கொத்துமல்லிக் கீரை
தாதுப்புக்கள் அனைத்தும் இக்கீரையில் இருக்கின்றன. நூறு
கிராம் கீரையில், 184 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 64
மில்லிகிராம் மக்னீசியமும், 47 மில்லிகிராம் ஆக்ஸாலிக் அமிலமும், 71
மில்லிகிராம் மணிச்சத்தும், 18.5 மில்லிகிராம் இரும்புச் சத்தும்,
58.3 மில்லிகிராம் சோடியமும், 256 மில்லிகிராம் கந்தகமும், 43
மில்லிகிராம் குளோ¡¢னும் இக்கீரையில் இருக்கின்றன.
வைட்டமின் சத்துக்கள் இக்கீரையில் அதிகமாக் காணப்படுவதை அறியலாம்.
நூறுகிராம் கீரையில் வைட்டமின் A 11,530/IU (அனைத்துலக அலகு)
இருக்கின்றது. 0.05 மில்லிகிராம் தயாமினும், 0.06 மில்லிகிராம்
ரைபோ·பிளேவினும், 0.8 மில்லிகிராம் நிகோடினிக் அமிலமும், 135
மில்லிகிராம் வைட்டமின் C-யும் நூறு கிராம் கீரையில் அடங்கியுள்ளன.
கொத்துமல்லிக்கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இக்கீரையால்
பித்த வர்க்கமும் பித்த சுரமும் நீங்குகிறது. உடலுக்கு வன்மையும்
சுக்கில விருத்தியையும் இக்கீரை அளிக்கிறது.
இக்கீரையால் கபாலத்தைப் பற்றிய சூடு தணியும்; நித்திரை உண்டாகும்;
பித்தத்தையும் அரோசகத்தையும் நீக்கி பசியை உண்டாக்கும்.
இக்கீரையை ஒரு வேளைக்கு ஒன்றிலிருந்து ஒன்றரைப் பலம் நெகிழ அரைத்து
ஓர் ஆழாக்குப் பசும்பாலில் கரைத்துச் சுத்தமான துணியால் வடிகட்டி
போதிய அளவு நல்ல கரும்புச் சர்க்கரையைக் கூட்டிக் கலந்து, காலையில்
உட்கொள்ள மன நோய் நீங்கும் என்பர். இத்தகைய சிகிச்சையை உடல்
பலத்திற்கு ஏற்றவாறு தினம் ஒரு வேளை அல்லது இருவேளை மூன்று நாள்
கொள்ளல் சாலச் சிறந்ததாகும்.
கொத்துமல்லிக்கீரையைப் போலவே அதன் விதையும் சிறந்த உணவாகவும்,
மருந்தாகவும் பயன்படுகிறது. நாட்டு வைத்திய முறைகளில் பலவித
மருந்துகளுக்கு இவ்விதை பயன்படுகிறது. இ·து இரைப்பையில் ஏற்படும்
வாயுவை அகற்றும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. கொத்துமல்லியானது
நீரைப் பெருக்கி உடலைத் தேற்றுகிறது. பித்தத்தைப் போக்கி சோர்வை
அகற்றி, சுறுசுறுப்பை உடலுக்கு வழங்குகின்றது.
மூச்சு அடைப்பு அல்லது மூச்சுத் திணறல் மற்றும் மூச்சுத் தப்பு போன்ற
நோய்களுக்கு இதன் விதையை வாயிலிட்டுச் சுவைக்க நோய் நீங்கும்.
மதுபானக் குடியால் ஏற்பட்ட மிகுந்த போதையைத் தணிக்க இந்த விதையை
வாயிலிட்டுச் சுவைப்பார்கள். அடிவயிற்றில் ஏற்படும் வலிக்கு இந்த
கொத்துமல்லி நல்லதோர் மருந்தாக விளங்குகிறது. மூட்டுக்களில் ஏற்படும்
எ¡¢ச்சலைத் தணிப்பதற்கு இந்தக் கொத்துமல்லி நீர் பயன்படுகிறது.
இந்நீரே வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றும் ஆற்றல் பெற்றது.
