menu






 ஆரோக்கியம >> தீவிர நோயின் ஐந்து நிலைகள்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்

'நோய் ஒன்றே; பா¢காரமும் ஒன்றே' இது இயற்கை மருத்துவத்தின் ஒரு பொதுக்கோட்பாடு நோய்க்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். பொருந்தா உணவு, மாறான பழக்கவழக்கங்கள், தவறான சிந்தனைப் போக்கு இவை போன்ற இன்னும் பிற காரணங்களால் நோய் ஏற்படலாம். மேற்கூறிய பல காரணங்களால் உடலில் வேண்டாத பொருள்கள் சேருகின்றன. அவை காலாகாலத்தில் வெளியேறி விட்டால் சிக்கல் இல்லை. பல சமயங்களில் வேண்டாத அந்நியப் பொருள்கள் தேங்கி நிற்கின்றன. காலம் கடந்து இவை வெளியேற முயலும் போது வலியோ, வேறு வித சங்கடங்களோ ஏற்படுகின்றன. அவற்றை நோய் என்கிறோம்.

வளர்சிதை மாற்றம் சதா உடம்பில் நடந்து கொண்டிருக்கிறது. திசுக்களிலுள்ள உயிரணுக்கள் சிதைந்து, மடிந்து இரத்தத்தில் கலக்கின்றன. சிலசமயம் அடிபட்டதாலோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ இரத்தம் உறையலாம். உறைந்த இரத்தம் சிதைவுண்டு சிறுசிறு துண்டுக் கட்டிகளாக இரத்தப் பிவாகத்தில் கலக்கின்றன. இவை ஏதாவது ஓ¡¢டத்தில் தேங்கி நின்று தாராளனமான இரத்த ஓட்டத்திற்க்கும், பிராணசக்தி இயக்கத்திற்கும் தடையாயிருக்கின்றன. சில சமயம் விபத்துக்கள் ஏற்படும் போது எலும்புகள் உடைந்து அதன் துணுக்குகளும் இரத்தத்தோடு கலந்து நின்று தடை செய்யலாம். சுவாசத்தோடு போகும் கடினமான தூசு தும்புகள் கூட உடம்பின் உள்ளே சென்று இருக்கலாம். இரும்புத் தூசுக்கள், மரத் துணுக்குகள் உடலுள் செல்வதாலும் இயக்கத்திற்குத் தடை ஏற்படலாம் ஒட்டுண்ணிகள், சின்னஞ்சிறு உயிர்ப் பிராணிகள் உட்செல்வதாலும் இது நோ¢டலாம். குருதி ஓட்டமோ பிராண இயக்கமோ தடைபடும்பொழுது அவ்வப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதனால் சூடு அதிகா¢க்கலாம். இரத்தக் கொதிப்பால் சில உறுப்புகள், அழற்சி அடையலாம்.

அந்நியப் பொருள்கள் உடலில் தேங்கி நிற்கும்போது நோய் உடனடியாகத் தோன்றுவதில்லை. நோய்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறுகின்றன. இது முதல்நிலை இதனை நோய் நுண்மப் பெருக்கநிலை என்கின்றனர். ஆங்கிலத்தில் In-cubation state என்று சொல்வார்கள். இந்நிகழ்ச்சி சில நிமிஷங்களிலோ அல்லது நாட்களிலோ நடைபெறலாம். சிற்சில சமயங்களில் இது வாரம், மாதம், வருடம் என்றும் நீளலாம் அந்நியப் பொருள்கள் பெருகி உடலின் சிற்சில பாகங்களில் அல்லது உறுப்புக்களில் வீக்கம் ஏற்படுத்துகின்றன. உடலில் வேலையில் தேக்கமோ, ஆபத்தோ ஏற்படும் சமயம் உயிர் ஆற்றல்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி நோய்க்குக் காரணமாக நுண்மங்களோடு போ¡¢டுகின்றன. அந்த இரண்டாம் கட்டம் 'தீங்கு பெருக்குதல் நிலை' எனப்படுகிறது. இதில் அந்நியப்பொருள் அல்லது நோய் நுண்மங்கள் ஒருபுறமும், உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீர் அணுக்கள் (Phagocytes) மற்றொரு புறமும் அணிவகுத்து போ¡¢டும் நிலையைப் பார்க்கிறோம் இச்சண்டை காலத்தில் படை வீரர்களாகிய நிணநீர் அணுக்கள் பெருக்கத்தால் இரத்தக் கொதிப்பு அதிகா¢க்கிறது நாளங்களிலும். உறுப்புக்கள் சிலவற்றிலும் வீக்கம் அதிகா¢த்து காய்ச்சல் உச்சிலை அடைகிறது. நோயின் அறிகுறிகள் அனைத்து வெளிப்படுகின்றன.

