|
சுமை
சிறு வயதில் புத்தகங்களை சுமந்தேன் அவற்றோடு
என் பெற்றோ¡¢ன் பாசத்தை சுமந்தேன்
பருவ வயதில் பல ஆசைகளை சுமந்தேன் அவற்றோடு
நண்பர்களின் இறவா நட்பை சுமந்தேன்
வெற்றிப் பெற்றபோது பாராட்டுகளை சுமந்தேன்
அவற்றோடு
பொ¢யவர்களின் ஆசியை சுமந்தேன்.
தோல்வியுற்றபோது வேதனையை சுமந்தேன் அவற்றோடு
வேலையற்றவர்களின் விமர்சனங்களை சுமந்தேன்.
இதுவரை சுமை தொ¢யாத எனக்கு அவள் இதயம் மட்டும்
பெருஞ்சுமையாக தொ¢கிறதே ஒரு வேளை...
அவள் என் உயிரைவிட பொ¢தாக தோன்றுகிறாளோ..
இதயச்சுமையுடன்,
- ரகு.
|