கொத்துமல்லியிருந்து இறக்கப்பட்ட நீருடன் பாலும் சர்க்கரையும்
சேர்த்து அருந்துவதனால் ரத்தமூலம் குணமடையும். இதுவும் பித்தத்தை
நீக்க நல்ல மருந்தாகும். குழந்தைகட்குச் சூட்டினால் ஏற்படும்
அடிவயிற்று வலிக்குச் சூட்டை நீக்கி குளிர்ச்சியை உண்டாக்குவதற்கு
இந்த மல்லிநீரைக் கொடுக்கலாம்.
கொத்துமல்லி மலத்தை இளக்கும் ஆற்றல் பெற்றது. இது தாகத்தைத்
தணிக்கவல்லது. வாந்தி ஏற்படும் நிலையில் கொத்துமல்லியை வாயிலிட்டு
மென்று அதன் சாற்றை உள்ளுக்குச் செலுத்த வாந்தி நீங்கும்; இதனால்
சளியும், கபமும் நீங்கும். பல்வலி, மற்றும் பல்வேறு வீக்கம்
முதலியவைகள் கொத்துமல்லியால் நிவர்த்தியாகும்.
கொத்துமல்லி நீர் இதயம், ஈரல், மூளை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும்
வலுவிற்கும் ஒரு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
ஆண்குறியில் ஏற்படும் கொப்புளங்கள் மற்றும் புண்களுக்குக்
கொத்துமல்லிநீர் நல்ல மருந்தாகும். வாயிலேற்படும் துர்நாற்றத்தைப்
போக்க கொத்துமல்லியை வாயிலிட்டுச் சுவைக்கலாம். இதனால் வாய்
துர்நாற்றம் நீங்கும். இக்காரணத்தினாலேயே மருந்துகளில் இருக்கின்ற
வேண்டாத மணத்தை நீக்கி நீறுமணம் ஊட்டுவதற்கு மருந்து தயா¡¢ப்பாளர்கள்
மருந்துடன் இதனைச் சேர்க்கிறார்கள்.
இது 288 கலோ¡¢ சக்தியை நல்குகிறது. கொத்துமல்லியின் நறுமணத்திற்குக்
காரணமாக இருப்பது இதினுள்ளடங்கியிருக்கும் எண்ணெயாகும்.
கொத்துமல்லியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை "மல்லி எண்ணெய்" என்பர்.
மல்லி எண்ணெய் எடுப்பது ஒரு பெரும் தொழிலாகவே செயல்பட்டு வருகிறது.
இந்த எண்ணெய் மணம் நிறைந்த மதுபானம் செய்யப்படுவதற்கும், கொக்கோ,
சாக்லட் போன்ற உணவுப் பண்டங்கள் செய்யவும் தொழிற்சாலைகளில்
பயன்படுத்தப்படுகிறது.
விதைக்கும் முறை : இக்கீரையை ஊடுபயிராகக் காய்கறித் தோட்டங்களில்
விதைக்கலாம். இது செவ்வல், கா¢சல் நிலங்களில் நன்கு விளையும். இதன்
விதையை இரண்டாக உடைத்து பின் விதைத்தல் வேண்டும். கீரைக்காகப் பயி¡¢டும்பொழுது
உடைக்கப்பட்ட விதைகளை தொழுஉரமிட்ட மேடான பாத்திகளில் நெருக்கமாக
விதைக்க வேண்டும். அதற்கு மேல் வைக்கோலைப் பரப்பி "பூ" வாளியால் நீர்
விடல் வேண்டும்.
கொத்துமல்லிக் கீரையும் கொத்துமல்லியும் சிறந்த உணவாகவும்,
மருந்தாகவும் பயன்படுவதினால் வீட்டுத் தோட்டங்களில் இக்கீரையை
வளர்ப்பது சாலச் சிறந்த ஒன்றாகும். கொத்து மல்லிக் கீரை மற்ற கீரைகளை
விட தாதுப்புக்கள் நிறைந்திருப்பதால் இதனை தினந்தோறும் எவ்வகையிலேனும்
நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகமிக நல்லது.
தொடரும்...