கறிவேப்பிலை :
கறிவேப்பிலை ஓர் சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 விழுக்காடு
நீரும், 6.1 விழுக்காடு புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4
விழுக்காடு தாதுப்புக்களும், 6.4 விழுக்காடு நார்ச்சத்தும், 18.7
விழுக்காடு மாவுச்சத்தும் உள்ளன. இக்கீரை 108 கலோ¡¢ சக்தியைக்
கொடுக்கிறது. தாதுப்புக்களில் சுண்ணாம்பு, மக்னீசியம், மணிச்சத்து,
இரும்புச் சத்து, தாமிரச் சத்து, கந்தகச் சத்து மற்றும் குளோ¡¢ன்,
ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியன இந்தக் கீரையில் நிறைய உண்டு.
100 கிராம் கீரையில் 830 மில்லி கிராம் சுண்ணாம்புச்சத்தும், 221
மில்லி கிராம் மக்னீசியச் சத்தும், 132 மி.கி. இரும்புச் சத்தும்,
0.21 மி.கிராம் தாமிரச் சத்தும், 81 மி.கிராம் கந்தகச் சத்தும், 198
மி.கிராம் குளோ¡¢ன் சத்தும் உள்ளன.
இக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் மிகுதியும் உள்ளன. உயிர் சத்துக்களில்
ஒன்றான வைட்டமின் A 12,600 அனைத்துவகை அலகு கொண்டதாகும்.
100 கிராம் கீரையில் தயாமின் 0.08 மி.கி. இருக்கிறது. நிகோடினிக்
அமிலம் 2.3 மி.கிராம் அளவும், வைட்டமின் C 4 மி.கிராம் அளவும்
இக்கீரையில் உள்ளன.
இக்கீரை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி
வாய்ந்தது. பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது.
இக்கீரை மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கவல்லது.
கறிவேப்பிலையால் குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு,
நாட்பட்ட காய்ச்ல் நீங்கும். இக்கறிவேப்பிலையால் பித்த மிகுதியால்
வந்த பைத்திய நோய்களும் விலகுவதாகச் "சித்தர் வாசுட நூல்"களில்
காணப்படுகின்றன.
இதன் இலை, பட்டை, வேர் இவைகளைச் கசாயம் செய்து கொடுக்க பித்தம்
நீங்கும்; வாந்தியும் நீங்கும். கறிவேப்பிலைக் கீரையை நிழலில்
உலர்த்தி அத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றைப்
பொடியாக்கிச் சோற்றுடன் சேர்த்து கொஞ்சம் நெய் பிசறி உண்ண மந்தம்,
மந்த பேதி, மலதோஷம், மலக்கட்டு, கிரகணி, கழிச்சல் நோய், பிரமேகட்
போன்றவைகள் குணமாகும்.
இக்கீரையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்து
துவையல் செய்து சாப்பிட குடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கறிவேப்பிலை
ஈர்க்கின் முலைப்பாலிட்டு இடித்துச் சாறுபிழிந்து கிராம்பு, திப்பிலி
சேர்த்துக்கொண்டு மூன்று முறை குழந்தைகளுக்கு ஊட்ட வாந்தி நிற்கும்.
பசி மற்றும் உணவு உண்ணும் வேட்கை மிகுதிப்படும்.
உணவுடன் சேர்க்கப்படும் கறிவேப்பிலை இலைகளை உணவுக்கு மணம் ஊட்டிய பின்
நீக்கிவிட வேண்டும் என்ற தேவையில்லை. உணவோடு அதனைச் சேர்த்து உண்பதே
சிறந்தது. இவ்வாறு உணவோடு செல்லும் இக்கீரையானது மலத்தின் திராவம்
சத்தை வற்றச் செய்யவல்லது. வயிற்றிலுள்ள வாயுவைப் பி¡¢த்து மலவாயுக்
கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும். நல்ல பசி, ருசி, ஜீரண சக்தியைத் தரும்.
மலக்கட்டு வாயுக்கட்டுகளைப் போக்கி மலத்தை வெளியாக்கவல்லது.
இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இம்மூன்றும் ஜீரண உறுப்புகளின் நண்பன்
என்று கூறலாம்.
இச்சிறப்புடைய இக்கீரையை தமிழக நாட்டுப் பாடல் கீழ்க்கண்டவாறு மிக
அழகாகச் சித்தா¢க்கிறது.
"கறிவேப்பிலையோ வேப்பிலை
காய்கறிக் கெல்லாம் தாய்ப்பிள்ளை"
தாய்ப் பிள்ளையைத் தலைப்பிள்ளையாக நம் வீட்டுத் தோட்டத்தில் காக்க
வேண்டாமா?
(கே. பாலசுப்பிரமணியன்)
( கே. கருப்பஞானி)
தொடரும்...