menu






 ஆரோக்கியம >> சித்த மருத்துவ குறிப்புகள்

சித்த மருத்துவ குறிப்புகள்

21. இருமல், சளியுடன் வரும் இரதத்ததத்தை நிறுத்த: ஆடாதோடா இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.

22. சுவாசகுழாய் அலர்ஜி குணமாக: குங்கும பூவுடன், தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாட்கள் தினசா¢ 2 வேளை உட்கொள்ள குணமாகும்.

23. இருமல் தொண்டைவலி குணமாக: மிளகு, திப்பிலி, சுக்கு சமஅளவு, பொடி 2 கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட இருமல், தொண்டைவலி குணமாகும்.

24. மழைக்காலங்களில் வரும் சளி, இருமல் குணமாக: முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வரை சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.

25. மூச்சு வாங்குதல்: தூதுவளை உண்பதால் குணமாகும்.

26. நெஞ்சு தடுமன் குணமாக: வெற்றிலை சாறு, இஞ்சி சாறு கலந்து கண்ணாடி டம்ளா¢ல் வைத்து தெளிந்த நீரை மட்டும் எடுத்து தேன் சேர்ந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

27. ஜலதோஷம்: மாதுளம்பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.

28. தலைவலி குணமாக: விரலி மஞ்சளை விளக்கெண்ணையில் மூக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உ¡¢ஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

29. வரட்டு இருமல் குணமாக: சுடுக்காய் தோலை சுட்டு ஒரு துண்டை வாயில் அடக்கினால் வறட்டு இருமல் குணமாகும்.

30. மூச்சுத்திணறல்: தேள் கொடுக்குச் செடியின் காயை நசுக்கி துளசி இலையைச் சேர்த்து கஷயாமாக்கி தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத் திணறல் குணமாகும்.

31. வாந்தி நிறுத்த: வேப்பம் பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

32. ஒற்றைத் தலைவலி: துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை இலைகளை கைப்பிடி அளவு சேகா¢த்து கச்கிப் பிழிந்து எந்தப் பக்கம் தலை வலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் விட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் ஒற்றைத் தலைவலி அகலும்.

33. இருமல் குணமாக: காய்ச்சிய பசுவின் பாலில் சிறிதளவு மிளகுத் தூளைப் போட்டுக் கலந்து குடித்தால் இருமல் நிற்கும்.

34. சளி, இருமல், இளைப்பு நோய்கள் வராமல் தடுக்க: நத்தை சூ¡¢ விதைகளை வறுத்து பொடியாக்கி சமஅளவு கல் கண்டு அல்லது பனங்கல் கண்டு சேர்த்து 5 கிராம் வீதம் காலை மாலை சாப்பிட சளி, இருமல் வராமல் தடுக்கலாம்.

35. மார்புசளி நீங்க: ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புசளி குணமாகும்.

36. தலை பாரம் குணமாக: நல்லெண்ணெயில் 10 கருஞ்செம்பைப்பூவும், கஸ்தூ¡¢ மஞ்சள், சாம்பிராணி சேர்த்து இளஞ்சூட்டில் தலையில் வைத்து அரைமணிநேரம் கழித்து குளித்தால் வாரம் 2 முறை தலைபாரம் தீரும்.

37. பித்த வாந்தியை நிறுத்த: வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடள் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

38. சளி தொல்லை தீர: மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.

39. மூக்கில் நீர்வடிதல் குணமாக: ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு, ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க காய்ச்சி இறக்கி வடிக்கட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும்.

40. தொடர் இருமல் குணமாக: கண்டங்கத்தி¡¢ வேரை அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க குணமாகும்.

(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)
                                      தொடரும்...


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்