|
|
|
|
|
|
- குளத்தில் நீராடி
கோயில் பயணம்...
அழுக்கு மனத்துடன்...!
- ராஜா கன்னிக்கோயில்
- உயிர்நீத்த உடல்களால்
உயிர்வாழ்கிறான்...
வெட்டியான்...!
- இரா. ஆதிநாராயணன், தஞ்சை.
- ஊரே சிவந்துச்சு
சோ¢ப்பெண் விற்ற
மருதாணி
- ஏகாதசி
- சுழலில் சிக்கி இறந்த மகனுக்கு
திதி, படையல்...
ஆற்றில்!
- நா. கவிக்குமார், சேலம்.
|
- நிரம்பியது
புத்தகக் கடை...
திடீர் மழை!
- இரா. அ. தென்றல், ..
திருச்செங்கோடு.
- எப்போது தொ¢யும் பசுவுக்கு
இறந்துபோன விஷயம்
வைக்கோல் கன்று.
- சங்கர்குமார்.
- துணிகளில் தொ¢வதில்லை...
நெசவாளியின்
கருத்த விரல்கள்...
- ஏகாதசி.
|
|
மித்ராவின் ஹைக்கூ கவிதைகள்
|
|
|
- தங்க காசுகள்
மரங்கள் பூக்கும்
கொன்றை மலர்கள்...
- மதிய நேரம்
குயில்பாட்டு
பசிக்கவில்லை
- கோடைவெயில்
அடிக்கும் அனல்காற்று
பறவையின் கண்களில் ஈரம்
- உருகும் பனிக்கட்டிகள்
பாவம்.. கடலோர நகரங்கள்
எதிர்காலச் சிந்தனைகள்...
- எ¡¢ந்த காட்டில்
உலர்ந்தப் புற்கள்
மிரட்டும் காற்று
- அமைதியில் ஆறு
மீன்களின் துள்ளல்
அதட்டும் அலைகள்
- வசந்தம் வந்தது
மரங்களில் துளிர்மொட்டுக்கள்
மலர்கள்
கோடைக்கு முதுமை...
- மெளனமாய் சி¡¢க்கும்
எல்லா பூக்களும் அழகு
மனித மனங்களை விட...
- உழுத களைப்பு
அசைபோடும் மாடுகள்
கடிக்கும் கொசுக்கள்
- அந்தி மந்தாரை
பறிக்க மனமில்லை... பாவம்
இரவுவரை வாழ்க்கை...
- அழுக்கு இலைகள்
தேய்த்துக் கழுவும்
மழை
- மர இலைகளில்
ஒளிந்திருக்கும் மழைத்துளிகள்
காட்டும் மின்னல்
- நின்றது மழை
இலைகளைத் தலை துவட்டியது
காற்று
- பட்ட மரம்
நெற்றுகள் பாடும்
முகா¡¢ ராகம்
- கம்மங் கதிர்கள்
ஊதிப்பார்க்கும்
பட்டுப் பூச்சி
- மலைச் சிகரம்
கவிதை எழுத விரையும்
விழிகள்
- இற்று வீழ்ந்தது
அணைந்தது பசி
செல்லா¢த்த கூரை
- நிலாச்சோறு
மகிழ்ச்சி குரல்கள்
மரத்தடி மக்கள்
- முட்களுக்குள்
தன்னைச் சிறை வைக்கும்
ரோஜா மொட்டு
|
- இலையுதிர் மரம்
சருகுகளின் அழுகை
தளிர்களின் சி¡¢ப்பு
- மா¢த்தது மனித நேயம்
உயிர்த்தன
ரோபோக்கள்
- அடித்தது யார்
அழுகிறது மூன்று நாட்கள்
மழை
- பயந்தேன் தனிமைக்கு
எழுதினேன்
நட்பானது தனிமை
- கொடிய மலர்
ஊஞ்சலாடும் வண்டுகள்
தேன் பகுதி
- நிரந்தரம் கிளை
அறியாது மகிழும் பறவை
வானைத் தொட்டதாய்...
- ஓலைக்குடிசை
மழையோடு போட்டி
அழும் குழந்தைகள்
- கரைந்தது பாறை
அலை அடித்து அடித்து
போராட்ட வாழ்க்கை
- விடிகாலை வானம்
நகர்ந்து செல்லும் கவிதைகள்
மேகங்கள்
- கம்பீர மலை
பிரமிப்பில் நான்
நேசக்காற்று
- தொங்கு பாலம்
மலைகளை இணைக்கும் மேலே
குழப்பத்தில் மேகங்கள்
- தனிமையான காடு
ஒதுக்கப்பட்ட கோயில்
பூச்சி தின்ற கதவுகள்
- காய்ந்த தோட்டம்
பழுத்த இலைகள் நடுவே செல்லும்
தனித்த வழி
- தெளிவாய்க் காட்டும்
தொலைதூரத் திசைகளை
கணநேர மின்னல்
- கொள்ளுச் செடி
ஊடு பயிராய் கஞ்சா
போதையில் வண்டு
- கரையேறும் தோணிகள்
சுறுசுறுப்பாய் மீனவர்கள்
மீன்களின் சோகம்
- மணற்பரப்பு
நிலவொளியில் கவிதை எழுதும்
நண்டுகள்
- மழை நின்ற இரவு
குவியும் ஈசல்களின் சிறகுகள்
வலிக்கும் மனம்...
|
|
|