menu






 ஆரோக்கியம >> சர்க்கரை நோயின் அறிகுறிகள்

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

பெயா¢ல் தான் இனிப்பே தவிர சர்க்கரை நோய் பற்றிய உண்மைகளும் அனுபவங்களும் கசப்பானவையாகத்தான் உள்ளன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி இந்தியர்களைச் சர்க்கரை நோய் அதிகம் தாக்குகிறது என்று அறியவந்துள்ளோம்.

இந்தியாவில் ஏறத்தாழ 3 கோடி முதல் 3 1/2 கோடி மக்கள் இதய நோயால் அவதிப்படுவதாகவும், வருங்காலத்தில் மேலும் 3 1/2 கோடி மக்களை இந்நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், நகரங்களில் வசிப்போர்; கிராமங்களில் வசிப்போரை விட அதிகமாக இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகளாகும். உலக சுகாதார அமைப்பும் 2025 வாக்கில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 5 முதல் 5 1/2 கோடியாக இருக்கலாம் என்று கூறுகிறது. ஆகவே, இந்தியர்களாகிய நமக்கு, இந்நோய் பற்றிய விழிப்புணர்ச்சி அதிகமாகவே தேவைப்படுகிறது அல்லவா.

சர்க்கரை நோயின் வகைகளையும் அறிகுறிகளையும் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியம். சர்க்கரை நோயில் டைப் 1, டைப் 2 என்று இருவகை உள்ளன.

டைப் 1 வகையில் காணப்படும் அறிகுறிகள் :

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தீராத தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப் பசி, அதிகம் சாப்பிட்டாலும் எடை குறைதல், எப்போதும் களைப்பும் சோர்வும் தலைச்சுற்றல் சில நேரங்களில் நினைவு இழத்தல்.

இந்த வகை சர்க்கரை நோய் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குவதால் மேலே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் 2 அல்லது 3 தங்கள் குழந்தைகளிடம் காணப்பட்டால் அன்னையர் உடனே காலம் கடத்தாமல் மருத்துவா¢டம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவர் உடனே குழந்தைக்கு இன்சுலின் செலுத்துவார். இதைச் செய்யத் தவறினால் குழந்தை கோமா என்ற நிலைக்குத் தள்ளப்படலாம்.

அதன் பிறகு சிகிச்சை முறைகள் கடுமையாகலாம். ஆகவே, இன்சுலின் ஊசி ஒன்றுதான் டைப் 1 சர்க்கரை நோய்க்குத் தீர்வு.

டைப் 2 வகையில் காணப்படும் அறிகுறிகள் : இவ்வகை சர்க்கரை நோய்க்கு டைப் 1 அறிகுறிகளே மிதமாக இருக்கும். அறிகுறிகள் மிதமாக இருப்பதாலேயே இதனை அலட்சியமாக விட்டு விடக்கூடிய போக்கும் மக்களிடையே காணப்படுகிறது. மேலும் ஆறாத ரணங்கள், ஆறாத தோல் தொற்று அந்தரங்க உறுப்புகளில் காளான் தொற்று பாதங்களில் உணர்ச்சியற்ற தன்மை, எ¡¢ச்சல் உணர்ச்சி ஆகியனவும் டைப் 2 டையாபடீசின் அறிகுறிகளாகும்.

மேலும் அதிக உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், பெற்றோர்க்கு சர்க்கரை நோய் இருத்தல் போன்ற காரணங்களும் இரத்தத்தில் சர்க்கரையை அதிகா¢க்கச் செய்யக்கூடும்.

ஏறத்தாழ 80% மக்கள் இந்நோயினை ஆரம்ப நிலையில் அறிவதில்லை. வேறு ஏதாவது ஒரு நோய்க்குச் சிகிச்சை பெறும்போதோ அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும்பொழுதோதான், சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இதயம், கண்கள், கிட்னி போன்ற முக்கிய பகுதிகளைத் தாக்கி, அமைதியாக அழித்து விடும் இந்தச் சர்க்கரை நோய் என்பதனை உணர்ந்து, 35 வயதைக் கடந்தவர்கள், வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பா¢சோதனை செய்து கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு வரும் சர்க்கரை நோயை வெறும் அறிகுறிகளை வைத்துக்கண்டறிவது கடினம். சில சமயங்களில் அ¡¢ப்பாலோ, சிறுநீர் கழிக்கையில் வலியோ, எ¡¢ச்சலோ இருப்பதாலோ, இந்த வகையான சர்க்கரை நோய் என்று கண்டறியலாம். ஆகவேதான் கர்ப்பிணிகளுக்கு 3 மாதங்களுக்கொருமுறை குழந்தை பிறக்கும் வரை சர்க்கரை நோய்க்கான பா¢சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே சர்க்கரை நோயுள்ள பெண்கள்; திட்டமிட்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்திய பின்னரே கருவுறுதல் வேண்டும். இதனால் குறையுள்ள குழந்தை பிறப்பது தடுக்கப்படும். கர்ப்பிணிகள் தங்கள் சர்க்கரையின் அளவை, அடிக்கடி பா¢சோதித்து, கட்டுக்குள் கொண்டுவராவிடில் 4 கிலோ கிராம் நிறையுள்ள பொ¢ய குழந்தைககள் பிறப்பதற்கும் அக்குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் சர்க்கரை நோய் ஏற்படவும் வழிவகுத்தவர்களாவோம். சர்க்கரை நோய் ஒரு குறைபாடே தவிர கிருமிகளால் ஏற்படும் ஒரு வியாதி அல்ல. ஒரு தடவை இரத்தத்தில் அதிக சர்க்கரை காணப்பட்டால் உணவுக் கட்டுப்பாடு, தேகப் பயிற்சி, மருந்து இவற்றால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்; எப்போதும் போல் இயல்பான வாழ்க்கையை நடத்த முடியும். சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் நீண்ட காலம் வாழவும் முடியும்.

நன்றி : தி ஹிந்து.
                                      தொடரும்...


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்