நோய் ஒன்றே; பல அல்லஇயற்கை மருத்துவம் உலகில் இப்பொழுது அதிகமாகப்
பரவிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானம் வளர்ந்துள்ள மேலை நாடுகளிலும்
அறிஞர்கள் இதனை வரவேற்று ஆதா¢க்க ஆரம்பித்துள்ளனர். ஆராய்ச்சி
மனப்பான்மையுடைய அலோபதி வைத்தியர்கள் கூட இயற்கை முறைகளைக் கையாள
ஆரம்பித்துள்ளனர். எனினும் இவர்கள் இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக்
கோட்பாடுகளைத் தொ¢ந்து கொள்ளவோ, தொ¢ந்தாலும் அவற்றில் நம்பிக்கை
பெருகும் அளவு தெளிவு பெறவோ முயலுவதில்லை. இதன் விளைவாகத்தான் சித்த,
ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் ஊசிபோடுதல், அலோபதி பொது
மருந்துகள் ஆகியவைகளைக் கையாளுகிறார்கள். அதைப்போலவே இயற்கை
மருத்துவத்தில் உள்ள முறைகளில் சிலவற்றை ஹைட்ரோபதி, குரோமோபதி
பிஸியோதெரபி என்கிற பெயர்களால் ஆங்கில முறை மருத்துவர்களான அலோபதிக்
முறை மருத்துவர்களும் கையாளுகின்றனர். இவற்றால் முழுப்பயன் கிடைப்பது
அ¡¢தேயாகும். இயற்கை மருத்துவத்திற்கு அதன் அடிப்படைத் தத்துவங்களின்
அறிவும் தெளிவும் மிக இன்றியமையாதது எனவே முந்திய அத்தியாயங்களில்
ஒன்றாகிய "நமது உடல் இயற்கையோடு இயைந்து வாழ்வதெற்கென அமைந்தது"
என்பதைப் பற்றிப் பார்த்தோம். இங்கு "நோய் ஒன்றே பல அல்ல" என்னும்
இன்னமொரு அடிப்படை உண்மையைப் பற்றி ஆராய்வோம்.
நோய் ஒன்றுதான் என்றால் யாரும் ஆச்சா¢யப்படுவார்கள். அனுபவத்தில்
தலையிலும், மார்பிலும், வயிற்றிலும் கைகால்களிலும், ஏன் அங்க
அவயவங்கள் அனைத்திலும் வலி வந்து நம்மை வாட்டுவதை யார்தான் அறியார்?
நோய்கள் பல என்பது தொன்றுதொட்டு பாமரர் முதல் அறிஞர் வரை எவரும்
அறிந்த உண்மை இதனை மறுத்து நோய் ஒன்றுதான் என்பதன் பொருள் என்ன?
இயற்கை மருத்துவர்கள் உலகை ஏமாற்ற விரும்புகின்றனரா? அப்படி இல்லை
அவர்கள் கூட காதில் வலி ஏற்பட்டால் அதைக் காதுவலி என்றும் வயிற்று வலி
ஏற்பட்டால் அதனை வயிற்று வலி என்றும் சொல்லுகின்றனர். உள்ளே உள்ள
பொருள்கள் வாய்வழியாக வந்தால் அதை வாந்தி என்றும், மலவாய்வழியாக
வந்தால் அதைக் கிராணி அல்லது பேதி என்றும், துன்பம் தோன்றும் இடம்,
இயல்பு முதலியவற்றை ஒட்டிப் போ¢ட்டழைக்கின்றனர். பெயர்களே நோய்கள்
அல்ல. இயற்கை வாழ்வுக்கு அவ்வழியில் உடலில் தோன்றும் துன்பங்களைப்
போக்கிக் கொள்வதற்கும் நோய்நாடலும் இன்றியமையாதன இதை உணர்ந்த
பொய்யாமொழிப் புலவரும்
"நோய் நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
என்ற மருத்துவர் கடமையினை விளக்குகிறார்.
இயற்கை வாழ்வைப் போற்றும் பலர் நோய் நாடவே அவசியமில்லை என்ற கருத்துக்
கொண்டுள்ளார்கள் வேறுசிலர் இதற்கு மாறாக நோய்நாடலை ஒரு சுவையாகவே
வளர்ந்துள்ளனர். புற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது
வாழ்க்கைத்தொழிலாகவே மருத்துவத்தைக் கொண்டுள்ள நிபுணர்கள் செய்வதையே
தாங்களும் செய்கின்றனர். மிகச் சிலர்தான் வள்ளுவர் சொல்லுகின்ற
நோய்முதல் நாடலை கருத்தில் கொண்டு முதலில் கவனம் செலுத்துகின்றனர்.
