கீரை வகைகள்
1. சத்துணவில் கீரை வகைகளின் பங்கு
2. அகத்திக் கீரை
3. அறுகீரை
4. கா¢கலாங்கண்ணி
5. கறிவேப்பிலை
6. குத்துப்பசலை
7. குப்பைக் கீரை
8. கொடிப்பசலைக் கீரை
9. கொத்துமல்லிக் கீரை
10. சக்கரவர்த்திக் கீரை
11. சிறுகீரை
12. சிலோன் பசலை
13. சுங்காங் கீரை
14. தண்டுக் கீரை
15. பண்ணைக் கீரை
16. பருப்புக் கீரை
17. புதினாக் கீரை
18. புளிச்சக் கீரை
19. புளியாரை
20. பொன்னாங்கண்ணிக் கீரை
21. மணத்தக்காளி
22. ஆரைக்கீரை அல்லது நீராரை
23. முருங்கைக் கீரை
24. முளைக்கீரை
25. முள்ளுக்கீரை
26. வல்லாரை
27. வெந்தயக் கீரை
சத்துணவில் கீரை வகைகளின் பங்கு
உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் உணவுதான் முதல் தேவை என்பதை நாம்
அறிவோம். தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை மண்ணிலிருந்தும்,
காற்றிலிருந்தும், நீ¡¢லிருந்தும் பெற்றுக் கொள்கின்றன. ஆனால்
மிருகங்கள் தாவரங்களையும், தாவரங்களையுண்ணும் சிறிய மிருகங்களையும்
உணவாகக் கொள்கின்றன. மனிதனோ சிறந்த தாவரங்களையும், பிராணிகளையும்
தேர்ந்தெடுத்து வளர்த்து அதில் தனக்குகந்த பகுதியை மட்டுமே உணவாகக்
கொள்கின்றான். மனிதன் உணவுப் பழக்கம் அவன் வாழும் பகுதிகளில் வளரும்
தாவரங்களையும், பிராணிகளையும் பொருத்து மாறுபடுகின்றது. அவன்
சாப்பிடும் உணவுகளைப் பொறுத்து அவனுக்குச் சத்தும் வேலை செய்யும்
சக்தியும் கிடைக்கின்றது. சக்தி கொடுக்கும் உணவுகளை மட்டும்
சாப்பிட்டால் போதாது. நோய்கள் வராமல் தடுக்கவும், நோய்களை எதிர்த்து
நிற்கவும் வைட்டமின் சத்துக்களும், தாதுப்புக்களும் நிறைந்த உணவை நாம்
சாப்பிட வேண்டும்.
நமது உணவில் புரதம், மாவுப் பொருள், கொழுப்பு, வைட்டமின், தாதுப்பு
முதலிய அனைத்தும் சீரான அளவில் இருக்க வேண்டும். அதைத்தான் சமச்சீர்
உணவு என்று சொல்லுகிறோம். சமச்சீர் உணவுத் திட்டத்தின்படி, தேவையான
வைட்டமின் சத்துக்களையும், தாதுப்புக்களையும் பெற ஒருவர் தினசா¢ 125
கிராம் கீரைகளையும் 75 கிராம் காய்களையும் அ¡¢சி, பருப்பு போன்ற
உணவுகளில் நமக்குத் தேவையான மாவுப் பொருட்களும், புரதமும் மட்டுமே
கிடைக்கின்றன. முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும்
நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.
நம் நாட்டில் இன்று பொதுவாக எங்கு பார்த்தாலும் வைட்டமின் குறைகள்
காணப்படுகின்றன. குழந்தைகளிடமும் கர்ப்பிணிகளிடமும் இக்குறைகள்
அதிகமாகக் காணப்படுகின்றன. இக் குறை நீக்க நம் அனைவருக்கும் தேவையான
சத்துணவைப் பெறுவதற்கு நாம் கீரைகளின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.
கீரைகளின் உற்பத்தியைப் பெருக்குவது மிகவும் எளிது. கீரைகளை நாம்
ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். மிகக் குறுகிய காலத்தில் அறுவரை
செய்யலாம். அதிக மகசூலும் எடுக்கலாம். உதாரணமாக ஒரு ஏக்கா¢ல் நாம்
மூன்று போகமும் நெல் விளைவித்தால்கூட அதிகப்பட்சம் 8 டன் நெல்தான்
விளைவிக்கலாம். ஆனால் அதே நிலத்தில் கீரை பயி¡¢ட்டால் ஒரு ஆண்டில் 8
முறை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 8 டன் வீதம் ஒரு ஆண்டில் 64
டன் கீரைகள் உற்பத்தி செய்து விடலாம்.
