நோயியல் தத்துவம்
முந்திய அத்தியாயங்களில் பிராண சக்தியின் இயல்பையும் செயலையும் பற்றி
அறிந்தோம். இப்போது நோய் பற்றிய சில உண்மைகளைத் தொ¢ந்து கொண்டால் அது
உதவியாக இருக்கும். முன்னரே நோய் ஒன்றுதான் பல அல்ல என்றும் அது
நமக்கு நண்பனே பகைவன் அல்ல என்பது பற்றியும் ஓரளவு அறிந்து
கொண்டுள்ளோம். இப்போது நோய் வளரும் வழிமுறைகளைப் பற்றி ஆராய்வோம்.
வளரும் வழிமுறைகள்
நோய் என்னும் விதையை உடம்பில் விதைத்து விட்டால் அது மற்றைய விதைகளைப்
போலவே வளர்ந்து செடியாகி மரமாகி, பூத்துக்காய்க்கும். ஆரம்பத்திலேயே
அதனோடு ஒத்துழைத்து அது பூரணமாக வி¡¢ந்து வெளியேற வழிகாட்டிவிட்டால்
உடல் தூய்மையுறும். ஊன் உடல் பொன் உடலாக அருள் உடலாக-ஞான உடலாக
வளர்ந்து மனிதவாழ்க்கை பெற்றதன் பயனெல்லாம் அடைய உதவும் மாறாக, நோய்
வித்து உடலில் விழுந்த உடனேயே அதைக் கண்டு பயந்தவர்கள் மிரண்டு போய்
மருத்துவத்தையே பிழைப்பாகக் கொண்ட சிலா¢டம் செல்கிறார்கள். அவர்கள்
உடனடியாக உடலுக்கு சுகம் கொடுக்கும் பொருட்டு வெளியேறும் மலத்தினை
அதாவது நோய் என்று சொல்வதனை பலம் வாய்ந்த நச்சுப் பொருள்களைக் கொண்டு
உள்ளேயே ஆழ்த்தி அமிழ்த்து விடுகிறார்கள். வெளியேற வேண்டிய வேண்டாப்
பொருள்களும் திசுக்களிடையே சென்று உருமாறி உயிரணுக்குள்ளே நுழைந்து
ஒடுங்கி அடங்கி விடுகின்றன. இச்சமயம் கடலில் அலை ஓய்ந்திருப்பது போல்
உடலும் அமைதி எய்துகிறது. தட்ப-வெட்பம் சமனடைந்து ஒழுங்காகி விட்டமாதி¡¢
ஒரு தோற்றமும் மனநிறைவும் ஏற்படுகிறது. நோயாளி நோய் தீர்ந்துவிட்டது
என்று எண்ணுகிறார். அது தனது உடலுக்குள்ளே அடிமட்டத்திலுள்ள
அšக்களினுள்ளே உருமாறி ஒளிந்து கொண்டிருப்பது இவர்களது கண்களுக்குப்
புலப்படுவதில்லை. வேற புலன்களுக்கும் அவை தென்படுவதில்லை. ஆனால்
நடப்பது என்ன? நுண்ணிய வடிவில் ஒடுங்கியிருக்கும் வேண்டாப் பொருள்
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருகிறது.
நோய் (அன்னியப் பொருள்) முதலில் வெளியேற முயலுவதைக் தீவிர
நிலையென்றும் அடக்கிவைத்த பின் வேறு உருக்கொண்டு வளர்ந்து சமயமும்
இடமும் கிடைத்த போது வெவ்வேறு வடிவில் வெளியேற முயலும் காலத்தை
நாட்பட்ட நோய் என்றும் கூறுகின்றனர். அறிவும் தன்னம்பிக்கையும்
ஆற்றலும் குறைவாக இருப்பதால் மக்கள் திறமையுடைய சிலரை நாடுவது இயல்பே.
ஆனால் திறமையுடைய இச்சிலரோ மக்களின் இப்பா¢தாப நிலையைப்
பயன்படுத்திக்கொண்டு அதனையே வாழும் வழியாகக் கொள்கின்றனர்.