இக்காலத்தில் நோய்நாடும் முறை நன்க வளர்ந்துள்ளது. நோய் முதல் நாடும்
முறை போதிய அளவுக்கு வளரவில்லை. இது ஆராய்ச்சிக்கு¡¢ய ஒன்று.
தலைவலி என்றவுடன் அது எந்த இடத்தில் நெற்றியிலா, வல, இடப்பக்க
பொட்டுக்களிலா, முண்மண்டையிலா, பின் மண்டையிலா என்று கேட்டு அறிந்து
அந்த இடத்தில் பற்றுப் போடுகிறவர்கள் பல வலி உண்டாவது அதிகச்
சூட்டினாலா, நரம்புத்துடிப்பினாலா என்று தொ¢ந்து வியர்வை உண்டு
பண்ணும் ஒரு மருந்தைக் கொடுத்து சூட்டைக் குறைத்தோ, நரம்புத்
துடிப்பினைத் தளர்த்தி விடும் உணர்வை மறத்துப்போகச் செய்யும் மயக்க
மருந்துகளைக் கொடுத்தோ, குணப்படுத்துவோரும் உண்டு. ஆனால் இவற்றால்
நோய் நீங்குவதில்லை. மேலும் இவர்கள் நோய் நாடினார்களேயல்லாமல்
நோய்முன் நாடவில்லை. தலைவலி எங்கு என்று கண்டார்கள். ஏன் என்பதைக்
கண்டுபிடிக்கும் பொறுமையில்லாமல் கண்டிருந்தால் இன்னும் சிறிது,
ஆழமாகச் சென்று உண்மையைக் கண்டிருப்பார்கள் உலகில் உள்ள
எல்லாபொருள்களும் அசைகின்றன. ஆண்டவன் கூட ஆடித்தான் தா¢சனம்
கொடுக்கிறான் இவன் கூத்துப்பெருமாள் ஆடும் கடவுள் ஒவ்வொன்றின்
அசைவிற்கும் ஒரு அளவு உண்டு ஒரு வரையறையும் உண்டு கூடினாலோ,
குறைந்தாலோ இசைவு குறைந்து துன்பம் நோ¢டும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று
தொடர்பு கொள்ளும் இசையில் இன்பமும் ஆனந்தமும் பெருங்கெடுக்கின்றது,
குறையும்போது, கூடும்போதோ துன்பமும் நோயும் தோன்றும்.
தலையில் உள்ள நரம்புத் துடிப்பு ஏன் கூடவோ குறையவோ செய்கின்றது?
உடம்பின் தேவைக்கு நாம் உணவு உண்கின்றோம் அதில் வேண்டியதை எடுத்துக்
கொண்டு வேண்டாததை விட்டு விடுகின்றது வேண்டாதது வெளியேற்றப்பட
வேண்டும். இவை ஏதோ ஒரு காரணத்தால் அவ்வப்போது வெளியேற்றப்படாமல் உள்ளே
வயிற்றிலோ, மலக்குடலிலோ தேங்கி நின்றால் அவை அழுகி அல்லது புளித்து
நச்சுக் காற்றாகவும் நச்சுப் பொருள்களாகவும் மாறுகின்றன. இவையும்
வெளியேறவே முயல்கின்றன. இவை வெளியேறும் முயற்சியில் அவ்வப்பகுதியில்
துன்பம் ஏற்படுவதைதான் அந்தந்த இடத்தையும் வெளியேறும் பாங்கினையும்
ஒட்டி வெவ்வேறு பெயர் கொடுக்கின்றோம். எனவே வேண்டாத பொருள்கள்
வெளியேறும் முயற்சிதான் நோய் இது ஒன்றுதான் உண்மை பிறவெல்லாம்
பெயர்களேயாகும். பெயர்கள் பலவாயினும் நோய் ஒன்றுதான் இதனை
ஆங்கிலத்தில் "யூனிட்டி ஆப் டிஸ்ஸிஸஸ்" (Unity of
Diseases)என்கின்றனர். மனித இனம் ஒன்றே எனினும் குலத்தாலும்
நிறத்தாலும். மொழியாலும், தொழிலாலும், இடத்தாலும், கூட்டத்தாலும்
பி¡¢த்து வெவ்வேறு பெயா¢ட்டு அழைக்கின்றனர். எத்தனையோ பேதங்கள்,
இவைகள் கற்பிதம், நிரந்தரமல்ல் நிலையானது ஒன்றே மனித இனம் ஒன்று
என்பதுதான் உண்மை அதுபோலவே நோய்கள் நாலாயிரத்து நானூற்றி நாற்பது
என்று பெயா¢ட்டழைத்த போதிலும் அவைகள் உண்மையில் அனைத்தும் ஒன்றே
நோயின் மூலக்காரணம் ஒன்றுதான் அதைக் கண்டுபிடித்துச் சா¢செய்வதே
நோயற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கான வழியாகும்.
