யோகம் என்றால் என்ன?
யோகம் என்ற சொல் 'யுஜ்' என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே
பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு "ஒருங்கிணைத்தல்" அல்லது "எல்லாவற்றையும்
எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்" என்றும் பொருள்
கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு
நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம்
தமிழில் தவம் அல்லது ¦cஜபம் எனப்படும். சிவபெருமானுக்கு யோகி என்று
மற்றொரு பெயரும் உண்டு. எனவே யோகத்தின் தலைவனாகவும், பிறப்பிடமாகவும்
சிவபெருமானைக் குறிப்பிடலாம். சிவபெருமான் ஆதியில் மகேந்திர மலையில்
தமிழ்நாட்டு முனிவர்கள் நால்வருக்கு ஒரு மரத்தின் கீழ் இருந்து அறம்
உரைத்தார் என்று தேவாரத்திலும் திருவாசகத்திலும் நன்கு எடுத்துக்
காட்டப் பெற்றுள்ளது. சிவபெருமான் இந்த நான்கு முனிவர்களுக்கு காட்சி
அளித்தது. தட்சிணாமூர்த்தம் என்று கூறப்படும். அந்த தட்சிணாமூர்த்தம்
ஆறில் சிவபிரான் ஞானதட்சிணாமூர்த்தியாகவும், யோக
தட்சிணாமூர்த்தியாகவும் காட்சி அளித்துள்ளார். யோக தீட்சை என்பது குரு
யோக மார்க்கத்தால் சீடனது உடலுள் பிரவேசித்து அவனது ஆன்மாவைக்
கிரகித்து சிவன் திருவடியில் சேர்ப்பிக்கும் தீட்சை வகையாகும்.
அறிவியல் கலை
யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர்
அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்திபெற்ற அறிஞர்கள்
இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை
என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம்.
யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும்.
யோகக் கலை
யோகம் பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாதது. யோகப் பயிற்சிகளில்
யோகாசனம் முக்கியமானது. யோகம் ஒரு கலை கல்வி பயில்வதற்கு எழுத்து
எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு
யோகாசனம் பயில்வது என்று கூறினால் அது மிகையாகாது.
சிவயோகம்
இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பேரும் கலை. இக்கலை இன்று
சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப்
பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு
உபதேசித்துக் கொடுத்து கலை என்பதும் தொ¢ந்தே. உலகிலே முதன் முதலாக
யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிநெறியாளர்களே.
பாதார விந்தத்தை அடைதல்
சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்து பெருமான் தன் இனம்
பிராயத்தில் இந்தியாவிற்கு வந்து இந்த யோகக் கலையைப் பயின்று
சென்றிருக்கலாம் என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.
"தன் அறைகளை (ஐம்பொறிகளை) அடைத்துக்கொண்டு என்னை அந்தரங்கத்தில்
தேடுகிறவன் கண்டடைவான்" என்று அவரது உபதேசமும் மலையில் அவர் 40 நாள்
உண்ணாது உறங்காது யோக நிலையில் அமர்ந்து ஞான நிலையை அடைந்து (சித்தி
பெற்று) அப்பால் அவர் ஆற்றிய மலைப பிரசங்கத்தின் மாண்பும் ஏற்ற
எடுத்துக்காட்டாகும் என்று இயம்புகின்றனர். யோக நிலையைப் பற்றியும்
இறைவனுடைய பாதாரவிந்தத்தை யோகம் மூலம் எளிதில் அடையாளம் என்பதையும்
விளக்கித் தமிழில் சைவ சமய நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
சைவ நூல்கள் யோக நிலைக்குச் சிறப்பான இடத்தை அளித்துள்ளன.
யோக முறை
யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும் உள்ளுறுப்புகள்தான்
யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும்
வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன்
பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்.
யோகப் பயிற்சியின் சிறப்புகள்
தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும்
ஒருவருக்கு உகந்த உடலை உருவாக்குகிறது.
உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன்
பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.
சாதராணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன்
உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.
அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகுவிரைவாக
வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக்காக்கின்ற
சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை,
நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற
அவயவங்களுக்குத் திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.
நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை பு¡¢கிறது. மனதாலும்,
செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப்
பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை
உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.
ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:
ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன் மிகவும்
சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.
முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும்
சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில்
கிடைக்கிறது.
பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க
நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.
மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும்
மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.
தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப்
பொலிவு பெற வைக்கிறது.
உடல் அவயவங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு
இணங்கும் தன்மையின் இருந்திட வழி அமைகிறது.
தோல், நரம்பு, மற்றும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆசனப் பயிற்சிகள்
உரமூட்டுகின்றன.
"மூளைக்குப் போதிய பிராணவாயு கிடைக்காவிட்டால் படபடப்பும் பதைபதைப்பு
உணர்வும் எழுச்சியும் உண்டாவதோடு உடல் அமைப்பையும் மாற்றி,
செயல்களையும் சின்னாபின்னாப்படுத்துவதுடன் நோயுற்றவராகவும்
ஆக்கிவிடுகிறது." என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இந்தப்
பிராணவாயுவின் பெருமைகள் எல்லாம் நம்முடைய பிராணாயாமம் என்பதில்
அடங்கியுள்ளது. உடலுக்குள்ளே பிராணவாயு என்கிற உயிர்க் காற்றைச்
சேர்த்து வைத்து, பேராண்மைமிக்க சக்தியினைப் பெருக்கும் வழிதான்
பிராணாயாமம் என்றனர்.
- தொடரும்,