நோய்ப்படைகளுக்கும், சுகப்படைகளுக்கும் இடையே நடக்கும் இந்த யுத்தத்தில் திசுக்கள் தேய்கின்றன. சீழ் அதிகா¢க்கிறது இதிலிருந்து கட்டிகள், புண்கள், போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. நிணநீர் அணுக்கள் நுண்மங்கள், குருதி நாளங்கள் திசுக்கள் நாசமடைகின்றன. மக்களிடையே அண்டத்தில் நடக்கும் யுத்தத்தில் ஏற்படும் நாசங்களைப் போலவே பிண்டத்திலும் அழிவு ஏற்படுகிறது. இந்த மூன்றாம் நிலையை தேய்மான நிலை அல்லது உடற்சிதைவு நிலை என்கின்றனர்.

உடற்சிதைவு நிலையினை நெருக்கடி காலம் எனலாம். இது ஒரு பொ¢ய திரும்புகூட்டம். இதனால் நன்மையும் விளையலாம். தீமையும் விளையலாம். இதில் சுகம் விளைவிக்கும் சக்திகளுக்கு உதவுகிற மாதி¡¢ சிகிச்சை நடந்தால் இரத்தமும், பிராணசக்தியும் அதிகா¢த்து அந்நிய விஷப் பொருள்களும் வெளியேற்றப்படும் யுத்தத்தில் விளைந்த அழிவுப் பொருள்களும் வெளியேற்றப்பட்டு பூரண சுகம் கிடைக்கும். இதனை குறைதல் நிலை (Abatement) எனலாம். இந்நிலையில் நோய்க்கொதிப்பு தணிகிறது. வீக்கம் வற்றும் வேறு நோய்க்குறிகளும் சாந்தமடைகின்றன.

குறைதல் நிலை தனது முழுவேலையையும் செய்த பின்னர் அதாவது உடலில் சேர்ந்திருந்த விஷப்பொருள்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்ட பின் ஆக்கவேலை ஆரம்பமாகிறது. இந்த ஐந்தாவது நிலையை ஆக்கநிலை என்கிறார்கள் தேய்ந்த பகுதிகள் வளர்ந்து முழுமை பெறுகின்றன. உடல் புதுமை பெறுகிறது. அசுத்தங்கள் நீங்கி சுத்தமடைகிறது. தீவிர நோய்களை, மேலே குறித்த ஐந்து நிலைகளையும் பொறுமையோடு கடக்கும்படி செய்வதால் உடல் பழைய நிலையினை விரைவில் அடையும். மாறாக, தவறான சிகிச்சை முறைகளைக் கையாண்டு வீக்கத்தை கடுமையான மருந்துகளால் அமுக்கியோ, தடை செய்தோ வைத்தால் தற்காலிகக் குணம் ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் விஷப்பொருள்கள் உருமாறி உயிரணுக்களுள் நுழைந்து தீராத நாட்பட்ட நோயாக மாறும்.

நோய் நுண்மப் பெருக்க நிலை. தீங்கு பெருக்க நிலை என்ற இரண்டு நிலைகளில் மருந்துகளை உபயோகித்தால் தீவிர நோய் நாட்பட்ட நோயாக வளரும். இதனை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்வோம்.

