menu






ஜாதி

கோடை காலத்து சுட்டொ¢க்கும் சூ¡¢யனுக்கே
சூடு போடும் ஜாதி எங்கள் ஜாதி

வயதான அனுபவத்திற்கு விடைகொடுத்து
வீட்டிற்கு அனுப்பும் ஜாதி எங்கள் ஜாதி

சுழன்றடிக்கும் புயலையும் நட்பால்
தென்றலாக மாற்றும் ஜாதி எங்கள் ஜாதி

பழங்கதையை பரணில் போட்டுவிட்டு
புதிய சா¢த்திரம் படைக்கும் ஜாதி எங்கள் ஜாதி

உலகை ஆளப்பிறந்த ஜாதி
எங்கள் ஜாதி - இளைஞர் ஜாதி.


- ரகு

 

போக போக...

இதோ ஆசையோடு நான் எதிர்பார்த்த என்
பிறந்தநாள் வருகிறது, ஊருக்கு போகவேண்டும்
இரண்டு நாளில் பிறந்தநாள் போய்விட்டது

அங்கு அனைவரும் குதூகளிக்க தீபாவளி வருகிறது,
இங்கு என் மனதில் ஊருக்கு போகவேண்டும்...
இந்த தீபாவளியும் வழக்கம் போல போய்விட்டது.

சா¢ அனைத்தும் போக பொங்கல் இருக்கிறது
ஒரு நினைவு, கண்டிப்பாக ஊருக்கு போக வேண்டும்...
பொங்கலும் போயிபோடு எ¡¢ந்து போய்விட்டது.

நாட்கள் கூட நமக்கு காத்திருக்காது,
என்றாவது அல்ல தினமும், இம்முறையாவது ஊருக்கு போகவேண்டும்
என்ற எண்ணம் வந்து வந்து போய்விட்டது.
அதனால்தான் அவளும் என்னைவிட்டு போய்விட்டாளோ.

பந்தமும் பாசமும் என் நினைவுகளோடு அங்கு இருக்க
வாய்ப்புகளும், வேலைகளும் இங்கு இருக்க,
என் வாழ்க்கை எங்கோ போகப்போகிறது என்ற
எண்ணம் மட்டும் மனதில் இருக்கிறது...

- ரகு