menu






 ஆரோக்கியம >> இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்
(தத்துவங்களும் செய்முறைகளும்)
- மகா¢ஷி க. அருணாசலம்

நமது உடல் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கென அமைந்தது

உலகிலுள்ள எல்லா உயி¡¢னங்களின் உடம்பைப் போல மனித உடம்பும் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும் தன்மையது. நிலையற்ற தன் இயல்பைக் கண்ட மெய் ஞானியர் சிலரும், சித்தர்கள் பலரும் இதனை இழிவாகவே கருதியுள்ளனர். சைவ சமயக் குறவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் இதனை,

பொத்தை யூன்கவர் புழுப்பொதிந்துளுத்தகம்
பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதி நின்றிடர் கடற்
கழித்தலைப் படுவேனை

என்று பாடுகின்றார். பிறரும் இதனைப் ‘புன்புலால் யாக்கை’ என்றும் காற்றடைத்த பை என்றும் கருதி அலட்சியம் செய்துள்ளனர். திருமூலர் போன்ற யோகியர் கூட ‘உடம்பினை முன்னம்’ இழுக்கென்றிருந்திருக்கின்றனர். அவர்கள் இவ்வுடம்புள்ளே ‘உத்தமன்’ இருப்பதைக் கண்ட பின்னரே உடம்பினை ஓம்பும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்துள்ளனர். ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்பது இவர்கள் கண்ட உண்மை ஊன் உடம்பு ஆலயம், இதனை உ¡¢ய வகையில் போற்றிப் பேண வேண்டுமென்பது இவர்களது உறுதியான முடிவு.

மனித உடல் அற்புதமான இயந்திரம். இது புரதம், மாவுப் பொருள், சர்க்கரை, கொழுப்பு, தாது உப்புக்கள், தண்ணீர் முதலியவைகளாலும் ஓரளவு பலவித வைட்டமின்கள் சேர்க்கையாலும் ஆனது என்று புறக்கருவிகள் கொண்டு ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இந்தப் பொருள்கள் ரசாயன முறையில் கூடுவதாலேயே உயிரும் தோன்றுகிறது. அதற்கு தனியே இருப்புக் கிடையாது என்பது இவர்களது கூற்று. மெய்ஞானியர்களோ இதற்கு மாறாக இப்பொருள்களைக் கூட்டுவதே உயிர்தான் இவ்வுயிரைப் பலரும் பல பெயா¢ட்டு அழைக்கின்றனர். ஜீவன் என்றும், ஆத்மா என்றும், பிராணசக்தி என்றும் பலர் பலவாறாகக் கூறுகின்றனர். உடல் பஞ்ச பூதங்களாலானது என்பது இவர்கள் கண்டது பஞ்சபூதங்களே புரதம், சர்க்கரைப்பொருள், மாவுப் பொருள், கொழுப்பு, தாதுப்பொருள், வைட்டமின் முதலியவையாக உருவெடுத்துள்ளன. இப்பொருட்கள் எல்லாம் சேர்ந்து 30 சதவிகிதம்தான். உடம்பின் எடையில் எஞ்சிய எழுபது சதவிகிதமும் தண்ணீர் இது மட்டுமல்லாமல் காற்றும் ஆகாயமும் மனித யாக்கையை பிணைத்து வைத்து இயக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

திருவள்ளுவர் போன்றவர்கள் வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள். பஞ்சபூதங்களைத்தான் இவர்கள் முக்கூறிட்டுக் கூறுகின்றனர். ஆகாயமும் காற்றும் சேர்ந்து வாதமாகவும், சூடு, பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும், கபமாகவும் பெயா¢டப்படுகின்றன. ஒன்றை ஐந்தாகவும், மூன்றாகவும் பகுத்துப் பேசுவது நமது மரபு. தத்துவங்களை முப்பத்தாறாகவும், தொண்ணூற்றாறாகவும் பேசுவதும் உண்டு. வி¡¢தலும், சுருங்குதலும் வசதி கருதியேயாகும்.

