menu






 ஆரோக்கியம >> அறுகீரை

அறுகீரை

அறுகீரையானது சத்து நிறைந்த கீரைகளில் ஒன்றாகும். சாதாரணமாக இக்கீரை, தமிழகம் எங்கும் கிடைக்கக்கூடியது. இந்தக் கீரையைப் பற்றித் தொ¢யாதவர்கள் தமிழ் நாட்டில் மிகச் சிலரேயாவார். ஆனால் இக்கீரையை உண்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

இக்கீரைக்கு அரக்கீரை, அறுகீரை, அறைக்கீரை, கிள்ளுக்கீரை, அரைக்கீரை என்ற வேறு பெயர்களும் உண்டு. செடியிலிருந்து கீரையைப் பலமுறை அறுவடை செய்து பயன்படுத்துவதால் அறுப்புக்கீரை என்னும் பெயரும் இக்கீரைக்கு வழங்கி வருகிறது. இக்கீரை தென்னிந்தியாவில் மிகச் சாதாரணமாகப் பயி¡¢டக்கூடிய ஒரு வகைக் குத்துச் செடியாகும். இக்கீரை, கிளைவிட்டு வளரக் கூடியது. செங்குத்தாக நிற்கும் தன்மை பெற்றது. இது தண்டுக் கீரை இனத்தைச் சார்ந்த கீரை வகைகளில் ஒன்றாகும். ஆனால் அதிக உயரம் வளராமல் 30 செ. மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. பொதுவாக ஓரடிக்கு மேல் இது வளர்வதில்லை. இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறுத்தவை. சுமார் ஒரு வருடம் வரை பலன் தரும். இக்கீரை மேல்நிறம், பச்சை நிறமாகத் தோன்றும். அடிப்பாகம் மெல்லிய செந்நிறத்தோடு விளங்கும். இலையின் காம்புகளிலும் செந்நிறம் தோன்றும்.

இந்தக் கீரையும் இதன் விதையும் இரண்டுமே உணவாகப் பயன்படுகிறது.

"அந்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்,
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்."


என்ற திருமந்திரப் பாடலால் அரைக்கீரை விதை உணவுக்கு பயன்பட்ட விதத்தைக் காணலாம். இக்கீரை மிகச் சிறந்த சுவையுடையது. இந்தக் கீரையில் தங்கச் சத்தும், இரும்புச் சத்தும் உள்ளன என்று கூறுவர். இது ஒரு சிறந்த பத்திய உணவு நோயாளிகளுக்கு இந்தக் கீரை ஒரு சிறந்த சத்துணவாகும். இக்கீரை நோயாளிகளுக்கு எந்தவிதக் கெடுதலையும் உண்டு பண்ணாது. அரைக்கீரையுடன் துவரம் பருப்பைச் சேர்த்து, உலர்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டுத் தாளித்து அவியலாகச் சாப்பிடலாம். இக்கீரையைக் குழம்பு கடையல், பொறியல் முதலியன செய்யலாம். கீரையைக் காலையிலும் பகலிலும் உணவில் சேர்த்துக் கொள்ளல் உடல் நலத்திற்கு சிறப்புடையதாகும்.

அரைக்கீரையில் நூற்றுக்கு 87 விழுக்காடு நீர் உள்ளது. இக்கீரை 2.8 விழுக்காடு புரதச்சத்தைக் கொண்டது. அன்றியும் 0.4 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 2.4 விழுக்காடு தாதுப்புக்களும் கொண்டது. மாவுப்பொருள்கள் இதில் 7.4 விழுக்காடு உள்ளன. அன்றியும் இக்கீரை 44 கலோ¡¢ சக்தியை நல்குகிறது.

100 கிராம் கீரையில் 364 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 52 மி. கிராம் மணிச்சத்தும் 38.5 மி.கிராம் புரதச் சத்தும் உள்ளன.

இந்தக் கீரை மருத்துவத்தில் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. கீரையை கறியாக்கி உண்ண காய்ச்சல், நடுக்கம், ஜன்னி, கபரோகம், வாதநோய் ஆகிய நோய்கள் நீங்கும். தாதுவிருத்திக்கும் இக்கீரை சிறந்ததாகும். தென்னாட்டில் பல நோய்களுக்கு இக்கீரை பத்திய பதார்த்தமாக வழங்கப்படுகிறது. இந்தக் கீரை உடலுக்கு வெப்பத்தைக் கொடுப்பதனால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஓர் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. பிரசவித்த பெண்களுக்குச் சீதனம் வராமல், இக்கீரையிலடங்கியுள்ள சத்துக்கள் பாதுகாக்கின்றன.

அத்துடன் பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்குச் சக்தியையும் பலத்தையும், கொடுக்கின்றன. அன்றியும் இக் கீரையிலுள்ள சத்துக்கள் தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழந்தைக்கு நோய் அணுகாமல் தடுக்கின்றன; குழந்தைக்குப் பலத்தையும் உரத்தையும் ஊட்டி வளர்க்கும் தன்மை பெற்றது. அதனால்தான் பிரவித்த பெண்களுக்கு அரைக்கீரையை உணவாகக் கொடுக்கும் பழக்கம் நம் நாட்டின் வழக்கத்தில் உள்ளது. பொதுவாக மருந்து கால் பங்குக் குணத்தை நல்குமேயானால் இக்கீரை முக்கால் பங்கு குணத்தை கொடுக்குமென்பர்.

அரைக்கீரையை மிளகு ரசத்துடன் உண்ண நோய்களைக் கண்டித்து நல்ல குணமளிக்கும். ஏனெனில் அரைக்கீரை சூடு; மிளகு நீர் குளிர்ச்சி. இவ்விரண்டும் ஒன்று சேருமேயானால் உடல் நலத்தைச் சமன்படுத்தி ஒரு சீராக வைத்திருக்க உதவுகிறது.

மேலே குறிப்பிட்டபடி அரைக்கீரையுடன் துவரம் பருப்பு உலர்ந்த மிளகாயும் சேர்த்து தாளிதம் செய்த அவியலானது இருமல், கபஇருமல் போன்ற நுரையீரல் காய்ச்சல்களைக் கண்டிக்கவல்லது. இந்தக் கீரையுடன் பெருங்காயமும், வெங்காயமும் சேர்த்துக் செய்த பொரியலானது ஜலதோஷம், ஜன்னி, பாதரசம், குளிர்க்காய்ச்சல் ஆகியவைகளை நீக்கும்.

பித்த கபசுரம், வாய் உருசியற்றுப் போதல், பசி இல்லாத நிலை அகியவைகளுக்கு அரைக்கீரையை பழம்புளியுடன் கடைந்து உண்ண வேண்டும். இவ்வாறு உண்பதினால் இந்த நோய்கள் நீங்கும்.

வாதம், வாய்வு, வாய்வு சம்பந்தப்பட்ட உடல்வலிகள் இவைகட்கு சுக்கு, பூண்டு, மிளகு, பெருங்காயம் சேர்த்துக் கடையல், குழம்பு, பொ¡¢யல் செய்து உண்டால் அந்த நோய்கள் குணமாகும். இக்கீரையை எந்தவிதமான நோய்கட்கும் உணவாகக் கொடுக்கலாம். இதனை நாள்தோறும் தொடர்ந்து உண்டு வந்தாலும்கூட எந்தவிதமான கெடுதலையும் உண்டாக்காது.


                                             மேலும்...

 


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்