menu






 

மனமின்றி

ஒருவார
அலுவலக டூர்முடிந்து
வீட்டுக்கு திரும்புகையில்
உன்
பிறந்தநாள் பா¢சாய்
நான் வாங்கிவந்த
பூப்போட்ட சேலையை
பார்த்துவிட்டு
இது
எனக்கா என
ஏக்கத்துடன் கேட்கிறாள்
என் கடைசி தங்கை

உண்மை சொல்ல
துணிவின்றி
மனசறிந்து
பொய் சொல்கிறேன்
என் ஆபிசர்
தன் மனைவிக்கு கொடுத்தனுப்பிய
பொருள் என்று.


நாணயம்

விபச்சார பெண்ணொருத்தியிடம்
கவிதை பேசி,
கதை சொல்லி
அவள் சோகம் கேட்டு
பிற்பாடு
அவளோடு உறவுகொண்டு
பி¡¢கையில்
எல்லோரும்
ஞாபகமாய் கேட்கிறார்கள்
அதற்கான தொகைபோக
மீதிச் சில்லறையை!


- வேலம் கிருபாகரன்.