|
கடையவனும் அறவுரை கேளான்
வைகலும் நீருட்கிடப்பினும் கல்விக்கு
மெல்வென்றல் சால அரிதாகும் - அஃதேபோல்
வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்குக்
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு. 31
உன்னோடு வாழ்தல் அரிது
அற்ற பொழுதே அறநினைத்தி யாதொன்றும்
பெற்றபொழுதே பிறநினைத்தி - எற்றே
நிலைமையில் நன்னெஞ்சே! நின்னோடு வாழ்க்கை
புலை மயங்கி யனை துடைத்து. 32
உடலின் அழிவை அறிக
ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெருவாழ்க்கை முத்தாடை கொண்ட - திருவாரை
வீணாள் படாமை நீ துன்பம் பொய்யேயாக
வாணாள் படுவது அறி. 33
திறவுரை தேறாதவர்
கயத்திடை உய்த்திடினும் கன்னனையா தென்றும்
பயற்றுக் கறிவேவாது அற்றால் - இயற்றி
அறிவுரை கேட்ட விடத்தும் அனையார்
திறவுரை தேறாதவர். 34
உள்ள நாள் நல்லறம் செய்க
உள்ள நாள் நல்லறம் செய்கென்னும் சாற்றன்றோ
இல்லைநாள் பேயென்றிடங் கடிந்து - தொல்லை
இடைக்கடையும் ஆற்றார் இறந்தார்க்கு நின்றார்
கடைத் தலை வைத்தீயும் பலி. 35
வயிற்றின் கொடுமை
ஒரு நாளும் நீதரியாய் உண்ணென்று சொல்லி
இரு நாளைக்கு ஈந்தாலும் ஏலாய் - திருவாளர்
உன்னோடு உறுதி பெரிதெனினும் இவ்வுடம்பே
நின்னோடு வாழ்வதல் அரிது. 36
அறத்திற்கு அறிவு துணை
கட்டளை கோடித் திரியிற் கருதிய
இட்டிகையும் கோடு மதுபோலும் - ஒட்டிய
காட்சி திரியின் அறந்திரியும் என்றுரைப்பர்
மாட்சியின் மிக்கவர்தாம். 37
அறநூல் தரும் ஆறு
தலைமகனும் நூறும், முனியும், பொருளும்
தொலைவின் துணிவோடு பக்கம் - மலைவின்றி
நாட்டி இவ்வாறும் உரைப்பரே நன்னெறியைக்
காட்டி அறம் உரைப்பார். 38
நல்ல அறம் நம்பு
இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
அறத்தானும் இஃதே சென்றாற்றத் துறந்தார்கள்
தம்பாலே வாங்கி உரைத்தனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம். 39
அகத்தூய்மையும் அருளுமே
அறமாகும்
ஒன்றோடொன்று ஒவ்வாத பாசண்டத்துள் எல்லாம்
ஒன்றோடொன்று ஒவ்வாப் பொருள் தெரிந்து - ஒன்றோடொன்று
ஒவ்வா உயிரோம்பி உள்தூய்மை பெற்றதே
அவ்வாயதாகும் அறம். 40
பிறப்பறுக்கும்
மெய்ந்நூல்
நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன் கொள்வான்போல்
அறத்திறனும் ஆராய்ந்துள் புக்கால் - பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்படல் ஆகுமற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு. 41
விரும்பியதில் குற்றம்
தோன்றா
காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாததாகும், உவப்பதன்கண்
குற்றமே தோன்றாக் கெடும். 42
துறந்தார் கொண்ட வேடம்
துறந்தார் துறந்திவரென்று அறியவாகும்
துறந்தவர் கொண்டொழுகும் வேடம் - துறந்தவர்
கொள்ப கொடுப்ப வற்றால் காணலாம் மற்றவர்
உள்ளம் கிடந்த வகை. 43
தேவருலகுக்கு உரியோர்
இந்தியர்க்கு ஒல்கா இருமுத்தொழில் செய்தல்
சிந்தை தீரப்பியத்தின் மேலாக்கல் - பந்தம்
அரிதவிவை எய்தும் ஆறு ஒழுகுவார்க்கே
உரிதாகும் உம்பா உலகு. 44
முனிவர் தொழில்
அழல் அடையப்பட்டான் அதற்கு மாறாய
நிழலாகி தன்னியல்பே நாடும் - அழலது போல்
காமாதியால் ஆங்கடு வினைக் கட்டழித்துப்
போமாறு செய்வார் புரிந்து. 45
|