உண்மை என்னவென்றால் நுண்மையிலும் நுண்மையான ஒன்றாகிய இம்முதற்பொருளின் தன்மை அல்லது குணம். அறிவும் ஆனந்தமும் உடையது என்று பருமையிலிருந்து உண்மைக்கு ஆழ்ந்த தியானத்தின் மூலம் சென்ற சித்தர்கள் கண்டு கூறுகின்றனர்.

இந்நுண் பொருளே தனது ஆற்றலினால் அருவப் பொருளாகவும், அருவுருவப் பொருளாகவும், உருவம் தாங்கிய பருப்பொருட்களாகவும் மலர்ந்துள்ளது. இதனைத் திருமூலர் திருமந்திரப் பாடல் ஒன்றில் தெளிவாக விளக்குகின்றார்.
'ஒன்றவன்தானே, ரண்டவன் இன்னருள்
மூன்றுள் நின்றனன், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு வி¡¢ந்தனன், ஏழு உண்பர்ச்
சென்றனன், தானிருந்தான் உணர்ந்து எட்டேன்’
இவ்வாறு மூலப்பொருளாகிய அவ்வொன்றே பலவாக உருவெடுத்துள்ளது.

இரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, ரசம் முதலியவற்றின் கூட்டால் ஆனது இவ்வுடம்பு என்பது சாதாரண மக்களும் பார்த்துத் தொ¢ந்து கொள்ளக்கூடியது. இதனையே துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்ற அறுசுவைகளின் சேர்க்கையாலும் உண்டாவது எனலாம். துவர்ப்பும் புளிப்பும் வாதம்; உப்பும் கசப்பும் பித்தம்; இனிப்பும் காரமும் கபம் என முப்பொருளாகப் பி¡¢க்கலாம். இப்படி பி¡¢த்தறிதல் உடல் ஓம்பலுக்கு உதவியாக இருக்கும்.

இந்த உடம்பு தன்னிறைவுடையது; தானியங்கி. இதனுள் நாம் உணவுப்பண்டங்களைப் போட்டால், அவற்றை உயிர் பண்டங்களாக்கி, உடல் வளர்ச்சிக்கும் வேலையால் உண்டாகும், குறைவை நிரப்புவதற்கும் உடல் தானே பயன்படுத்திக் கொள்கின்றது.

உடல் ஒரு அற்புத இயந்திரம். இதனைப் பார்த்தே பிற இயந்திரங்களும் ஆக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையாகாது. இது தனக்கு வேண்டிய பொருள்களைத்தானே உண்டாக்கிக் கொள்ளும் ஒரு பொ¢ய பாக்டரி. இதில் எத்தனையோ பி¡¢வுகள் இயங்குகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றுவதை எண்ணி எண்ணி வியப்பிலாழ்கின்றனர் அறிஞர்.

பஞ்சபூதங்கள் அல்லது வாத, பித்த, கபம் என்னும் முப்பொருள்களும் சா¢யான அளவில் இருப்பதே ஆரோக்கியநிலை. இதில் ஏதாவதொன்று மிகுதியாகவோ, குறைவாகவோ இருப்பது நோயின் அறிகுறி. இதனைத்தான் திருவள்ளுவர் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்கின்றனர். இம்மூன்றின் சமநிலை தவறியபோது உடம்புக்குத் துன்பம் உண்டாகும். மிகுதியானதைக் குறைப்பதும் குறைவை நிறைப்பதும் ஆரோக்கியத்திற்கு வழிகோலும்.

அற்புதமான தானியங்கியாகிய இவ்வுடலில் சமநிலை ஏன் தவறுகின்றது? மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் சமநிலை தவற இடமிருக்காது. ஆனால் பெரும்பாலோர் இயற்கைக்கு முரணாக வாழ்கின்றனர். எனவே நோயின் பெருக்கம். சூ¡¢யனுடன் எழுந்து வேலைகளைக் கவனித்துப் பின் சூ¡¢யன் மறையும் போது ஓய்வு கொள்வது இயற்கை வாழ்வு. நல்ல காற்றோட்டம் இல்லாததும் இயற்கை ஒளியும் இல்லாததுமான செயற்கைச் சூழலில் நமது வேலைகள் நடக்கின்றன. நமது நடை, உடை, பாவனைகளும் இயற்கை அன்னையிடமிருந்து நம்மைப் பி¡¢த்து வைப்பனவாகவே உள்ளன. எனவே போதுமான ஆகாயக்கூறு நமது உடலில் இல்லாதபோது வலியும், துன்பமும் ஏற்படுவது இயல்பே.

