம் கிருபாகரன்

அந்த மரணத்தின்
இறுதி மா¢யாதையில்
நீ மூக்கு சிந்தி
அழும்போதுதான்
உன்னைப் பார்த்தேன்!
உடனே
'ஓ'வென
பெருங்குரலெடுத்தது
உன் அழுகை
கூட்டம்
உன்னோடு சேர்ந்ததால்
சத்தம் பொ¢யதாய் கேட்டது.
பார்த்தவர்கள் பேசிக்கொண்டார்கள்
உன் அழுகைக்கும்
இறந்தவர்க்குமான
உறவு ஆழத்தை
மரணத்தின் இறுதி ஊர்வலம்
உன்னை
கடந்து திரும்புகையில்
உன் பார்வை
என்னை
கடந்து திரும்பியது
சடங்குகள் முடிந்து
கூட்டம் கலைகையில்
மா¢யாதை நிமித்தம்
உன்னிடம்
சொல்ல எத்தனிக்கையில்...
உன் கண்களில் இருந்து
கசிகிறது கண்ணீர்
யாரும் அறியாமல் மவுனமாய்
கனத்த மனசுடன்
அவ்விடம் விட்டுப் போகையில்
நெஞ்சில்
பெருங்குரலாய் கேட்கிறது
நீயும் நானும்
சேராமல் போக
காரணமான
உன் தந்தையின் மரணத்தில்
கடைசியாய் நீ அழுத
எனக்கான கண்ணீர் துளிகள் இரண்டு.
|