|
ஆப்பிள்
- சூர்யன் கவிதைகள்
நீயில்லாத உனதறையில்
ஒரு ஆப்பிளை
வைத்துப் போகிறேன்
எடைக் கல்லாய்
அதனடியில்
படபடக்கிறது என்னிதயம்
கடிதமா
ஆப்பிளா
எது ருசியாயிருந்ததென
நாளை எனக்குச் சொல்
குட்டி இளவரசிக்கு
ஆப்பிள் ரொம்பப் பிடிக்கும்
இளவரசியின் சமஸ்தானத்தில்
சக்கரமிழந்த ரயில் வண்டி
வெட்டியெடுக்கப்பட்ட
ஆப்பிள் துண்டங்களைச்
சுமந்து தி¡¢கிறது
இளவரசியின் ப்¡¢யத்துக்காக
அவளது முயலும் புலியும்
ஆப்பிள் சாப்பிடப் பழகிவிட்டன
இன்று
அம்மா அடித்ததற்காக
அழுதுகொண்டிருக்கிறாள் இளவரசி
புறப்பாட்டை ரத்து செய்துவிட்டு
ஓய்ந்து நிற்கிறது ரயில் வண்டி
இளவரசிக்கு ஆதரவாக
உண்ணாவிரதமிருக்கின்றன
முயலும் புலியும்
ஆப்பிளை வாங்கத்
தங்களை விற்கும்
காலமும் வந்தது ஏவாள்களுக்கு
கடவுள் சி¡¢த்துக்கொண்டார்
ஆப்பிளால் வந்த வெட்கம்
ஆப்பிளால் அழிந்தது
நம் இல்லத்தரசியிடம்
கொஞ்சம் பணமிருக்கிறது
நீண்ட பேரத்துக்குப் பின்னும்
அவள் கேட்ட விலைக்கு
ஆப்பிள் கிடைக்கவில்லை
செளகர்யமாய்க் கிடைத்த
போ¢க்காய்களோடு
வீடு திரும்புகிறாள்
வாசலிலேயே எதிர்கொள்ளும்
பையனுக்கு
போ¢க்காயொன்றைத் தருகிறாள்
'என்னதும்மா' என்ற
செல்லத்தின் கேள்விக்கு
இல்லத்தரசி சொல்கிறாள்
'பச்சை ஆப்பிள்'
அவசர சிகிச்சைப் பி¡¢விலிருந்து
வீடு திரும்பியிருக்கிறார் அப்பா
வந்து சேர்ந்த
ஆப்பிள்களின் முகவா¢யிலிருந்து
விடுபட்ட உறவுகளைப் பற்றி
புகார்ப் பட்டியல்
வாசித்துக் கொண்டிருக்கிறாள்
அம்மா
|