வந்தவருக்கு உடனடியாக பலன் தொ¢விக்க வேண்டுமென்ற நோக்குடையவர்கள்
திருடனைத் தேடிக் கொண்டு தாக்குவதைப் போல் வெளித்தோன்றும்
இந்நோயினையும் பலமான மருந்துக்களைக் கொண்டு அமுக்கி விடுகின்றனர்.
அப்போது நாட்பட்ட நோயும் பலாத்காரத்திற்குப் பயந்து நாடி
நரம்புகளுக்குள்ளே ஓடி, ஒளிந்து அங்குள்ள சத்துப் பொருள்களை உண்டு
வளர்கிறது. சமயம் வாய்த்த போது சீரழிக்கும் நோயாக, மாறா நோயாக உயிர்
குடிக்கும் நோயாக வளர்ந்து முடிவில் மனிதனையே கொல்கிறது.
தீவிர நோய், நாட்பட்ட நோய் மாறா (சீரழிக்கும்) நோய் என்று மூன்று
பெரும் நிலைகளில் நாற்று, செடி, மரம் என்பதைப்போல் நோயானது
வளர்கின்றது. இயற்கை முறையில் சிகிச்சையும் ஒவ்வொரு நிலையிலும்
ஒத்ததாக இருந்தால் குணமடைவது எளிதாகும்.
இயற்கை நியதிகள்
உலகத்தில் எல்லாம் ஒருநியதியின் கீழ் நடைபெறுகின்றன. வானத்திலுள்ள
உடுக்கள் ஓடி ஆடுவது கூட ஒரு நியதியோடுதான். சூ¡¢ய சந்திரர்கள்
நியதியோடு இயங்குவது நாம் அறிந்ததே. நியதி என்றால் கணக்கிற்கு
உட்பட்டது. அளவிட முடியும் எண்ணால் குறிப்பிடலாம். ஒழுங்குமுறை என்பது
இதனின் ஒருவகையே கணக்கில் கூடுதலோ, குறைதலோ இருக்கும் போது சமநிலைச்
சீரழிவு ஏற்படுகிறது. அமைதி குறையும். மனிதர்கள் பெரும்பாலும்
விரும்புவது அமைதியையே. இதனை நிலை நாட்ட விரும்புபவர்கள் விதிமுறைகளை
அறிந்து சமநிலைக்குக் கொண்டுவரப் பாடுபடுகிறார்கள். விதிமுறைகளில்
ஒன்று, எல்லாம் ஏழு, ஏழாகத் தொகை நிலையில் கூடி நிற்கிறது என்பது
அனைவரும் அறிந்த ஒன்று. படைப்பு ஆறு நாட்களில் நடந்தது ஏழாம் நாள்
ஓய்வு பெற்று மறுபடியும் படைப்புக்குப் பரமன் தயாரானார் என்பது ஒரு
சாரார் கொள்கை சந்திர கலைகளும் இந்த அளவிலேயே நடைபெறுகின்றன. திங்களை
முதல் நாளாகக் கொண்டு கணக்கிடுகிறார்கள். சூ¡¢ய ஆதிக்கத்தில்
நம்பிக்கையுடையவர்கள் ஞாயிற்றுக்கிழமையை முதல் நாளாகக் கொண்ட
கணக்கிடுகிறார்கள். எப்படியும் ஏழுக்குள் ஒன்று பா¢பூரண ஓய்வுக்காக
என்பது கோட்பாடு. உழைப்பும், ஓய்வும் ஆறும் ஒன்றுமாகக் கூட்டளவில்
இருந்தால் இது ஆரோக்கியநிலை: சமநிலை இதுவே அழியாத ஆனந்தத்தைக் கண்டு
கொள்ள இயலாது இந்த ஏழின் எழில் நிறைந்த சட்டத்தை அடுத்த
அத்தியாயத்தில் வி¡¢வாக விளங்கிக் கொள்ள முயலுவோம்.