நமது உணவுப் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் செயற்கை மயமாக ஆகியுள்ளது. தேவையைக் கருதியில்லாமல் நாவின் சுவை கருதிச் சாப்பிடுகின்றோம். பசித்துப் புசிப்பதில்லை. காலம் கருதிச் சாப்பிடுகின்றோம். எந்த உணவு எந்தக் குறைவை நிறைவு செய்யும் என்ற அறிவும் நம்மில் மிகப்பெரும்பாலோருக்கு இல்லை. இயற்கை உணவின் இடத்தை செயற்கை உணவு பிடித்துக்கொண்டுள்ளது. பல தடவைகள் உண்கின்றோம். அவசர அவசரமாக உண்கின்றோம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. புதிய செயற்கைப் பானங்கள் பல பழக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றால் உடம்புக்கு வேண்டாத அளவு சிலவகை உணவுகள் சேர்ந்து விடுகின்றது. வேறு சிலவகை இல்லாது போகின்றன. பயன் நோய் நிலை. இதனை நீக்க மருத்துவர்களையும் மருந்துகளையும் நாடுகின்றோம். நம்மீது கருணையால் திருவள்ளுவர் நோயின்றி வாழ நமக்கு ஒரு எளிய வழி காட்டுகின்றார்.

‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்’.

பசித்துப் புசித்தலும் அற்றதறிந்து அருந்துதலும் இயற்கை வழி இயற்கையுடன் இயைந்து வாழவேண்டும் என்பது மருந்தில்லா மருத்துவமாகிய இயற்கை மருத்துவ தத்துவங்களில் அடிப்படையானது. இதனை அறிந்து கடைப்பிடித்தால் ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

உடலில் பஞ்சபூதங்களின் சேர்க்கை அதனதன் விகிதாச்சாரப்படி சமநிலையில் இருக்கும்போது நமது உடம்பு இருப்பதே நமக்குத் தொ¢யாது. சமநிலை தவறும்போதுதான் கையோ, காலோ, மூக்கோ, மார்போ இருப்பது நமக்குத் தோன்றுகிறது. இது ஆரோக்கியம் குறைந்த நிலை. ஆரோக்கியமாக இருக்கும் மனிதன் எப்போதும் ஆனந்தமாக இருப்பான். இதைத்தான் அன்றாட வாழ்க்கையில் நாம் இயற்கை விதிகளுக்கு முரணான பழக்கவழக்கங்களிலும், செயல்களிலும், சிந்தனைகளிலும் ஈடுபடுகின்றோம். இதனால் துன்பம் ஏற்படுகின்றது. இக்கோணல் வழியிலிருந்து திரும்பி நேர்மையான இயற்கை வழியில் சிக்கலற்ற எளிமையான பாதையில் செல்லும் இயற்கை வாழ்வின் ரகசியத்தைக் காட்டுவதே இயற்கை மருத்துவத்தின் குறிக்கோளாகும்.

ஆரோக்கிய வாழ்க்கை எது?

ஒருவர் மற்றொருவரைக் காணும்பொழுது ‘நலமா?’ என்று கேட்கின்றோம். அவரும் நலமே என்று பதில் அளிக்கிறார். தன் பொருள் என்ன? மனிதனுக்கு பருஉடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்று உடல்கள் இருக்கின்றன. நமது புறக்கண்ணிற்குத் தோன்றுவது பருஉடல் ஒன்றேதான். எனினும் இப்பரு உடலின் உள்ளும் புறமுமாக மற்ற இரு உடல்களும் சுரந்தும் மறைந்தும் இருக்கின்றன என்பது சிந்திப்பவர்களுக்கு இலகுவில் புலப்படும் இந்த மூன்று உடல்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி, ஒரேவழி உராய்தலின்றி இயங்குவதிலே நலவாழ்வு அமைந்துள்ளது.

