|
நிகழ்ந்துவிடக் கூடுமெனில்.....

அதற்கு பிறகு
நாம்
சந்திக்கவே இல்லை...
சந்தித்திருக்கவேண்டிய
தருணங்கள்
கவனமாய்
தவிர்க்கப்பட்டிருக்கின்றன
உன்னால்!?
மாமி வீட்டு புதுகுடித்தனம்
சித்தப்பாவின் மரணம்
தோழியின் திருமணம்
என
வாய்ப்புகள் வாய்த்தும்
ஏனோ
தவிர்த்திருக்கிறாய்
நம் சந்திப்புகளை...!
சுழன்று அடித்த
வாழ்க்கை சூறாவளியில்
நீயும் நானும்
எதிரெதிர் தூசுகளாய்
சுழலத் தொடங்குமுன்
நம் காதலை சொன்ன
அந்த
'கருவாட்டு' பாறையின் மீது
கடைசியாய்
நாம்
சந்தித்துக்கொண்டோம்.
சிவந்துபோன
உன்
மூக்கு நுனியை
துடைத்தபடி
நீ
உன் காதலைச் சொன்னாய்!
லேசாய்
உன்
பாவாடை தூக்கி
நம் காதலுக்காய்
உன்
அம்மா இழுத்த
சூட்டு தழும்பை காட்டி
நான் உன்னை
நேசிப்பதை பார் என்றாய்.
சொல்லிவிட்டு...
உன் அப்பன்
முடித்திருக்கும்
உன்
திருமண சேதியையும்
சொன்னாய்
அழகாக
பேசத்தொ¢ந்தவள் நீ
அதனால் தான்
முதலில்
எதை சொல்ல வேண்டும்
என
தொ¢ந்திருக்கிறது உனக்கு
என் இதயம்
எப்போதும்
உனக்குதான் என்றாய்
உன்
திருமண பத்தி¡¢கையை
நீட்டியபடி
என் கழுத்தில்
ஏறப்போவது
தாலி அல்ல
வேலி என்றாய்
நீ
எப்போது அழைத்தாலும்
நான் வேலிதாண்டி
வருவேன் என்றாய்
அன்றைக்குப் பிறகு
இன்று வரை
ஏனோ நீ என்னை
சந்திக்கவே இல்லை.
பின்னுரையாய்...
உங்கள் காதோடு கொஞ்சம்...
ஓர் அந்தி சாயும் வேளையில் இருள் அப்பிய முகத்துடன் தன் காதலைப்போல
மறைத்துகொண்டு வந்த தன் திருமணப்பத்தி¡¢கையை நேசித்தவனிடம் தந்துவிட்டு, 'என்
வீட்டாருக்காய் போலியாய் நான் தாலி சுமக்கப்போகிறேன், என் மனசு எப்போதும்
உன்னை தான் நினைக்கும்' என அடி நெஞ்சில் இருந்து வார்த்தைகளை கொட்டியப் பெண்
பிற்பாடு இயற்கையோடு வாழ பழகிகொண்டுவிட்டாள். சலனமின்றி அமைதியாய்
ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை நதியில் அவ்வப்போது மனசு கல்லெறியப் பார்க்கும்.
நதிகள் அழுதால் யாருக்கு தொ¢யப்போகிறது? அதனால் தான் அருந்தவேண்டிய நீ¡¢ல்
கால்நனைய மனமின்றி வெற்றுடன் திரும்புகிறது காதல்.
'நதிகள் கடலில்தான் சேரவேண்டும்
என்பது விதியா என்ன?'
- வேலம் கிருபாகரன்.
|