menu






 ஆரோக்கியம >> ஏழின் எழில்
ஏழின் எழில்

மனிதனின் ஆயுட்காலம் 150 வருடங்கள் 49, வருடங்களாகப் பி¡¢த்தால் இளமை, வயது, பலன்தரும் கிழப்பருவம் என்ற மூன்று வட்டங்களில் இது அமையும். இடையீட்டு ஒழுங்கில் இப்பருவ நிகழ்ச்சிகளை உடலில் தோன்றும் நோய்களிலும் நாம் காண்கிறோம். தசைகள் வி¡¢ந்து காய்ச்சல் வந்த ஆறாம்நாள் சிறப்பான அறிகுறிகள் தோன்றுகின்றன. அதன் பிறகு ஒவ்வொரு ஏழுநாள் கழித்தும் நோய் முற்றுகிற அல்லது குறைகிற குணங்களை நாம் காணலாம்.

நாட்பட்ட நோய்களிலும் இதே இடையீட்டு ஒழுங்கை அனுபவமுடையவர்கள் கண்டு கொள்ளலாம். இயற்கை மருத்துவ முறைகளைக் கையாளும் நாட்பட்ட நோயாளி ஒழுங்காக இயற்கை வாழ்வு வாழ்ந்தால் ஐந்து வாரங்களில் நல்ல மாறுதல்களைக் காண்பார். ஆறாவது வாரம் நோய் குணமாகும் அறிகுறிகள் தோன்றும். அதாவது உடலில் பிராணசக்தி அதிகா¢த்து அதன் பயனாக வெளித்தள்ளும் இயக்கம் தீவிரமாகும். அழுக்குகள் தீவிரமாக வெளியே வரும் பொழுது அதனோடு கூடவே வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு அறிகுறிகளோ தோன்றும் இதனை இயற்கை மருத்துவர்கள் நோயாளி குணமடைந்து வருவதன் அறிகுறிகள் என்று கண்டு கொள்வார்கள். ஆனால் மருந்து மருத்துவர்களோ, இதனை நோயின் அறிகுறிகள் என்று நினைத்துப் புதிய மருந்துகளை கொடுத்து அழுக்கு வெளியேறுதலைத் தடை செய்வார்கள்.

இயற்கை மருத்துவத்தில் ஏழின் எழில் என்னும் விதியை ஒட்டி ஆறாவது வாரம் தோன்றும் நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ற சிகிச்சை முறைகளைக் கையாளுவார்கள். இயற்கையின் இடையீட்டு ஒழுங்கின் நியதிகளை நன்கு உணராத நோயாளிகள் இது எனக்குப் பல மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்கு முன்னர் வந்த அதே நோய்தான் மறுபடியும் வந்துள்ளது இயற்கை வாழ்வு முறைகள் கொஞ்சம் பயனளித்துள்ளது. ஆனால் இவை நீண்ட பா¢காரமளிக்கவில்லை என்று மனம் தளர்ந்து உடனடியாக உயிர் கொடுக்கும் மருந்து மருத்துவர்களை நாடுகிறார்கள். அவை என்னமோ பழைய வலிகள் தான்; இயற்கை மருத்துவ முறை புது நோய்களை உண்டு பண்ணாது நோயில் திரும்பு கட்டம் என்பது உள்ளே பரம்பரைச் சொத்தாகச் சேர்ந்திருக்கும் வேண்டா நச்சுப்பொருள்களை கண்டமாக (crisis) வெளியேற்றுகிறது. இவை பழைய வலிகளே எனினும் விரைவில் மாறும் நோயாளி இயற்கையை ஒட்டி வாழந்தால் பிராணசக்தி பழையனவற்றை வெளியேற்றி புதிய உடலைக் கட்டியமைக்கும். ஒவ்வொரு கண்த்திற்குப் பின்பும் நோயாளி புதுபலம் பெற்றுத் தேறுவார்.

ஹீலிங் கிரைஸிங் எனப்படும் திரும்புகட்டம் ஒவ்வொரு நோயிலும் அவசியம் தோன்றுமா? என்ற கேள்வி எழலாம். இது நோயாளியின் ஆற்றல் நிலையைப் பொறுத்தது பிராணசக்தி மிகவும் குறைந்து தளர்ந்து போன நிலையில் திரும்புகட்டமே வராமல் போய் மேலும் மேலும் பலகீனப்படுத்தும் அறிகுறிகள் தோன்றி எஞ்சிய நச்சுப்பொருள்களை வெளியேற்ற முடியாமல் இக்கட்டான கண்டங்கள் தோன்றலாம். இவை நோயாளியின் முடிவு காலத்தையே வேகப்படுத்துவதாக இருக்கும் ஆனால் பிராணசக்தியை மிச்சப்படுத்தி இயற்கையையொட்டி வாழ்க்கையை அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினால் வாழ்நாளை நீட்டி சுகம் பெற வாய்ப்பு ஏற்படலாம்.

சில நோயாளிகள் தமக்கு எத்தனை திரும்புகட்டங்கள் (Stages) ஏற்படுமென்று கேட்கின்றனர். ஒரு நோயாளி பூரணநலம் பெற எத்தனை கட்டங்கள் அவசியமோ அத்தனைக்கு மேலோ குறைவாகவோ ஒன்றுகூட ஏற்படாது என்று உறுதியாகச் சொல்லலாம். இயற்கை படிப்படியாக முன்னேறுகிறது. ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதனைப் பூர்த்தி செய்த பின்னர் வேறொன்றை எடுத்துக் கொள்கின்றது.

