menu






  இலக்கியங்கள் >> மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்

மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்

தேசிய கீதங்கள்

1. பாரத நாடு

2. ஜய வந்தே மாதரம்

ராகம் - ஹிந்துஸ்தானி பியாக்
தாளம் - ஆதி

பல்லவி

வந்தே மாதரம் - ஜய
வந்தே மாதரம்.

சரணங்கள்

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே) 1

ஆரிய பூமியில் நாரிய ரும்நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே) 2

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர் உவந்தே சொல்வது (வந்தே) 3

ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே) 4

பின்னே

Top

முன்னே