தினந்தோறும் உண்ணும் கீரையில் அரைக்கீரை முதலிடத்தைப் பெறுகிறது.
இதனால்தான் மகப்பேறு பெற்ற தாய்மார்களுக்கு முதல் முதல் கொடுக்கும்
உணவு அரைக்கீரை உணவாக அமைந்து விடுகிறது.
நீர்க்கோர்வை, குளிர்சுரம், வாதசுரங்கள், கபசுரம், சளி இருமல்
ஆகியவைகளை அரைக்கீரை போக்கும் குணமுடையது. இக் கீரை உடலுக்கு
வெப்பத்தைத் தந்து சப்த தாதுக்களையும் வலுவடையச் செய்யும். இக்கீரை
சுக்கில தாதுவை வலுப்படுத்தி உடல்பலத்தைப் பெருக்குவதில் தூதுவளைக்
கீரைக்கு நிகரானது. உடலில் தேங்கும் வாய்வு, வாத நீர்களைப்
போக்குவதில் முருங்கைக் கீரைக்கு சமமானது.
நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும் பலனும் தரக்கூடியது. அரைக்கீரையை
நாடோறும் உணவுடன் சேர்த்து உண்டுவர உடலுக்கு அழகும் வலுவும்
கொடுக்கும்.
இந்தக் கிரை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகப்
பயன்படுத்துகிறார்கள். பிடா¢ நரம்பு வலித்தல், மண்டை பீனிச நரம்புவலி,
ஜன்னித் தலைவலி, கன்னநரம்பு புடைப்பு ஆகியவைகளுக்கு இக்கீரை
பெருங்குணமளிக்க வல்லது.
மாதவிடாய் காலத்தில் பெண்ணுடன் சேர்ந்த சேர்க்கையால் வரம் சூதக
ஜன்னிக் கோளாறுகளை அரைக்கீரையுணவின் மூலம் குணமாக்கிக் கொள்ளலாம்.
தீயவழிகளில் உடல் சக்தியை இழந்தவர்களுக்கு இக்கீரை அரும் மருந்தாகவும்,
உற்றுழி உதவும் நண்பனாகவும் திகழ்கிறது. இக்கீரையை உணவுடன் சேர்த்துக்
கொள்வதால் தலைமயிர் நன்றாகக் கறுத்து வளரும்.
அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பதும் உண்டு. நாட்பட்ட
நோய்களையும் அரைக்கீரை விதையில் சிறுகச் சிறுகக் குணப்படுத்திவிடலாம்.
அரைக்கீரை விதையிலிருந்து தயா¡¢க்கப்படும் அரைக்கீரைத் தைலம் மிகவும்
புகழ்பெற்ற தைலமாகும். இத்தைலம் கண்ணுக்குக் குளிர்ச்சியைக்
கொடுக்கிறது.ட தலைமுடியானது செழித்து வளர இத்தைலமும் உதவுகிறது.
மேலும் தலைமுடியும் ஒளிவிட்டு மின்னும். கறுகறுவெனத் தலைமுடி
கருமையாகவும் செழிப்பாகவும் வளர்வதற்கு, அரைக்கீரை விதையை நல்லெண்ணெய்
விட்டுக் காய்ச்சிப் பதத்தில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு
தலைக்குத் தடவிவர வேண்டும்.
இக்கீரையைப் பயி¡¢டுதல் எளிது. வடிகால் உள்ள செழிப்பான நிலத்தில்
இந்தக் கீரை நன்றாக வளரும். இக்கீரையை விதை மூலமும் தண்டு மூலமும்
விருத்தியாக்கலாம். இக்கீரையைப் பயி¡¢டுமுன் இதற்கு¡¢ய பாத்தியை தயா¡¢த்துக்
கொள்வது நல்லது. அப்பாத்திகளை எருவிட்டுக் கொத்தி வைத்துக்
கொள்ளவேண்டும். கோடைகால இறுதியில் விதைகளை நெருக்கமில்லாமல் விதைத்து
இலேசாக மூட வேண்டும். வைக்கோலைப் பரப்பி மூடி வைக்கலாம். விதைத்த
பாத்திகளில் பூவானியினால் தண்ணீர் தெளிப்பது நல்லது. தண்ணீர்
தெளிப்பதைக் காலை வேளையில் செய்வதே சிறந்ததாகும். மூன்று
நாட்களுக்குப் பிறகு வைக்கோலை நீக்கிவிட வேண்டும். 5 அல்லது 7
நாட்களில் விதைகள் எல்லாம் நன்கு முளைத்துவிடும்.
40 நாட்களில் இக்கீரை தக்க வளர்ச்சி அடைந்துவிடும். அப்போது வேண்டிய
கீரைகளைக் கத்தி அல்லது கத்தி¡¢யைக் கொண்டு வெட்டி எடுத்துக்
கொள்ளலாம்; அல்லது கையால் கிள்ளிப் பறித்துக் கொள்ளலாம். இவ்வாறு
கிள்ளிப் பறிப்பதனாலேயே இதற்கு கிள்ளுக்கீரை எனப் பெயர் வந்தது போலும்.
ஆக இந்தக் கீரையை மற்ற கீரைகளைப் பிடுங்குவது போல் செடிகளை வேரோடு
பிடுங்கக் கூடாது. முதல் முறை கீரையைக் கத்தா¢த்து எடுத்த பிறகு
இரண்டு நாள் தண்ணீர் விடாமல் காயப்போட வேண்டும். மூன்றாம் நாள் முதல்
சிறிது சிறிதாகத் தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும். இவ்வாறு செய்வதனால்
இரண்டு வாரத்திற்குள் மீண்டும் கீரை நன்கு தழைத்து வளரும். ஆதலினால்
இரண்டு வாரத்திற்கொருமுறை கிரையைப் பறித்து வரலாம்.
இவ்வாறு இலைபறிக்கப்பட்ட கீரைச் செடியானது இரண்டு மாதத்தில் பூக்க
ஆரம்பிக்கும். தக்க பருவத்தில் பூத்து செடிகளைப் பிடுங்கிவிட்டு
விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேறோர் இடத்தில் பாத்தி
கட்டி விதை விதைத்து மறுபடியும் இக்கீரையைப் பயிர் செய்யலாம். ஒவ்வொரு
முறையும் இடம் மாற்றிப் பயிர் செய்வதனால் இப்பயிர் அதிகம் தேவையில்லை.
ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும். இக்கீரைக்கு நிழல்
கூடாது. வெளிச்சம் மிகுதியும் தேவை. ஆனால் வெயில் மிகவும் கடுமையாக
இருந்தால் செடிகளுக்கு அடிக்கடி நீர்பாய்ச்சுதல் வேண்டும். இவ்வாறு
பாதுகாக்கப்பட்ட கீரையானது நன்கு விளைந்து நல்ல வருவாயைக் கொடுக்கும்.
ஓர் சிறந்த ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கும் இந்தக் கீரையை
வீட்டுத் தோட்டங்கள் தோறும் பயி¡¢டுவது மிகச் சிறந்ததாகும்.
மேலும்...