வேண்டாத பொருள் தேங்கி நின்று நச்சுப் பொருள்களாக மாறி வெளியேறும்
போது துன்பம் தருகின்றன. இந்த வெளியேற்றத்தில் ஏற்படும் துன்பமே வலியே
நோய் எனப்படுவது என்றோமே. அப்படியானால் வெளியிலிருந்து உள் நுழையும்
விஷங்களைப் பற்றி என்ன என்று வினவலாம். ஆம் வெறிநாய்க்கடி தேன்
கொட்டுதல், பூச்சிகள் எச்சமிடுதல், வண்டுகள் கடித்தல், தேம்மை
அறியாமலே தவறாக விஷப்பூண்டுகளை உண்பது போன்றவற்றால் வெளியிலிருந்தும்
உடலில் உள்ள உயிரணுக்களுக்குள்ளும் திசுக் கூட்டங்களுக்குள்ளும்
வேண்டாத பொருள்கள் நுழைகின்றன. இந்த நச்சுப் பொருள்களை
வெளியேற்றுவதில் உள்ள துன்பம் பொ¢தாகக் உள்ளதைக் காணலாம். வேறு, வேறு
காரணங்களால் வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு இடங்கள் மூலமாக
உட்சென்றாலும் அவை எல்லாம் வெளியேற்றப்பட வேண்டியவைகளே. அவைகளை அடக்கி
வைக்கவோ, தற்காலியமாக உடலில் உள்ள பொறி புலன்களின் உணர்வைக் குறைத்து
வைக்கவோ முயற்சிப்பதால் நிலைத்த பயன் கிடைக்காது மாறாக அவை நாளடைவில்
வேறு உருத்தில் வெளியேறும். அப்போது துன்பம் அதிகமாகும்.
கடிகாரம் காலம் காட்டுகின்றது. அதில் சிறிய முள் என்றும் பொ¢ய முள்
என்றும் வெவ்வேறு முட்கள் உள்ளன. ஒன்று விநாடியும் மற்றொன்று
நிமிடமும் பி¡¢தொன்று மணியும் காட்டுகின்றன. சில கடிகாரங்களில்
கிழமையும் தேதியும் கூடக் காணலாம். இவற்றிற்கெல்லாம் பின்னணியில்
வெவ்வேறு பல் சக்கரங்கள் உள்ளன. இவற்றிற்கிடையே தொடர்பு உண்டு.
எல்லாவற்றிற்கும் ஆதா¡ரமாக இருப்பது முக்கியச் சுருள்கம்பி (Main
spring) தான் இது நாளுக்கு ஒரு தடவையோ சுரட்டி விடப் பட்டால் ஒரே
சீராண வேகத்தில் காலம் முழுவதும் வி¡¢ந்து பிற சக்கரங்களும்
சுழலுகின்றன. (1) சுருள் கம்பியில் விசை குறைந்து விட்டாலோ (2)
சீதோஷ்ண மாற்றத்தால் கம்பி வி¡¢ந்து சுருங்கி வேகம் மாறுபட்டாலோ (3)
தூசு தும்புகளாலான வெளித்தடைகள் ஏற்பட்டாலோ காலம் காட்டுவதில் தடை
உண்டாகும் அதுபோலவே உடம்பும் பிராணசக்தியால் இயங்குகின்றது.