முதலில் ஜீரண உறுப்புக்களை வலிமையுடையனவாக ஆக்குவதற்கான பணி நடைபெறுகின்றது. ஆரோக்கிய வாழ்வு போதுமான உள்ளிழுத்தலையும் அளவிற்குறையாத வெளியேற்றுதலையும் பொறுத்துள்ளது வயிறும், குடலும் திறமையாக வேலை செய்யும் பொழுதுதான் நிரந்தர ஆரோக்கியம் கிடைக்கும். எந்த சிகிச்சை இந்த உண்மையைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறதோ அது வெற்றியடையாது. இந்த உண்மையினை நோயாளிகள் உணர்ந்து ஒத்துழைப்புக் கொடுக்காவிட்டாலும் தோல்வியே கண்டபலனாக இருக்கும்.

"ஏழு பிராணன்களும், ஏழு சுடர்களும் அவற்றின் எ¡¢பொருளும் ஏழு படையல்களும்எ இதய குகையில் ஒவ்வோர் உயி¡¢லும் ஏழாய் இயங்கும் பிராணன்களின் ஏழு உலகும் அவனிடமிருந்தே எழுகின்றன" (முண்டக உபநிடதம் பாகம் 2, அத்தியாயம்-1, 8ஆம் சுலோகம்)

சிருஷ்டிகர்த்தா¢ன் செயல்கள் கூட ஏழு ஏழாய் வருகின்றன என்பதை முண்டக உபநிடதம் வி¡¢வாக விளக்குகின்றது. இந்த ஏழில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது சமீபத்தில் எனக்கு நோய் வந்தபோது முதுகுத்தண்டு குளியல் எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். தொட்டியில் குறைந்தது 20 நிமிடங்களாவது இருக்க வேண்டுமென்றும் தொ¢விக்கப்பட்டது இது பல நாட்கள் நடந்தன ஏன் இந்த இருபது நிமிடம்? அரைமணியாக ஏன் இருக்கக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் அடிக்கடி தோன்றியது இதயத்தினின்று வெளியேறும் இரத்தம் உடல் முழுவதும் சுற்றி திரும்பவும் இதயத்தை அடைய மூன்று ஏழுதடவை இரத்தம் போய் வந்தால் அந்த நேரத்திற்குள் ஓரளவு சமநிலையும் தூய்மையும் அடையும் என்பது கருத்தாய் இருக்க வேண்டும். 7 x 3 =21 21 நிமிடங்கள் தொட்டியில் இருங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக 20 நிமிடங்கள் என்று சொல்கிறார்கள்: அவ்வளவுதான்.

சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்து கொடுக்கும் போதே இதை ஒரு மண்டலம் சாப்பிடுங்கள் என்கிறார்கள் 7x6=42 நாற்பது அல்லது நாற்பத்தி இரண்டு நாட்கள் ஒரு மண்டலம். இப்படி ஆறு வாரங்கள் மருந்து சாப்பிட்டபின் ஒரு வாரம் ஓய்வு கொடுத்த பின் கவனித்தால் மருந்தின் வெற்றி தோல்வி தொ¢யும்.

மனித உடல் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் வளர்ந்து வருகிறது. உடலின் கட்டுமானத்திற்கு அடித்த யூனிட்டாக இருப்பது உயிரணுக்கள். இவை ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கில் தோன்றி மடிகின்றன. காலையில் தோன்றி மாலையில் மடிவதில்லை தோன்றுபவை வளர்ந்து அதற்கு உ¡¢ய காலம் இருந்து பின் மடிகிறது. அந்த இடத்தைப் புதியவை தோன்றி நிரப்புகின்றன. இந்த மாறுதலைப் பற்றி உடலியல் விஞ்ஞானிகள் இன்றைக்கு இருக்கும் செல்களில் ஒன்றுகூட ஏழாவது ஆண்டில் இருக்காது ஒவ்வொரு ஏழு ஆண்டிலும் மனிதன் புதுமை பெறுகிறான் இதிலும் ஏழின் எழிலைப் பார்க்கலாம். பரு உடலில் சில அங்கங்கள் ஐந்து ஐந்தாக இருக்கின்றன. ஐந்து விரல்கள் ஐந்து பொறிகள், ஐந்து புலன்கள், ஐந்து பிராணன்கள், ஐந்து கோஷங்கள் என்று ஐந்தைந்து இந்த ஐந்தை சூக்கும உடலில் உள்ள இரண்டு தத்துவங்களைச் சேர்த்து ஏழு ஏழாகக் கூறுபவர்களும் உண்டு. இதன் விளக்கங்களை சித்த மருத்துவ நூல்களில் காணலாம்.

இங்கு நாம் தொ¢ந்து கொள்ள வேண்டியது இந்த ஏழில் விதியை உணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் புறக்கணித்து விடக்கூடாது. ஆறு நாள் உணவு உண்டவர்கள் ஏழாம் நாள் உண்ணா நோன்பு ஏற்று வயிற்றுக்கும் பிற ஜீரண உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுப்பவர்கள் நீண்டநாள் நோயின்றி வாழலாம்.


                                  தொடரும்....


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்