இருவகை நோய்
நோய்களைப் பல பெயா¢ட்டு அழைக்கிறோம். இவைகளை இரு பெரும் கூறுகளாகப்
பி¡¢க்கலாம். ஒன்று உறுப்பைச் சார்ந்த நோய்கள். மற்றொன்று இயக்க
கூறுகளைச் சார்ந்த நோய்கள். இதனை ஆங்கிலத்தில் Organic நோய்களென்றும்
Functional நோய்களென்றும் கூறுகின்றனர். இயற்கை மருத்துவர்கள் நோய்
ஒன்றே பல அல்ல என்று கூறுவது நமக்குத்தொ¢யும். மலம் உள்ளே தங்குவதால்
ஏற்படுகிற நச்சுப் பொருள்கள் இயக்கத்தை தடை செய்யலாம். அல்லது
உறுப்பையே தேய்த்து உருச்சிதைவு உண்டுபண்ணலாம். அந்த நிலையில்
உறுப்புக்கள் செயலிழக்கும். இயக்கம் தடைபட்டு அதனால் துன்பம்
விளைகிறபோது அதனை இயக்கக்கூறு சார்ந்த நோய்கள் என்று சொல்கிறோம்.
உதாரணமாக பெருங்குடலில் மலம் தங்கி நின்று உஷ்ணத்தால் காற்று வி¡¢வடைந்து
ரத்தத்தோடு கலக்கிறது அத்தகைய கெட்ட ரத்தம் முழங்கை, முழங்கால் போன்ற
மூட்டுக்களில் தேங்கி வலியை உண்டு பண்ணுகின்றன. இதனை வாத நோய் என்றும்,
மூட்டு வலி என்றும் சொல்லி அதற்கான சிகிச்சை செய்கின்றார்கள்.
பெருங்குடலில் மலம் தங்கியிருக்கின்ற பொழுது அது சிறுகுடல்
இயக்கத்தையும் பாதிக்கும் சிறு குடலுக்கும், பெருங்குடலுக்கும்
இடையிலுள்ள வால்வின் வேலை தடைபடுகின்றது. பெருங்குடல் அதாவது ஏறு
குடல் ஆரம்பமாகின்ற இடத்திலுள்ள குடல் வாலில் அழற்சி ஏற்பட்டு அந்த
உறுப்பு வீங்கித் துன்பம் கொடுக்கிறது. இதனை உறுப்புக்கு வந்த நோய்
என்கின்றனர். இயக்க நோய் உறுப்பு நோயாகவும், உறுப்பு நோய் இயக்க
நோயாகவும் மாறலாம். ஒரு நிலையில் இயக்கத் தடையாக இருப்பது பி¡¢தொரு
நிலையில் உறுப்பு நோயாக மாறிவிடுகிறது. இந்த வித்தியாசத்தை சா¢யாகப்
பு¡¢ந்து கொள்வது மிகமிக அவசியம்.
இரத்தத்தில் மலம் கலந்து அது சிறு நீரகத்தின் வழியாகப்
போய்வரும்பொழுது சிறுநீரகம் இரத்தத்திலுள்ள மலத்தைப் பி¡¢க்கும்
பணியைச் செய்கிறது. தோல் வழியாகவும், மலக்குடல் வழியாகவும், மூக்கு
வழியாகவும், வெளியேற வேண்டிய மலங்கள் அவ்வாயில்கள் அடைபட்டு
இருப்பதனால் அவற்றை சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்ற வேண்டிய அவசியம்
ஏற்படுகின்றது. இதனால் சிறு நீரகத்திற்கு வேலை பளூ அதிகமாகி
தளர்ச்சியுறலாம். தனது இயல்பான வேலையைக் கூடச் செய்ய இயலாமல் போகும்
நிலை வரலாம். குறிப்பிட்ட மலத்தில் இரசாயன வேகத்தால் சிறுநீரகத்தின்
அமைப்புச் சிதையலாம். சிறுநீரகம் வேலை செய்ய முடியாத போது அதனை
சிறுநீரக அமைப்பு நோய் என்று கருதி சிகிச்சை செய்கின்றனர்.