பிராணசக்தி குறைந்தால் இயக்கம் குறைந்து மலத்தை வெளிப்படுத்தும் வேலை
தடைப்படுகின்றது. இரண்டாவதாக சீதோஷ்ண மாற்றங்களில் கடிகாரம் வேகமாகவோ,
மெதுவாகவோ போகிறமாதி¡¢ வெப்ப மாற்றங்களாலும் சூழ்நிலை மாற்றங்களாலும்
உடலும்; உடலியக்கமும் பாதிக்கப்படும் மூன்றாவதாக கடிகாரத்தில் வெளி
அழுக்குகள் நுழைந்து சக்கரச் சுழற்சிகளைத் தடை செய்வது போல் வெளி
அழுக்குகள் உடம்பினுள் நுழைவதால் உள் உறுப்புகளாகிய இருதயம்,
நுரையீரல், கல்லீரல் மண்ணீரல், சிறுநீர்ப்பி¡¢தி, தசைக்கோள்கள்
முதலியவற்றின் இயக்கம் தடைப்படலாம். இவற்றில் தடை ஏற்படும்பொழுது
வேண்டாத பொருள்களும், நச்சுப்பொருள்களும் உடம்பினுள் தேங்கி நின்று
உடலுக்குத் துன்பம் விளைவிக்கின்றன. இதைப் பு¡¢ந்து கொண்டால் நோய்க்கு
இயற்கைவழி சிகிச்சை செய்வது எளிதாகும். மேலும் உடம்பில் வெவ்வேறு
காரணங்களால் துன்பம் வந்தபோதிலும் மூல உருவம் ஒன்றுதான். அதாவது
வேண்டாதவற்றை வெளியேற்றும் முயற்சி இவ்வேண்டாதலை உணவு முதலிய
பருப்பொருளாக இருக்கலாம் அல்லது, கருத்து கற்பனை எண்ணம் நுண்
பொருளாகவும் இருக்கலாம் நுண்ணுடம்பாகிய மனதில் ஏற்படும் நினைவு,
குறைவுகளும் பருஉடம்பையும் பாதிக்கும். இதனையும் இவ்வொன்றுள் அடக்கிக்
காண்பதும் சிகிச்சைக்கு உதவும்.
ஒரே அடிமரத்தைக் கொண்ட மரத்தில் பல கிளைகளும் இலைகளும் பூக்களும்
காய்கறிகளும் இருப்பினும் மரம் ஒன்றேதான், அதுபோலவே உடலில் தோன்றும்
நோய் ஒன்றதான் என்றாலும் மனித உடம்பின் வெவ்வேறு பாகங்களான தலை,
கழுத்து, மார்பு, வயிறு, இடுப்புக்குழி, கை, கால், முதலியவற்றின்
வாயிலாக வெளி வரும்போது பலவாகத் தோற்றமளிக்கிறது. நாடகங்களில் பல
வேடங்களில் ஒருவர் தா¢க்கின்றார். ஒரே ஆள் சமயத்திற்கு ஏற்றமாதி¡¢
வேடந்தாங்கி நடிக்கின்றார். இருப்பினும் ஒரே ஆள்தான் பலவேஷம் தா¢க்கின்றார்
என்பது அறிவாளிக்களுக்குத் தொ¢யும் சிறு குழந்தைகள், சாதாரண மக்கள்
வெவ்வேறு ஆள் என்று நம்பி விடுகிறார்கள். நாடகத்தைப் பற்றி எவ்வித
நம்பிக்கை கொண்டாலும் தீங்கு விளைவதில்லை. ஆனால் நோயைப்பற்றியோ
முதற்காரணத்தைக் காணாமல் வெளித்தோற்றத்திற்குச் சிகிச்சை அளிப்பது
பூரண குணத்தை கொடுப்பதில்லை. சில சமயங்களில் அரைக்குறைச்
சிகிச்சைகளால் நோய் மேலும் உள்ளத்தள்ளப்பட்டு நாட்பட்ட நோயாகவும
சீரழிக்கும் நோயாகவும் பின்னர்அதிகத் தொந்தரவைக் கொடுக்கலாம் எனவேதான்
"நோய் ஒன்றே பல அல்ல" என்னும் அடிப்படையை இயற்கை மருத்துவ தத்துவம்
வற்புறுத்துகின்றது.
