menu






 

தாஜ்மகால்

தான்
நேசிக்கும்
பெண்ணொருத்தியின்
திருமணப் பா¢சாய்
எதை தந்தால்
அது
தினம் தினம்
தன்னை
ஞாபகப்படுத்தும் என
கடை கடையாய்
அப்பொருளை
தேடுகிறது காதல்.


மனசு

சந்தடிமிக்க
ரயிலடி ஒன்றில்
மசமசத்துப் போகும்
கூட்ட நொ¢சலில்
'அக்காவுக்கு' வாங்கிப்போவென
என்னைப் பார்த்து
நீட்டுகிறாள்
பூ விற்கும் சிறுமி
மல்லிகைப் பூச்சரத்தை...!?

மறுக்க மனமின்றி
சுமந்துகொண்டு போகிறேன்
எனக்கும்
என் மனைவிக்குமான
திருமண பந்தம்
நேற்றோடு முடிந்தாலும்
பூ விற்கும் சிறுமி
வாடிவிடக் கூடாதென...

- வேலம் கிருபாகரன்.