|
இளமையில் அறம் செய்க
இன்சொல் விளநிலமா, ஈதலே வித்தாய்
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறு காலைச் செய். 16
படுத்தவன் எழுதல் அரிது
காலைச் செய்வோம் என்று அறத்தைக் கடைபிடித்துச்
சாலச் செய்வாரே தலைப்படுவார் - மாலைக்
கிடந்தேன் எழுதல் அரிதால் மற்றென்கொல்
அறங்காலை செய்யாதவாறு. 17
புன்மை பெரிது புறம்
சென்ற நாளெல்லாம் சிறுவிரல் வைத்து
நின்ற நாள் யார்க்கு உணர்வரிது - என்றொருவன்
நன்மை புரியாது நாளுவப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம். 18
அஞ்சாது நல்லறம் செய்
கோட்டு நாளிட்டுக்குறையுணர்ந்து வாராதால்
மீட்டொரு நாளடையும் தாராதால் - வீட்டுதற்கு
வஞ்சஞ்செய் குற்றம் வருதலால் நன்றாற்றி
அஞ்சாது அமைந்திருக்கல் பாற்று. 19
தருமம் தலை நிற்றல் நன்று
இன்றுள்ளோர் இன்றேயும் மாய்வர் அவருடைமை
அன்றே பிறருடைமை யாயிருக்கும் - நின்ற
கருமத்தார் அல்லாத கூற்றின் கீழ் வாழ்வார்
தருமந்தலை நிற்றல் நன்று. 20
தூங்காது அறம் செய்க
மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து
பின்னை அறிவன் என்றால் பேதைமை - தன்னைத்
துணிந்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலும் உண்டு. 21
அறமே உயிர்க்கு அரணாகும்
மூப்பொடு தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து
கூற்ற வரசன் குறும்பெறியும் - ஆற்ற
அறவரண மாராய்ந் தடையின் அஃதல்லால்
பிறவரணமில்லை உயிர்க்கு. 22
வருந்தியும் அறம் செய்க
திருத்தப்படுவது அறக்கருமம் தம்மை
வருத்தியு மாண்புடையார் செய்க - பெருக்க
வரவும் பெருங்கூற்றம் வன்கண் ஏமன்கீழ்த்
தரவறுத்து மீளாமை கண்டு. 23
அறம் விரைந்து செய்க
முன்னே ஒருவன் முடித்தான்தன் துப்பெல்லாம்
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல் - முன்னே
முடித்த படியறிந்து முன்முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து. 24
துஞ்சாத் துயரம் தருவது
குறைக்கருமம் விட்டுரைப் பிற்கொள்ள உலவா
அறக்கருமம் ஆராய்ந்து செய்க - பிறப்பிடைக்கோர்
நெஞ்சே மாப்பில்லாதான் வாழ்க்கை நிரயத்துத்
துஞ்சாத் துயரந் தரும். 25
அறம் செய்யாது உறங்குவது
ஏன்?
அறம்புரிந்தாற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரணம் என்ன? - மறந்தொருவன்
நாட்டு விடக்கூர்தி அச்சிறுங் காலத்துக்
கூட்டுந் திறமின்மையால். 26
அறனழித்து வதொன்றில்லை!
பாவம் பெருகப் பழி பெருகத் தன்னோம்பிப்
ஆவதொன்றில்லை அறனழித்துப் - பாவம்
பொறாஅ முறைசெய் பொருவில் ஞமன்கீழ்
அறவுண்ணும் ஆற்றவு நின்று. 27
அறம் செய்ய மறவேல்
முற்செய் வினையின் பயன்துய்த்து உலந்தால்
பிற்செய் வினையின் பின் போகலால் - நற்செய்கை
ஆற்றும் துணையும் அறமறவேல் நன்னெஞ்சே
கூற்றங் குழல் பிரியாமுன். 28
இயல்வது கரவேல்
திரையவித்து நீராடலாகா உரைப்பார்
உரையவித்தொன்றும் சொல் இல்லை - அரைசராய்ச்
செய்தும் அறமெனினும் ஆகாதுளவரையால்
செய்வதற்கே ஆகுந்திரு. 29
மூடனுக்கு நீதி கூறாதே
கல்லா ஒருவனைக் காரணங் காட்டினும்
இல்லை மற்றொன்றும் அறன் உணர்தல் - நல்லாய்
நறுசெய் நிறைய முகப்பினும் மூழை
பெறுமோ சுவையுணருமாறு. 30
|