மாலை ஐந்து மணி சுமாருக்கு மலர்ந்த முகத்துடன் நண்பர் சோமு எனது
அறைக்குள் நுழைந்தார் 'ஐயா என் வயிற்று வலி இப்பொழுது பரவாயில்லை
ஆனால் முழங்கால் இரண்டிலும் நல்லவலி இதற்கு ஏதாவது பா¢காரம்
சொல்லுங்கள்"
"சென்ற தடவை சந்தித்த போது நான் வி¡¢வாகச் சொன்னது நினைவிருக்கலாம்
அடிவயிற்றில் தொடர்ந்து காலையிலும், மாலையிலும் மண்பட்டி போட்டு
வருகிறீர்களல்லவா? தொடர்ந்து செய்து வாருங்கள்.
"ஐயா! வயிற்றுவலி என்று நான் சொன்ன பொழுது எனக்கு உள்ள குறைபாடுகளைப்
பற்றியெல்லாம் கேட்டு விசா¡¢த்து நோய் ஒன்றுதான் பல அல்ல என்பதைப்
பற்றிச் சொன்னீர்கள் வயிற்றுக்குப் படுக்கப் போகுமுன்னும் காலை
எழுந்தவுடனும் நல்ல புற்றுமண்ணோ அல்லது களிமண்ணோ எடுத்து வந்து
மண்பட்டி போட்டக்கொள்ள வேண்டுமென்று சொன்னீர்கள் நீங்கள் தொ¢வித்தபடியே
இரண்டு நாட்கள் செய்தேன். வலி மிகவும் குறைந்து விட்டது. ஏன்? வலியே
இல்லையென்று கூட சொல்லலாம் அதன் பின்னால் மண்பட்டி போட்டுக் கொள்வதை
நிறுத்தி விட்டேன். இரண்டு மூன்று நாட்கள் சுகமாக இருந்தது ஆனால்
நேற்றும் இன்றும் தான் முழங்கால் மூட்டுக்களில் நல்ல வலி தயவு செய்து
ஏதாவது பா¢காரம் சொல்லுங்கள் எனக்கு வயிற்றுவலி இல்லை.
இவருக்கு இயற்கை மருத்துவத் தத்துவத்தை எப்படி விளங்க வைப்பது
என்பதைப் பற்றி ஆழ்ந்து யோசித்தேன். வயிற்றுவலி வேறு, முழங்கால் வலி
வேறு என்ற கருத்து நெடுநாள் இவர் மனதில் ஊறிப்போய் இருந்தது. ஒவ்வொரு
நோய்க்கும் வெவ்வேறு மருத்துவம் என்ற எண்ணமும் பொதுவாக இவர்
ஏற்றுக்கொண்டிருந்தது. ஒன்று இதனை இவருக்கு விளங்க வைப்பது அவ்வளவு
எளிதாக எனக்குத் தோன்றவில்லை இருப்பினும் எனது முயற்சியை
விட்டுவிடவில்லை. "ஐயா! குழந்தையாய் இருந்தபொழுது உங்களைச் சோமு
என்றுதான் அழைத்தார்கள் பின்னர் வாலிபரானீர்கள் இப்போது சில
குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறீர்கள் உங்கள் உருவத்தில்
மாறுதல் வேலையில் மாறுதல், செயல்களில் மாறுதல் இருப்பினும் நீங்கள்
சோமுதான் அதுபோல உங்கள் உடம்பில் தோன்றுகிற வலிகளுக்கும்; மூலகாரணம்
ஒன்றே உடம்பினுள் வேண்டாத சில அந்நியப் பொருள்கள் தேங்கியிருக்கின்றன.
அவற்றை வெளியேற்றும் முயற்சி நடக்கும் பொழுது உங்களுக்கு வலியோ
துன்பமோ ஏற்படுகின்றது ஒரு தடவை வயிற்றின் மூலம் அழுக்கு வெளியேற
முயன்று அதனால் உங்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மண்பட்டி
போட்டதினால் குடல்களிலிருந்த உஷ்ணமும் துடிப்பும் குறைந்தன. அந்த
அளவுக்கு அழுக்குகள் வெளியேறியுள்ளன. உங்கள் உடம்பில் காலப் போக்கில்
சேர்ந்துள்ள அழுக்கு பரவலாக உடல்முழுவதும் இருக்கிறது. அதனை நாளடைவில்
கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வெளியேற்ற வேண்டும். பூரண குணமடையக் கொஞ்சம்
நாளாகலாம் எனவேதான் தொடர்ந்து மண்பட்டி போடுங்கள் என்று சொன்னேன். இது
இப்போது உங்களுக்கு விளங்குகிறதா?"
