|
சேரவாரும் ஜெகத்தீரே....
"மொறம் மொழுவலியோ...
மொறம் மொழுவலியோ..."
குரல் கேட்கிறது. சுடுநீர் ஆவியாகும்
நகரச் சாலை, ஹாரன் ஒலிக்கும்பலில்
ஓர் எளிய கலையுடன் சாணம் நம்பி,
குழைத்துப் பூசும் தன் மெலிய விரலை நம்பி,
நகரும் அவள் ஒரு கிழவியல்ல;
நகர்மயமாகிப் போன நம் மனதின் வலி.
முறம் இல்லையெனில்
விலைக்கு வாங்கியாவது முறம் மெழுகுங்கள்
இரண்டு ரூபாய்க்கு ஐந்து கேட்பினும் தரவும்.
சாராணச் சாண உருண்டைகளின் பின்புறம் -
அவள் பேணும் இந்தியாவின் முதுகெலும்பு உள்ளது;
ஒரு பசு உள்ளது
அறிய மறுக்கும் நம் அறியாமை கலந்து.
- பா. சத்தியமோகன்
|