நல்வாழ்வை ஆரோக்கியம் என்றும் சுகம் என்றும் கூறுகின்றோம். ஆரோக்கியம் தான் ஆக்க வாழ்விற்கு அடிப்படையானது. நலமற்ற விவசாயி தன்கு வேறு எத்தனை வசதிகளிருப்பினும் விளைவைப் பெருக்க முடியாது. எத்தனை நவீன இயந்திரங்கள் இருந்தபோதிலும் நலமில்லாத உழைப்பாளியால் தொழில் துறையில் நுகர்வுப் பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியாது. விவசாயத் துறையிலும், தொழில் துறையிலும் வளர்ச்சி இருந்தபோதிலும் நலம் இல்லையேல் நம்மால் வாழ்க்கை இன்பங்களை அனுபவிப்பது இயலாததாகும். குடும்ப சமூக வாழ்க்கைகளையும் கூட செவ்வனே நடத்த முடியாது.

பொதுவாக, நோயின்மையே ஆரோக்கியம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் ஆரோக்கியத்திற்கு மூன்று பக்கங்கள் இருக்கின்றன. ஒரு பொருளுக்கு அகலம், நீளம், உயரம் என்ற மூன்று பக்கங்கள் இருப்பது போல ஆரோக்கியத்திற்கு உடல், மனம், சமூகம் என்ற மூன்று பக்கங்கள் உண்டு. உடற்குறைமனதைப் பாதிக்கும். மன நிலையும் உடலைப் பாதிக்கவே செய்யும். சமூகச்சூழல் ரண்டையும் பாதிக்கும். இம்மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதுபோலவே ஆன்ம உணர்வும், உடலையும், மனதையும் மாற்றவல்லது.

மனிதர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க எண்ணி அரசுகள் மருந்தகங்களைப் பெரும் செலவில் நடத்துகின்றன. ஆனால் மனக்குறைவின் காரணமாகவும், சமூகச் சூழலின் போக்குகளாலும் மனிதனுக்கு சுகக் குறைவு ஏற்படுகிறது. சுகக்குறைவை நோயென நினைத்து ஒருவன் மருந்தகங்களுக்குச் சென்றால் பல பா¢சோதனைகளுக்குப் பின்னால் உடலும், உடலுறுப்புகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவே டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் பாவம்! அவன் என்ன செய்வான்? சோர்வும், பிணிநிலையும் அவனை வருத்துகின்றன. எல்லாம் சா¢யாய் இருக்கிறது. ஆனால் உடலால் உழைக்க முடியவில்லையே என்று வருந்துகின்றான். நவீன முறைகளில் இதனை மனநோய் என்று சொல்கின்றனர். சில சமயங்களில் இந்த மனநோய் உடலையும் சமூக வாழ்வையும் கூடப் பாதிக்கும். மனதிலே ஆரம்பித்தது இருதயநோயாக மாறுகிறது. மனநோய் நகர வாழ்வில் நாம் நாள்தோறும் காணும் உண்மை ஏதாவது ஒரு காரணத்தால் கோபம் உண்டாகிறது. இது மனதிலேதான் ஆரம்பிக்கிறது. முகம் சிவப்பதும், நாடி நரம்புகள் துடிதுடிப்பதும், நிலை தடுமாறி தாறுமாறாகப் பேசுவதும் கோபத்தின் விளைவுகளாகும். அது இதற்கு மேலும் சென்று எதி¡¢ல் உள்ளவர்களைக் கையிற் கிடைத்ததைக் கொண்டு அடித்து விபா£தமாகக் கொலையில் முடிவதைக்கூட நாம் கேட்டுள்ளோம். கோபத்தில் பித்தநீர் அமிலத்தன்மை அடைந்து உடல் அழற்சியினை ஏற்படுத்துகின்றது. அதனால் ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