"நீங்கள் சொல்வது விளங்குகிறது வயிற்றுவலி இப்போது இல்லை; முழங்காலில்
தான் வலி இருக்கிறது அதற்கு ஏதாவது பா¢காரம் வேண்டும்.
"அதற்குத்தான் அடிவயிற்றில் தொடர்ந்து மண்பட்டி போட வேண்டுமென்று
சொல்கிறேன். அப்படியே செய்யுங்கள்"
"வயிற்று வலிக்கு மண்பட்டி போடுவதுசா¢ முழங்கால் வலிக்கும்
அடிவயிற்றில் மண்பட்டி போடுங்கள் என்கிறீர்களே! அதுதான் விளங்கவில்லை
மண்ணைக் குழைத்து முழங்காலில் போட்டுக் கொள்ளலாமா?"
"முழங்காலில் போட்டுக் கொள்வதை விட அடிவயிற்றில் மண்பட்டி முறையாகப்
போடுவதன் மூலமாகத்தான் உங்களுக்கு விரைவில் பூரணசுகம் கிடைக்கும் நாம்
சாப்பிடும் உணவு எப்படி உருமாறி இரத்தமாக உடவெல்லாம் பரவுகிறதோ
அதுபோல நமது உடம்புக்கு வேண்டாத அந்நியப் பொருள்கள் நெடுநாள்
தங்கியிருந்தால் அவை உருமாறி உயிரணுக்கள் பலவற்றுள்ளும் போய்ச்
சேர்ந்து விடுகிறது. அவற்றை வெளியேற்றுவதற்குச் சிறந்தவழி.
அடிவயிற்றில் மண்பட்டி போட்டுக் கொள்வதுதான் இதன்மூலம் நல்ல பலக்கழிவு
ஏற்படும் உடலில் மூலாதாரத்தில் உள்ள உஷ்ணம் சமநிலைக்கு வரும். இரத்த
ஓட்டமும் தடையின்றி நடைபெறும். இன்று உங்களுக்கு இருக்கிற முழங்கால்
வலிக்குக் காரணமான வாதம் இரத்த ஓட்டத்தின் மூலம் பல வழிகளிலும்
வெளியேறி இன்னும் சில தினங்களில் வலி குறைந்து விடும் இன்று
முழங்காலில் தோன்றுகிற வலி குறைந்து இடுப்பிலோ முதுகிலோ கூட வரலாம்.
பயப்பட வேண்டிய தேவையில்லை. வயிற்றில் ஏற்படும்பொழுது அதனை வயிற்றுவலி
என்றும் முழங்கால் வழியே வெளியேற முயலும்போது அதை முழங்கால்
வலியென்றும், இடுப்புக்குப் பக்கமாக வந்தால் அதனை இடுப்பு வலி என்றும்
வெவ்வேறு பெயா¢ட்டு அழைக்கின்றனர். அவ்வளவுதான், நோய் ஒன்றே எனவே தான்
நமது மருத்துவமும் ஒன்று' என்று சொல்லி அனுப்பினேன்.
இந்த இயற்கை மருத்துவ தத்துவம் முதலில் பு¡¢ந்து கொள்ளப்பட வேண்டும்.
அந்த எண்ணத்தை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து அது
நம்பிக்கையாக மனத்தில் உறுதிப்பட வேண்டும். இல்லையேல் இந்த
மருத்துவருக்கு ஏதோ மனக்கோளாறு என்று சொல்லி நோயாளிகள் வேறு மருத்துவா¢டம்
போய் விடுவார்கள். மாத்திரைகளை விழுங்குவதினாலோ, ஊசிகள் போட்டுக்
கொள்வதினாலோ தற்கால சாந்தி கிடைப்பதனால் அத்தகைய மருத்துவர்களை நாடியே
உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது தற்காலிக சாந்திக்குப் பின்னால் வரும்
விளைவுகள் தங்கள் மருத்துவத்தினால் வந்தவை என்பதை விட்டுவிட்டு ஏதோ
ஒரு பூச்சியினால் ஏற்பட்ட புது விளைவு என்று வாழ்நாள் முழுவதும்
மருத்துவரை நாடி அவையும் உலகைத் திருத்துவது கடினமேயாயினும்
மெய்யறிவைப் பரப்புவதில் தளர்ந்து விடாது முயல வேண்டும். சத்தியம்
வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தால் இயற்கை மருத்துவம் கூடிய விரைவில்
பலருக்கும் பணிபு¡¢யும் வாய்ப்பினைப் பெறும்.