சித்த மருத்துவ
குறிப்புகள்
அடிக்கடி வரும் மயக்கத்தை நிறுத்த : 5,
6 சீத்தா பழக் கொட்டைகளை பொடியாக்கி, தலைக்குத் தேய்த்துக் குளித்து
வந்தால் பலன் கிடைக்கும்.
இடுப்பு வலி குணமாக : முருங்கைக் கீரையை
இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பையும் கலந்து இடுப்பின் மீது
தடவி சூடுபறக்க தேய்த்தால் இடுப்பு வலி குணமாகும்.
பல் ஈறு வீக்கம் குறைய : பல் வலியின்
காரணமாக ஈறுகளில் வீக்கம் ஏற்படும். இதற்கு கிராம்பு, துளசிச் சாறு,
கற்பூரம் இம்மூன்றையும் சேர்த்து வலிகண்ட ஈறுகளில் தடவ உடனே வீக்கம்
குறையும்.
காசநோய் குணமாக : செம்பருத்திப் பூவை எடுத்து சுத்தம் செய்து மைய
அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர
பூரண குணம் கிடைக்கும்.
பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்க :
வெங்காயச் சாற்றை டூத் பிரஷ்ஷால் தொட்டு பல்விளக்க வேண்டும்.
சிறிது நேரத்திற்கு பிறகு எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பைப் போட்டு
கலக்கி அந்தச் சாற்றில் மீண்டும் பிரஷ்ஷில் தொட்டு பல் துலக்க
வேண்டும். இம்மாதி¡¢ வாரத்திற்கு ஒரு முறை பல் துலக்க பற்கள் கறை
படியாமலும் வெண்மையாகவும் இருக்கும்.
பெண்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்க :
நெல்லிக்காயை எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைய அரைத்து தலையில்
தேய்த்து உலரவைத்து பின்னர் குளித்துவர தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
தலைப்பாரம் குறைய : தும்பைப்பூவை
நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்துவர
தலைப்பாரம் குறையும்.
சொறி, சிறங்கு படை நீங்க :
உருளைக்கிழங்கின் தோலை எடுத்து அதனுடன் மஞ்சள் வைத்து அரைத்து சொறி,
சிறங்கு படை மீது போட குணமாகும்.
பித்தத்தை நீக்க : பித்தம் அதிகம்
உள்ளவர்கள் தினசா¢ வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் தணியும்.
தீராத தலைவலி நீங்க : தும்பைப் பூவின்
இலையை கசக்கி அந்தச் சாறை முகர்ந்தால் தலைவலி உடனே நீங்கும்.
நீ¡¢ழிவு நோய்க்கு : நாவல்பழத்தின் 10
கொட்டைகள் எடுத்து, இடித்து 150 மில்லி நீர்விட்டு சுண்டக் காய்ச்சி
அந்நீரை காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வர நீ¡¢ழிவு குணமாகும்.
ஞாபக சக்தி பெருக : பப்பாளிப் பழத்தை
தினசா¢ சிறு அளவு சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.
உடல் பருக்க : பறித்த பச்சை நிலக்கடலை
நூறு கடலையும் நேந்திரம் வாழைப்பழம் ஒன்றும் ஒரு கப் பாலும் தினசா¢
சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.
உடல் பருமன் குறைய : காரட் தினசா¢
சமையலில் சேர்த்துக்கொள்வதுடன் இரண்டு டம்பளர் மோருடன் இரண்டு
காரட்டையும் போட்டு மைய அரைத்துக்குடித்து ஒரு வர வாரத்தில் இருந்து
உடல் இளைக்க ஆரம்பித்து விடும். போதும் என்ற நிலை வந்தவுடன்
சாப்பிடுவரை நிறுத்திவிட வேண்டும்.
முகம் அழகு பெற : துளசி இலையை கசக்கி
முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து
கழுவினால் முகம் அழகு பெறும்.
வாய் துர்நாற்றம் நீங்க : வாய் நாற்றம்
உள்ளவர்கள் தினசா¢ காலை வெறும் வயிற்றில் 4 டம்ளர் நீரைக்
குடித்துவிட்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சிறிது தண்ணீர்
சேர்த்து வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும்.
தேள் கடி விஷம் குறைய : தேள்
கொட்டிவிட்டால் அந்தக் கடிவாயில் வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி
ஒரு பகுதியை கொட்டிய இடத்தை சுற்றி நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும்.
வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியை தேய்க்க வேண்டும். சிறிது
நேரத்தில் வலி நிற்கும்.
நாவறட்சி நீங்க : நாவறட்சி உள்ளவர்கள்
ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்த நீ¡¢ல் ஒரு மஞ்சளைப் போட்டு
சிறிது நேரம் மஞ்சள் வெந்ததும் அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன்
சிறிது சேர்த்துக் குடிக்க நாவறட்சி நீங்கும்.
கம்பளிப் பூச்சி கடி குணமாக :
கம்பளிப்பூச்சி கடித்துவிட்டால் வெற்றிலையை கம்பளிப்பூச்சி கடித்த
இடத்தில் அழுத்தித் தேய்த்தால் சிறிது நேரத்தில் குணம் கிடைக்கும்.
உதடுகள் சிவப்பாக மாற : புதிதாகச்
செடியில் பறித்த கொத்துமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும்
போது உதட்டில் தடவி வர, உதடு சிவப்பாக மாறும்.
முகப்பருவை போக்க : வீட்டில் உள்ள
சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து முகப்பருவின் மீது தடவ
முகப்பரு மறையும்.
உள்நாக்கு வளர்ச்சி நிற்க (டான்சில்) :
கா¢சலாங்கண்ணி கீரைச் சாறும் பசுவின் நெய்யும் சம அளவு கலந்து
காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி காலை, மாலை
உட்கொண்டால் 20 நாட்களில் பலன் கிடைக்கும். மிகக் குளிர்ச்சியான உணவு
வகைகளை நீக்கவும்.
(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)
தொடரும்..