menu






 ஆரோக்கியம >> சிறுகீரை

சிறுகீரை

சிறுகீரை ஒரு சத்து மிகுந்த கீரையாகும். சாதாரணமாக இந்தியாவெங்கும் தோட்டங்களிலோ, வீட்டுத் தோட்டங்களிலோ பயிர் செய்யப்படும் கீரை வகைகளில் இக்கீரையும் ஒன்றாகும். இக்கீரையானது வட இந்திய மலைப் பகுதிகளில் ஏராளமாக விளையக்கூடியது.

இந்தக் கீரையானது முளைக்கீரை, தண்டுக் கீரை ஆகிய கீரைகளின் இனத்தைச் சார்ந்த சிறிய கீரை வகையாகும். சுமார் இருபது செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது; செங்குத்தாக வளரும். நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இச்செடி மிக மெல்லிய தோற்றமுடையது.

இச்செடி 10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடனேயே கீரையைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இக்கீரையை மசியலாகச் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். கறி சமைக்கவும் இக்கீரை உதவுகிறது. இக்கீரையின் இலைகளையும் தண்டுகளையும் முளைக்கீரையைப் போலவே உணவாகத் தயா¡¢த்துப் பயன்படுத்தலாம். இக்கீரை விதையும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

இச்சிறுகீரையில் 90 விழுக்காடு நீர் இருக்கிறது. மற்றும் 2.8 விழுக்காடு புரதச் சத்தும், 0.3 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 2.1 விழுக்காடு தாதுப்புக்களும் இருக்கின்றன. மாவுச்சத்து இக்கீரையில் 4.8 விழுக்காடு இருக்கிறது. இது 33 கலோ¡¢ சக்தியைக் கொடுக்கிறது. 100 கிராம் கீரையில் 251 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும் 55 மில்லிகிராம் மணிச்சத்தும் 27.3 மில்லிகிராம் இரும்புச் சத்தும் இருக்கின்றன.

இந்தக் கீரையை தினமும் சமைத்துச் சாப்பிட இரும்புச் சத்தும், புதுரத்தமும் உடலில் பரவும்.

இக்கீரையினால் உடலுக்கு அழகும் வனப்பும் கிடைக்கும். இது தூம்பிர நோய், காசம், படலம், பாதரச வேகம், வெரணம், மூத்திரக் கி¡¢ச்சர வீக்கம், பித்தநோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு முதலியவைகள் நீங்கும்.

இக்கீரை வாதநோயை நீக்கக்கூடியது. அத்துடன் கல்லீரலுக்கும் நன்மையைச் செய்யும். உடலில் தோன்றும் பித்த சம்மந்தமான நோய்களை இது கண்டிக்கும் தன்மைபெற்றது. விஷக்கடி முறிவாகப் பயன்படக் கூடியது சிறுகீரை. அத்துடன் சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளை அகற்றவல்லது.

இக்கீரை இந்தியாவெங்கிலும் தோட்டப் பயிராகவும், காட்டுப்பயிராகவும் பயி¡¢டப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் பயிர் செய்யலாம். விதையைப் பாத்திகளில் விதைத்து வளர்க்கலாம். இக்கீரையைப் பயி¡¢டுவதற்கு முன் இதற்கு¡¢ய பாத்தியை முன்பே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

பாத்திகளைக் கொத்தி எருவிட்டு வைத்துக்கொள்ளுதல் நலம். கோடைகால இறுதியில் விதைகளை அதிக நெருக்கமில்லாமல் விதைப்பது நல்லது. விதைத்த பாத்திகளில் பூவாளியினால் தண்ணீரைத் தெளிப்பது சிறந்த முறையாகும். இவ்வாறு தண்ணீரை காலை வேளைகளில் தெளிப்பதுதான் நல்லது. ஐந்தாறு நாட்களில் விதைகள் எல்லாம் நன்கு முளைத்துவிடும். இருபத்தைந்து நாட்களில் கீரை தயாராகிவிடும். நாற்பது அல்லது ஐம்பது நாட்களில் கீரை தக்க முதிர்ச்சியடைந்துவிடும். அப்பொழுது கீரையைச் செடியோடு பிடுங்கி உபயோகப்படுத்தலாம்.

இக்கீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்கவேண்டும். இக்கீரைக்கு நிழல் கூடாது, வெளிச்சம் மிகுதியும் தேவை. ஆனால் வெப்பம் மிகுதியான காலங்களில் இக்கீரைக்கு அடிக்கடி நீர்பாய்ச்சுதல் வேண்டும்.

நல்ல சுவையும் நாவிற்கு ருசியும் உடலுக்கு வலுவும் கொடுக்கும் இக்கீரையை வீட்டுத் தோட்டங்களில் வளர்த்து நாளொரு கீரையை உணவுடன் சேர்க்க வழிவகுத்துக்கொள்ளுதல் சாலச் சிறப்புடையதாகும்.

                                      தொடரும்...


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்