திடீரென ஏற்படும் பயம், சிலசமயங்களில் இதயத் துடிப்பை நிறுத்தும் பயத்தால் உடம்பு நடுக்குறும். உணர்ச்சி மிகும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல்கள் ஏற்படும். குருதியில் சர்க்கரையின் அளவுமிகுந்து ஏற்கனவே நீரழிவு நோயுள்ளவர்களாயிருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். பயத்தால் வயிற்றோட்டம் உண்டாகலாம். சிறுவர்கள் பயமுறுத்தலுக்கு ஆளாகும்போது நடுநடுங்கி, நரம்பு தளர்ந்து சிறுநீர் கழிக்கின்றனர். எதிர்மறையான வெறுப்பு, திகைப்பு, பயம் போன்றவை உடலை உலரச்செய்து, குருதி குன்றி பலத்தை போலவே அன்பு, ஆதரவு, நம்பிக்கை, உற்சாகம் போன்ற நல்லுணர்வுகள் உடலை வளர்த்து இன்ப வாழ்வைக் கொடுக்கும்.

சுகம் பிறரால் கொடுபடக்கூடியதல்ல. அதனை நாமேதான் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். இதற்கு வேண்டியவை எல்லாம் சுயஅறிவும், சா¢யான வழி நடத்தலுமேயாகும். தன்னுடைய சூழலுடன் இணைந்து வாழும் ஒருவன் எப்பொழுதுமே மகிழ்ச்சியுடனும், நலமுடனும் இருக்க முடியும். மாறிவரும் சமூக வாழ்வு மக்களின் உடல், மனவாழ்வினைப் பாதிப்பதைப் போலவே மக்களின் உடல் மனவாழ்வு சூழலையும் பாதிக்கும் இன்றைய மாறிவரும் தொழில் நுணுக்க வளர்ச்சி தனி வாழ்வையும், இல்வாழ்க்கையையும் பொ¢ய அளவில் மாற்றி உள்ளது. இயந்திரங்களால் கடின உழைப்பை நீக்கிக்கொள்ள வசதியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பலர் பார்த்தையே பார்த்தும், செய்ததையே செய்தும் சலிப்படைந்து போயிருக்கிறார்கள். கூடிவிளையாடும் ஆடல், பாடல்களும், கூத்துகளும், திருவிழாக்களும் சிலரது வாழ்வில் புத்துணர்வு அளித்து மகிழ்ச்சியூட்டுகின்றனவாயினும், நவீன வாழ்க்கை முறை எதிர்பாராத புத்தம் புதிய நோய்நொடிகளையும் உண்டு பண்ணி மனிதனை வேண்டாத பழக்கவழக்கங்களுக்கு ஆளாகியுள்ளன.

நலவாழ்வைப் பாதிப்பவைகளை 1. பரம்பரை, 2. சூழ்நிலை, 3. தனியாள் என்று மூன்று விதமாகப் பி¡¢க்கலாம். பரம்பரையிலிருந்து பெறுகிற நோய்நொடிகள், எண்ணப் போக்குகள் முதலியன உடலைப் பாதிக்கும் சூழ்நிலையும் மனித வாழ்வைப் பாதிக்கிறது. கெட்ட காற்று, கெட்ட தண்ணீர் போன்றவை இன்றைய நிலையில் மனிதனுடைய ஆரோக்கியத்தைப் பாதிப்பதில் முக்கிய இடம் பெறுகின்றன. தனிப்பட்டவர்களும், தங்களுடைய வேண்டாத பழக்க வழக்கங்களால் தமக்கும் சமூகத்திலுள்ள மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பவர்களாக மாறுகின்றனர். இதைப்போலவே நலவாழ்வை நிர்ணயிப்பவைகளையும் மனநிலை, ஆன்மநிலை, உடல்நிலை என்று முக்கூறாகப் பி¡¢க்கலாம். இம்மூன்று நிலைகளையும் செம்மைப்படுத்துவது கல்வி, கேள்விகளேயாகும்.

தொடரும்....


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்