சளிப்பிடித்தல் தீவிர நோய் இதற்கு மாத்திரைகளை உட்கொண்டோ அல்லது ஊசி போட்டுக்கொண்டோ பலர் குணம் காண்கின்றனர். உண்மையில் நடப்பது என்ன? சளிப்பிடித்தவர்கள் அதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்காமல் அதமாவது. நோய் முதலை நாடாமல் சளியைப் போக்க மருந்து மாத்திரைகளை உட்கொள்கின்றனர். சளிக்குக் காரணமாக உள் அழுக்குகளை வெளியேற்றி இருந்தால் முதல் இரண்டு நிலைகிலேயே எளிதில் பூரண உடல் நலம் பெறலாம். இந்த நோய்க்கு முதற்காரணம் என்ன? பொதுவாகக் காலநிலை மாற்றத்தால் சளி ஏற்படுகிறதென்று கருதுகிறார்கள் அல்லது வாடைக்காற்றில் உலாவி வந்ததால் சளி பிடித்துக் கொண்டது என்று நினைக்கிறார்கள். இதில் ஒரளவுதான் உண்மை இருக்கிறது. உள் உறுப்புக்களான சிறுநீரகங்களோ அல்லது குடலோ நச்சுப் பொருள்கள் உள்ளே தங்குவதால் ஆற்றல் குறைந்து தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்ய முடியாமல் இருக்கின்றன. இதுதான் உண்மை நச்சுப்பொருள்களை உபவாசம் மேற்கொண்டு வெளியேற்றி இருந்தால் சளி தானே குறைந்திருக்கும். நச்சுப் பொருள்கள் தங்கி இருப்பதால் உள்உறுப்புகளைச் சார்ந்திருக்கும் மெல்லிய ஜவ்வுகள் வி¡¢ந்து அதிலுள்ள உயிரணுக்கள் மாய்ந்தோ அல்லது கெட்டுப்போயோ சளியாக மாறுகின்றது. அது கபமாக வெளிப்படும் பொழுது ஆஸ்த்மா, கூஷயம் என்ற வேறு நோய்கள் வந்திருப்பதாக நினைத்து அதற்குப் பா¢காரம் தேடுகிறார்கள் புதிய கிருமிகளால் வந்த நோய்கள் இவை என்று நினைத்து மேலும் ஆற்றல் மிக்க விஷமருந்துகளை நாடுகின்றனர். இப்படித் தொடர் சங்கிலி போல் நோய் வளருகிறது.

தோலிலுள்ள மயிர்க்கால்கள் அழுக்கால் அடைபடும் பொழுது உள் உடம்பில் தோன்றிய வெப்பம் வியர்வையாக வெளி வர முடியாமல் மேலும் சூடு அதிகா¢க்கிறது. மயிர்க்கால்களைத் திறந்து விடுவதற்கான இயற்கை வழிகளைக் கையாளாமல் மருந்து மூலம் சிகிச்சை செய்தால் தோய் வழியாக வர முயன்ற அழுக்குப் பொருள்கள் உள்ளே சென்று நுரையீரல் வழியாகவோ, கல்லீரல் வழியாகவோ வெளிவர முயலுகின்றன. அவ்வுறுப்புகளும் ஏற்கனவே உடலில் தங்கியுள்ள கழிவுப் பொருள்களின் பளுவினாலோ, அல்லது பிராண சக்திக் குறைவினாலோ தத்தம் வேலைகளைச் செய்ய இயலாமல் இருக்கின்றன. இந்நிலையில் தேங்கியுள்ள கழிவுப் பொருள்களும் மறந்து விஷங்களும் சேர்ந்து உடலைப் பலவீனப் படுத்துகின்றன. உறுப்புகள் சீரழியும் நிலை ஏற்படுகிறது. தீவிர நோய், தீராத நாட்பட்ட நோயாகவும் வளருவதில் வியப்பொன்றும் இல்லை. இயற்கை மருத்துவர்கள் நோய் முதல் நாடி அதற்கு இயற்கை வழியில் பா¢காரம் காண்கின்றனர்.

தேய்மான நிலை, குறைதல் நிலை, ஆக்க நிலை போன்ற மூன்று நிலைகளிலும் வளர்ந்து குணமடையும்-நோய்ப்போக்கின் நிலையை அறியாது பயத்தினால் அவசரப்பட்டுத் திடீர் சிகிச்சை முறைகளைக் கையாளும் போது முடிவு விபா£தமாக உள்ளது.