உற்பத்தி செய்வது மட்டுமின்றி நாம் நமதுணவில் தினந்தோறும் கீரையைப்
சேர்த்துக் கொள்வதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கீரைகளில்
எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. நமக்குப் பிடித்தமான கீரைகளை நாளுக்கொரு
வகையாகப் பயன்படுத்தலாம். கீரைகளில் வைட்டமின் A, B, C சத்துக்களும்,
சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து ஆகியவைகளும் அதிகமாகக்
கிடைக்கின்றன. இந்தச் சத்துக்களை மருந்துக் கடைகளில் அதிக விலை
கொடுத்து கசப்பான மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதைவிட, மிக மலிவாகக்
கீரைகளை வாங்கிச் சுவையோடு சாப்பிடலாம்.
கீரைகளைச் சாப்பிடுவதை தாழ்வாகக் கருதும் நிலை மாற வேண்டும். தினசா¢
உணவில் கீரைகள் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். வசதிகள் பல வாய்க்கப்
பெற்றுள்ள மேலை நாடுகளில் கூட தினசா¢ உணவில் கீரைகளைச் சேர்த்துக்
கொள்ககின்றார்கள். அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று கீரைகளைச்
சமைக்காமல் பச்சையாகவே சாப்பிடுகின்றார்கள். கீரைகளைச் சமைக்கும்போது
வைட்டமின் சத்துக்கள் விரயமாகி பழகி விட்டார்கள். நம் நாட்டிலுள்ள
உணவுப் பற்றாக் குறையையும் அறவே ஒழிக்க கீரைகளை அதிகமாகப் பயி¡¢டுவதும்,
கீரையை தினசா¢ உணவில் சேர்த்துக் கொள்வதும்தான் வழியாகும்.
கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக
விலை கொடுத்து வாங்கும் பழங்களில்தான் சத்து என்றோ நினைத்துவிடக்
கூடாது. உதாரணமாக நமக்கு எளிதில் கிடைக்கும் ஒரு கிலோ முளைக் கீரையில்
உள்ள A வைட்டமின் சத்தைப் பெறுவதற்குச் சுமார் 70 கிலோ வாழைப்பழம்
சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அகத்திக் கீரையில் உள்ள சுண்ணாம்புச்
சத்தைப் பெற வேண்டுமானால் 113 கிலோ ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஒரு
கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ
அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும். இதுபோல் ஒப்புநோக்க முடியாத
அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே
கீரைகளை நாம் உணவில் தினசா¢ சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம்
விளங்கும்.
வைட்டமின் A நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத்
தேவைப்படுகிறது. வைட்டமின் A குறைவினால் கண்கள் பார்வை குறைத்து
விடும். வைட்டமின் A, முட்டை, பால் மீன்எண்ணெய்
முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான
கீரைகளிலிருந்து A வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. A வைட்டமின்
சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.
அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது
பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் A
அதிகமாகவுள்ளது. வைட்டமின் ¦ என்பது பல வைட்டமின்கள் குறைந்தால் பசி
ஏற்படாது. நரம்புகள் சக்தியிழந்து உடல் வலிவு குறைந்து காணப்படும்
வாயிலும் உதட்டிலும் புண்கள் ஏற்படும் இரத்த சோகை உண்டாகும். பொ¢பொ¢
என்ற நோயும் உண்டாகும்.
வைட்டமின் B அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை,
பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.
வைட்டமின் C சத்து பல், எலும்பு முதலிய உறுப்புகள் வலிவுடன்
வளர்ச்சியடைய உதவுகின்றது. வைட்டமின் C சத்து நோய்களை எதிர்க்கும்
சக்தியைக் கொடுக்கின்றது. வைட்டமின் C சத்துக் குறைவினால் ஸ்கர்வி
என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் C அகத்திக் கீரை, முருங்கைக் கீரை,
புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய
கீரைகளில் அதிகமாக இருக்கிறது. வைட்டமின் C சத்து கீரைகளை வேக
வைக்கும்போது பொ¢தும் அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம்
வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும்.
சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக்
கற்றுக் கொள்ள வேண்டும். வி¡¢வதற்கும், இரத்தம் உறைவதற்கும்
சுண்ணாம்புக் சத்துதான் முக்கியம். நமது இருதயம் சா¢யாகச் சுருங்கி
வி¡¢வதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும்
குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும்
மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது. சுண்ணாம்புச் சத்து அகத்தி,
முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை,
பொன்னாங்கண்ணி, நச்சுக் கொட்டை¨க் கீரை, மணத்தக்காளிக் கீரை, கா¢சலாங்கண்ணிக்
கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபா¢மிதமாகக் கிடைக்கின்றது.
இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச்
சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச்
சத்து நிறைய தேவைப்படும். இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை,
கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை,
பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை, முதலிய
கீரைகளில் நிறைய கிடைக்கிறது.
மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும்
ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல்
பச்சையாகவும் சாப்பிடலாம். ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு
கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட
வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.
வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ்,
மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில
போதிய அளவில் கிடைக்கின்றன. ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய
கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.
தொடரும்...