|
ATTISUDI BY AUVAIYAR
காப்பு (Invocation) |
ஆத்திசூடி யமர்ந்த தேவனை
ஏத்தியேத்தித் தொழுவோம் யாமே.
|
உரை :
ஆத்திச்சூடி - ஆத்தி மாலையைத் தா?த்து; அமர்ந்த - வீற்றிருந்து;
தேவனை - கடவுளை; ஏத்தியேத்தி - துதித்துத் துதித்து;
தொழுவோம் யாமே -யாம் வணங்குவோம்.
கருத்துரை :
ஆத்திமாலை தா?த்து வீற்றிருந்த கடவுளைப் பலமுறை துதித்து
வணங்குவோம்.
Let us continually worship and praise the God, who wears a garland
of the Atti flowers. |
|
|
நூல்
(Text)
1. அறஞ்செய விரும்பு
உரை :
அறம்செய - தருமம் செய்ய; விரும்பு - நீ விருப்பம் கொள்.
கருத்துரை :
நீ தருமம் செய்வதற்கு விருப்பம் கொள்.
Have the desire to do charity. |
|
|
2. ஆறுவது சினம்
உரை :
ஆறுவது - தணிவது; சினம் - கோபமாம்.
கருத்துரை :
சினம் என்னும் நெருப்பே தணியத்தக்கது.
Anger should be subdued. |
|
|
3. இயல்வது கரவேல்
உரை :
இயல்வது - இசைவது (கூடியது); கரவேல் - மறைக்காதே.
கருத்துரை :
மனம் வாக்குக் காயங்களால் பிறர்க்கு நீ செய்யக்கூடிய உதவியை உன்னால்
ஆகாதென்று மறைத்துச் சொல்லாதே.
Do not conceal your means. |
|
|
4. ஈவது விலக்கேல்
உரை :
ஈவது - ஒருவர் மற்றவர்க்குக் கொடுப்பதை; விலக்கேல் - தடுக்காதே.
கருத்துரை :
பிறர் ஒருவருக்குக் கொடுப்பதை நீ இடையே நின்று கொடாமல் தடுக்காதே.
Do not prevent giving alms. |
|
|
5. உடையது விளம்பேல்
உரை :
உடையது - உன்னிடத்தே இருப்பதை; விளம்பேல் - வெளியிட்டுக் கூறாதே.
கருத்துரை :
உன்னிடத்தில் உள்ளதைப் பெருமிதத்தோடு, பிறா?டம் சொல்லாதே.
Do not boast of your possessions. |
|
|
6. ஊக்கமது கைவிடல்
உரை :
ஊக்கம் - மனவெழுச்சியை; அது - தரும் செயலை; கைவிடல் - விட்டுவிடாதே.
கருத்துரை :
மனவெழுச்சியைத் தரும் செயலை விட்டு விடாதே.
Do not abandon courageous acts. |
|
|
|
7. எண்ணெழுத் திகழேல்
உரை :
எண் - கணக்கையும்; எழுத்து - இலக்கணத்தையும்
(இயல் தமிழையும்); இகழேல் - இகழ்ந்து, கற்காமல் விட்டுவிடாதே.
கருத்துரை :
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து
கற்காமல் விட்டு விடாதே.
Do not despise arithmetic and grammar. |
|
|
8. ஏற்ப திகழ்ச்சி
உரை :
ஏற்பது - இரந்து பெறுவது; இகழ்ச்சி - இழிவான செயல்
கருத்துரை :
பிறா?டம் சென்று, ஒன்றை இரந்து பெறுவது இழிவானது.
Begging is disgraceful. |
|
|
9. ஐய மிட்டுண்
உரை :
ஐயம் - பிச்சை; இட்டு - அங்க ஈனர்களுக்குக் கொடுத்து;
உண் - நீ உண்பாயாக.
கருத்துரை :
அங்க ஈனர்களுக்கு, நீ பிச்சையிட்டுப் பின்னர் உண்க.
Give alms to the handicapped and then eat. |
|
|
10. ஒப்புர ஒழுகு
உரை :
ஒப்புர - உலக நடைக்கு ஒப்ப; ஒழுகு - நடப்பாய்.
கருத்துரை :
உலக நடைக்கு ஒப்ப நீயும் நட
Learn to live agreeable to the world. |
|
|
11. ஓதுவ தொழியேல்
உரை :
ஓதுவது - கற்பதை; ஒழியேல் - விட்டு விடாதே.
கருத்துரை :
நூல்களைக் கற்பதினின்றும் நீங்காதே.
Cease not to learn. |
|
|
12. ஒளவியம் பேசேல்
உரை :
ஒளவியம் - பொறாமைச் சொற்களை; பேசேல் - பேசாதே.
கருத்துரை :
பொறாமைச் சொற்களை ஒருபோதும் பேசாதே.
Do not speak enviously. |
|
|
13. அ?கஞ் கருக்கேல்
உரை :
அ?கம் - தானிய அளவை; கருக்கேல் - குறைத்து விற்காதே.
கருத்துரை :
தானியங்கள் அளவைக் குறைக்காமல் விற்பாயாக
Do not deceive in measuring the grain |
|
| |
top |
|