கெட்டுப்போன சிறுநீரகத்தை எடுத்துவிட்டு புதிய சிறுநீரகம்
புகுத்தினால் நோய்த்துன்பம் குறைந்து சுகமடையலாம். அறுவைசிகிச்சை
நிபுணர்கள் இப்போது இதை இலகுவில் செய்கிறார்கள். சாதாரண
இயந்திரங்களில் ஒரு உறுப்பை எடுத்து விட்டு அதற்குப் பதில் புதிய
உறுப்பை அமைப்பது எளிதாகலாம். ஆனால் உடம்பின் ஒன்றோடொன்று இயல்பாக
இணைந்துள்ளவற்றை எடுப்பது எளிதானாலும், புதிய ஒன்றைப் பொருத்துவது
அவ்வளவு சுலபமானதல்ல நிபுணர்கள் சிறு நீரகத்தையோ இதயத்தையோ அல்லது
வேறு உறுப்புகளையோ, மாற்றி அமைப்பதை நாம் இப்போது கேள்விப்படுகின்றோம்.
இதனால் சிலர் குணமடைந்ததாகவும் அறிகின்றோம். அறுவைச்சிகிச்சையால்
தற்காலிக குணமடைந்த பலர் வேறு பல உறுப்புக்கள் பாதிக்கப்படுவதையும்
நாம் கேள்விப்படுகின்றோம். அறுவைச்சிகிச்சை முறைகளைக் கையாள்வதை விட
நோயின் ஆரம்ப காலத்திலேயே இயற்கை முறைகளைக் கையாண்டு மலங்களை உ¡¢ய
காலத்தில் வெளியேற்றிவிடுவதே சிறந்தது.
மனிதன் சோம்பலுக்கு ஆட்பட்டு அதிகம் தூங்குவதனாலோ, நாக்குக்கு
அடிமையாய் பெரும் திண்டிக்காரனாக ஆவதனாலோ ஜீரண சக்தி குறைந்து, உண்ட
உணவு நச்சுப்பொருளாக மாறுகின்றது. அன்னரசம் இரத்தமாக மாறாமல், சளியாக
மாறுவதும் அதனால் இயக்கத்தடை ஏற்படுவதும் வாழ்க்கையை நெறிப்படுத்திக்
கொள்ளாதவர்களின் செயல்களிலிருந்து நாம் அறிகிறோம். ஆரம்ப நிலையில்
இயக்க நோயாக இருப்பது நாளடைவில் உறுப்பு நோயாக வளரும். இயக்கநோய்
நிலையிலேயே பா¢காரம் காண்பது எளிது. ஆனால் நவீன மருத்துவர்கள் இயக்க
நோய்க்குக் காரணமாக மலங்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக அவற்றை
அடக்கும் விஷமருந்துகளைக் கொடுத்து நோயை வளர்க்கின்றனர். இயக்கநோய்
கொடுக்கும் தீவிர வலியும், துன்பமும் தற்காலிகமாகக் குறைந்தாலும் அவை
உள்ளே நின்று உறுப்புக்களை அழிக்கின்றன. அந்த நிலையில்
உறுப்புக்களுக்கு புத்துயிர் கொடுப்பது எளிதல்ல. இருப்பினும் இயற்கை
ஆற்றல்கள் அனைத்தையும் முறையுடன் பயன்படுத்தினால் உடம்புக்கு
புத்துயிர் ஊட்டுவது சாத்தியமே.
ஆரம்ப நிலையில் நம்பிக்கையினாலும் சாதகமான எண்ணங்களின் வலிமைகளினாலும்
பல நோய்களைப் போக்கலாம். எனினும் இயக்க நோய்க்கும், மனநோய்க்கும்
உள்ள வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இதிலுள்ள வேற்றுமை
மிகவும் நுண்ணியதே பார்க்கப் போனால் வேற்றுமை இல்லையென்றே கூடச்
சொல்லிவிடலாம். இயற்கை மருத்துவர் இதைப்பற்றி அதிகம் கவலைப்பட
வேண்டியதில்லை. நோயாளியை நல்ல சூழலில் இருக்க வைத்து அவரை சீ¡¢ய
எண்ணங்களை எண்ணும்படியாகவும் பசியின் நிலையை அறிந்து சாத்வீக உணவுகளை
உண்ணும்படியாகவும் செய்தால் நோய் நீங்கி பூரண சுகம் பெறுவர்.
தொடரும்....