menu






 ஆரோக்கியம >> சித்த மருத்துவ குறிப்புகள்

சித்த மருத்துவ குறிப்புகள்

ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க : காய்ச்சல் விட்டதும் முதலில் தலைக்கு நீர்விட்டு கொள்பவர்கள் ஓமத்தை அரைத்து தலைக்கு தேய்த்தால் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.

சளி தொல்லை நீங்க : (1) அருகம்புல் சாறு பருகிவர சளிதொல்லை நீங்கும். (2) காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூளைப் போட்டுக் கலக்கினால் நெஞ்சுச் சளி அகலும்.

மூக்கடைப்பு நீங்க : ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்.

சளி மூக்கடைப்பு தீர : கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளிமூக்கடைப்பு குணமாகும்.

கபம் நீங்க : அமுக்கிரால் கிழங்கை பொடிசெய்து தினமும் இரவில் பாலுடன் சேர்த்து சாப்பிட கபம் நீங்கும்.

மார்புசளி நீங்க : ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புசளி குணமாகும்.

மூக்கடைப்பு : கண்டங்கத்தி¡¢ வேர் 40 கிராம், ஆடாதொடை வேர் 40 கிராம், அ¡¢சித் திப்பிலி 50 கிராம், சிதைத்து 2 லிட்டர் நீ¡¢ல் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி. வீதம் தினம் 4 வேளை குடிக்கத் தீரும்.

மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக : மாதுளம் பழச்சாறு, அருகம்புல்சாறு சம அளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.

மூக்கில் உள்ள புண் ஆற : மஞ்சளை சுட்டு கா¢யாக்கி அதனுடன் வேப்ப எண்ணை கலந்து மைய அரைத்து புண்மீது தடவ குணமாகும்.

மூக்குசம்பந்தமான நோய் குணமாக : நாயுறுவி செடி விதைகளை பொடி செய்து உண்டால் மூக்கு சம்பந்தமான நோய் குணமாகும்.

ஆஸ்துமா குணமாக : வில்வ இலை பொடி தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர ஆஸ்துமா நோய் குணமாகும்.

ஆஸ்துமா குணமாக : கண்டங்கத்தி¡¢ பொடி 100 கிராம், சுருள்பட்டை பொடி 100 கிராம், திப்பிலி பொடி 50 கிராம், பெருங்காயம் 10 கிராம் ஒன்றாக கலந்து பாட்டிலில் வைக்கவும். இதை காலை, மாலை 1/2 கரண்டி வெந்நீர் அல்லது பாலில் சாப்பிட்டு வர ஆஸ்துமா தலை வலி, சளி, தும்மல் குணமாகும்.

(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)
                                      தொடரும்..


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்