ஐந்து விதமான மலங்கள் அதாவது வியர்வை. அபாணவாயு, சளி, சிறுநீர், மலம் ஆகியவை காவாகாலத்தில் அந்தந்த உறுப்புகள் மூலம் வெளிவந்து கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாழ்க்கைச் சிக்கல் நிறைந்த இக்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் மலம் கழிப்பதையோ சிறுநீர் கழிப்பதையோ ஒத்தி வைக்கிறார்கள். ஆடை ஆபரண அலங்காரங்களால் வியர்வை வெளிவருவது தடைப் படுகின்றது. சோப்பு, பவுடர் முதலியவற்றை உபயோகிப்பதால் தோல் தன் செயலை இழக்கிறது. இவற்றால் மலங்கள் உள்ளே தங்கி உள் உறுப்புக்களை இயங்காது திக்குமுக்காடச் செய்கின்றன. முதல் நிலையில் தீவிரமாக வரும் வீக்கம். ஜுரம் போன்றவைகளை அமுக்கி வைக்கும் சிகிச்சை முறைகளைக் கையாண்டோ, கிருமிநாசினிகள் போன்ற விஷமருந்துகளைக் கொடுத்தோ தீவிர நோயை நாட்பட்ட நோயாக மாற்றி விடுகின்றனர். சாதாரணமாக வந்த ஜுரம் சில நாட்களுக்குப் பிறகு டைபாய்டு அல்லது மலோ¢யா போன்ற விஷக்காய்ச்சலாக வெளி வருகின்றது. இவற்றிற்கும் மருந்து கொடுத்து அவற்றால் முடிவாக உயிர் கொல்லும் பலனையே கண்ட நவீன மருத்துவர்கள் கூட இப்போது இவற்றிற்கு இயற்கை முறைகளைக் ¨யாள ஆரம்பித்திருக்கிறார்கள். உதாரணமாக டைப்பாய்டு காய்ச்சலுக்கு இப்போதெல்லாம் உபவாசமும் தண்ணீருமே சிகிச்சை முறையாகக் கையாளுகின்றனர். இந்த நோய்களுக்கு மருந்து கொடுப்பது ஆபத்தாக முடியுமென்பது இவர்கள் கண்டறிந்த உண்மை. சிறுகச் சிறுக தன்னீர் அருந்துவதும். உபவாசம் இருப்பதும் நோயாளிகளை ஆரோக்கிய நிலைக்குக் கொண்டு வருகிறதென்பதைக் கண்டு கொண்டு அதனையே பெரும்பாலும் கையாளுகின்றனர். இதேபோல் சீரழிக்கும் நோயான கூயத்திற்கு நல்ல காற்றை சுவாசித்து ஏற்ற உணவு மாற்றங்களோடு வாழ்ந்து வந்தால் குணம் காணலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நோய் ஐந்து நிலைகளில் வளர்ந்து, தேய்ந்து முடிவடைகிறது. இக்காலத்தில் எளிய இயற்கை முறைகளைக் கையாண்டால் உடல் பழையபடியும் நலம்பெறும். இந்த உண்மையை அறியாமல் தோன்றி வளரும் நிலைகளைக் கண்டு பயந்து நச்சுமருந்துகளைக் கையாளுவதால் நோய் மேலும் சிக்கலாகி உடல் துன்பத்தை அதிகா¢க்கிறது. மருந்து முறைகளினால் மேலும், மேலும், பிராணசக்தி குறைவதோடுகூட பணவிரயமும் ஆகிறது. இயற்கை வழியலேயே நோயை நண்பனாகக் கருதி கொஞ்சம் கொஞ்சமாக உடலிலுள்ள பிராணசக்தியை வளர்த்து, உணவு மாற்றத்தாலும் இயற்கையை ஒட்டி வாழ்வதாலும் நோய்நீங்கி ஆரோக்கியம் பெறலாம். ஆரம்ப நிலையில் தீவிரமாக வெளிவரும் நோய்களைக் குணப்படுத்துவது எளிது இந்த உண்மையை அறியாது மருந்துகளை நாடுவதால் டாக்டர்களின் உதவி கொண்டு நோய்களை அதிகப்படுத்திக் கொள்கின்றோம். நோய் ஒன்று தான்; பல அல்ல அதற்கு சிகிச்சையும் ஒன்றுதான் என்ற இந்த அறிவு தெளிவாக வரப்பெற்றால் ஒவ்வொருவரும் தனக்குத் தானே வைத்தியம் செய்துகொண்டு இன்ப வாழ்வு வாழலாம்.


                                  தொடரும்....


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்