menu






  • போ

    - க.நா. சுப்ரமணியன் கவிதைகள்.


எட்கார் ஆலன் போவின் கதைகளைப் படிக்கும் போது
மிகவும் உஷாராகத்தான் படிக்க வேண்டியதாக இருக்கிறது.
ஏதாவது ஒரு வார்த்தையின் இடத்தையும் அர்த்தத்தையும்
கவனிக்காமல் விட்டுவிட்டால், அவன் என்னதான் சொல்ல
வருகிறான் என்பது தொ¢யாமலே போய் விடுகிறது. இத்தனைக்கும்
அவன் எழுதியதெல்லாவற்றையும் பத்தி¡¢கைத் தேவைக்காக
அவசர அவசரமாக எழுதினான் என்று தான் தொ¢கிறது.
கவனமாகப் படிக்காவிட்டால் அவன் அர்த்தப்படுத்திக் கொள்ள
ஏது வாகியிருக்கிறது. லிஜீயா என்கிற கதையில் அவன்
தனது இரண்டாவது மனைவியைக் கொன்றானா ஆகாயத்
திலிருந்து கொட்டிய விஷத்துளிகள் மனப்பிராந்தியா
உண்மையின் எதிரொலியா, பிரதிபலிப்பா என்று
கண்டு கொள்ள முடியாமல் திணறிப் போவோம்.
நட்புடன் உயிரோடு புதைந்து சாக விட்டு விட்டு
தான் செய்த தவறுக்குத் தண்டனை வேண்டி
நின்றானா?-கவனித்துப் படித்தால் தான் தொ¢யும்
கவனித்துப் படித்தாலும் இரண்டு விதமாகவும் தொ¢யும்
வேறு விதமாகவும் பதினாறு விதங்களாகவும்
அர்த்தப்படுத்திக் கொள்ள அவன் உயநிஷத்துக்கள்
எழுதினானா? வெறும் கதைகள் தான் எழுதினான?
போவின் எழுத்துக் கலையின் பூர்ணத் தன்மை
அமைதியின்மையும் பலித்து விட்டது போல
ஒரு நினைப்பு ஏற்பட்டால் ஆச்சா¢யப்படுவதற்கில்லை.