பற்களின் பாதுகாப்பு
- Ln. Dr. M.S. சந்திரகுப்தா,
BDS., FCIP., DIM PGDHRM., PGDGC.,
என் பற்கள் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.
தூய வெண்மையாக மாற என்ன செய்யலாம்? பற்களின் இயல்பான நிறத்தைத்
தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
பற்களின் இயல்பான நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
பற்களின் இயல்பான நிறமே இளம்-மஞ்சள்தான்; பலர் நினைப்பது போன்ற தூய
வெள்ளை நிறமல்ல! பற்களின் வளர்ச்சி மற்றும் பற்கூழின் தன்மையைப்
பொறுத்தே அவற்றின் நிறம் அமைகிறது. பற்களை நன்றாக துலக்கி சீராக
வைத்துக்கொண்டால் அவைகளின் இயற்கை நிறத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.
பற்களின் நிறம் மாறுவதற்கான காரணங்கள் என்ன?
அவற்றை சுயமாக நீக்கிக்கொள்ளலாமா? டாக்டா¢டம் போக வேண்டுமா?
பழக்கங்கள், தொழில்கள் நோய்கள், கர்ப்பக் காலத்தில் தாயார் உட்கொண்ட
மருந்து, மாத்திரைகளால் பற்களில் கறை படிவதே ஆகும். இதில் இரண்டு வித
கறைகள் உள்ளன.
வெளிக்கறைகள், உட்புறக் கறைகள்.
வெளிக்கறையை துலக்கிகள் மற்றும் வாய்க்கொப்பளிப்பு மருந்துகள்
மூலமாகவும் சுலபமாக கரைத்துவிடலாம். உட்புறக் கறைகளை நீக்குவதற்கு
சிரமம் இருக்கும் இதற்கு பல் மருத்துவா¢ன் உதவி கட்டாயம் தேவைப்படும்.
பலவிதமான பழக்கங்கள் மற்றும் நோய்களின்
பாதிப்பினால் பற்களின் நிறம் மாறும் என்பது உண்மையா?
உண்மைதான். புகைத்தல் மற்றும் புகையிலைப் பயன்பாடு தவிர, சில
பழக்கங்கள் தானாக வரக்கூடியவை. இவை பற்களில் கறையை உண்டாக்கும் என
யாரும் நினைப்பது இல்லை. இதைப் பற்றி நீங்கள் தொ¢ந்துகொள்ள வேண்டும்
என்பதால் வி¡¢வாகவே கூறுவிடுகிறேன்.
பழக்கங்கள் : புகையிலை போடுவது, புகைப்பது ஆகிய பழக்கத்தால் பற்கள்
கறுப்பு அல்லது காவி கலந்த கறுப்பு நிறமாக மாறி விடுகிறது. இந்த
நிறமாற்றம் பற்களின் மீதும், பற்சிப்பியின் மீதும் பதிந்து
அருவருப்பான தோற்றம் தரும். வாயிலும் நிரந்தரமான துர்நாற்றம் வீசும்.
தொழில்கள் : சில குறிப்பிட்ட தொழில் செய்பவர்கள் தொழிற்கருவியை
பற்களில் கடித்துக்கொள்வதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இதன் காரணமாக
பற்களின் மீது கறைகள் படியும்.
உதாரணமாக, தச்சுத் தொழிலாளர், செப்பு உலோகத்தொழிலாளர், செம்பாலான
இசைக்கருவிகளை இசைப்போர், தையலர்கள் போன்றவர்கள் பெரும்பாலும் தங்கள்
பற்களில் கருவிகளைக் கடித்துக்கொள்வதால் பற்களில் பச்சை நிறக் கறை
இருப்பதைக் கூறலாம்.
மருந்து மாத்திரைகள் : இரும்புச் சத்துள்ள மருந்துகளால் கருப்பு நிறக்
கறையும், மாங்கனீசு கலந்த வாய்க்கொப்பளிப்பு மருந்துகளால் இளங்
கருப்பு கறைகளும், ஆஸ்பி¡¢ன் மற்றும் காசநோய் மாத்திரைகளால் மஞ்சள்
நிறக் கறைகளும், வெள்ளை நைட்ரைட் திரவம் போன்ற மருந்துகளால் பழுப்பு
மற்றும் சிவப்பு நிறமும் தோன்றும். ஈயம் கலந்த பற்பொடியால் மஞ்சள்
நிறக் கறையும், சாம்பல் உமிக்கா¢யைக் கலந்து பல் துலக்கினால் கருப்பு
நிறக்கறையும் தோன்றும்.
நோய்கள் : கிருமிகளால் பற்கூழ் பாதிக்கப்பட்டு அங்குள்ள இரத்தக்
குழாய்கள் சிதைந்து அழுகி இறந்துவிடும் போது பற்களுக்குள்
கரும்பழுப்பு நிறம் ஏற்படுகிறது.
தந்தினிக் குழல்கள் பாதிக்கப்படும்போது பற்குழியில் மாற்றம் ஏற்பட்டு
இரத்தக்குழாய்களும் புரத நார்களும் பெருமளவுக்கு பற்குழியில்
நிரம்பிவிடும். இதனால் பல்லின் உட்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் தொ¢யும்.
ப்ளூரைடு : பற்கள் வளரும் பருவத்தில் ப்ளூரைடு கலந்துள்ள நீரைப்
பருகுவதால் காவி நிறத்தில் உட்கறை உண்டாகிறது.
பாரம்பா¢யம் அல்லது வேறு காரணங்களால் தந்தினி தாறுமாறாக அமைந்து
குழிகள் தோன்றி பற்கூழின் இரத்தக் குழாய்கள் சிதைவதால் பல் மஞ்சள்,
சாம்பல் அல்லது நீல நிறமாக காணப்படும்.
பாரம்பா¢யக் குறைகளால் பற்சிப்பியில் வளர்ச்சியின்மை, பல் முளைத்த
பிறகு பற்சிப்பி தேய்ந்து பற்கள் செம்பழுப்பு காவி அல்லது மஞ்சள்
நிறத்தில் செம்புள்ளிகள் தோன்றும்.
தொடரும்...