அகத்திக்கீரை, நாம் உண்ணும் உணவு நன்றாகக் ஜீரணிக் உதவுகிறது.
நீர்க்கோவைக் காரணமாகத் தோன்றும் தும்மல் போன்று நோய்களுக்கு அகத்திக்
கீரையின் சாற்றையும், அகத்திப் பூவின் சாற்றையும் சம அளவு கலந்து
மூக்கில் இரண்டொரு சொட்டு விட்டுவந்தால் நோய் நீங்கும். பொதுவாக
நீர்கோவைக்கு அகத்தி இலைச்சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து உள்ளுக்குச்
சாப்பீட நல்ல குணம் கிடைக்கும். அடிபட்டு கன்றிப்போன வீக்கங்களுக்கு
அகத்திக் கீரையை அரைத்துச் சுடவைத்து பற்றாகப் போட்டால் சிறந்த குணம்
கிடைக்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி, அனல் ஆவிபிடிக்கக்
கடுமையான தலைவலி நீங்கும்.
மலோ¢யா போன்ற முறைக் காய்ச்சல்களுக்கு அகத்தி இலைச் சாற்றை ஒரு
நாளைக்கு ஒருதடவை இரண்டொரு துளிகள் மூக்கில்விட காய்ச்சலின் வேகம்
குறைந்து குணமடையும்.
சா¢யாக பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச்
சாப்பிட்டு வந்தால் நன்கு பால் சுரக்கும். மூளை தொடர்பான பிணிகள்
உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை உண்பதன் மூலம் நல்ல பயன் பெறலாம்.
அகத்திக் கீரையிலிருந்து ஒரு வகைத் தைலம் எடுக்கப்படுகிறது. இந்த
அகத்தித் தைலத்தைத் தேய்ப்பதினால் கண் குளிர்ச்சி அடையும்; பார்வை
தெளிவாகும்; மயிர் செழித்து வளரும், அகத்திப் பூவின் சாற்றைக் கண்
பார்வைக் குறைவை நீக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
அகத்தியின் பட்டையைப் பொ¢யம்மை எனப்படும் "லைசூ¡¢" நோய் காணப்பட்டால்
அதன் ஆரம்ப காலத்தில் கொடுக்கலாம். அம்மை நோயின் வேகத்தைத்
தணிப்பதற்கு விதிப்படி குடிநீர் செய்து கொடுக்கலாம்.
அகத்தி வேர் ஓர் சிறந்த மருந்தாக விளங்குகிறது. அகத்தி வேர் பட்டை
விதிப்படி குடிநீர் செய்து உட்கொள்ள மேகம், தாகம், மெய் எ¡¢வு, கை
எ¡¢வு, ஆண் குறியின் உள் எ¡¢வு, ஐம்பொறிகளை சேர்ந்த எ¡¢வு ஆகியவைகள்
நீங்கும்.
இவ்வளவு சிறந்த மருத்துவப் பயனுடைய இக் கீரையை அடிக்கடி உண்பதினாலோ
நாள் தவறாமல் சேர்த்துக் கொள்வதினாலோ நன்மைக்குப் பதில் தீமையே
அதிகமாகும். இவ்வாறு உண்பதினால் உடலிலுள்ள நல்ல இரத்தத்தையெல்லாம்
முறித்து வாய்வைப் பெருக்கிச் சோகை, பாண்டு முதலிய நோய்களை
உண்டாக்கும்.
அன்றியும் அகத்திக் கீரையை அதிகம் உண்டால் கடுவனும் வாயுவும்
உண்டாகும். அகத்திக் கீரை பத்தியத்தை முறிக்க வல்லது. ஆதலால்
மருந்துண்ணும் காலங்களிலோ பத்திய மிருக்கும் போதோ அகத்திக் கீரையை
உண்ணக் கூடாது.
ஆகையினால் இக் கீரையை நாள்தோறுமின்றி -வேண்டும் பொழுது கறியாகச்
சமைத்துண்பதே நல்லது. பொதுவாக வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு
வாரங்கட்கொரு முறையோ இக்கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வது நல்லது.
அகத்திமரம் மிளகு, வெற்றிலை முதலிய கொடிகளுக்குப் படரும் கொழு
கொம்பிற்காக பயி¡¢டுகிறார்கள். இது கொழு கொம்பாகப் பயன்படுவதோடு
அப்பயிர்களுக்கு நிழல் தரும் மரமாகவும் உதவுகிறது. தென்னையின்
ஆரம்பகால வளர்ச்சிக்கு நிழல் தேவைப்படுகிறது. அதற்கு நிழல் கொடுக்க
அகத்தியை வளர்க்கலாம். மேற்கிந்தியத் தீவுகளில் காபி மற்றும் மலையில்
வளரும் பழப்பயிர்களுக்குக் காற்றுத் தடுப்பானாக அகத்தியை நடுகிறார்கள்.
அகத்திக் கீரை மற்றும் அதன் பட்டை ஆகியவற்றிலிருந்து எடுக்கும்
சாற்றினை மீனவர்கள் தங்கள் வலைகளுக்கு உறுதியளிப்பதற்காகப்
பயன்படுத்துகிறார்கள். இதன் பட்டை தோல் பதனிடவும், சாயம் உண்டாக்கவும்
பயன்படுகிறது. பட்டையினுள்ளிருக்கும் நாரானது மிகவும் பயனுள்ளது.
இந்த நா¡¢ன் நீளம் சராசா¢ 2.7 மில்லி மீட்டர் இருக்கும். இதனால்
இந்நார் கயிறு செய்யப் பயன்படுகிறது.
அகத்தி மரத்தின் பட்டையை நீக்கினால் அதன் தண்டு வெண்மையாகவும்,
மெண்மையாகவுமிருக்கும், இத்தண்டு வெடிமருந்து செய்யப் பயன்படுகிறது.
விளையாட்டுப் பொம்மைகள் செய்யவும் பயன்படுகிறது.
மூங்கில் கிடைக்காத இடங்களில் தற்காலிகக் கூரை வேய உதவும் குறுக்குச்
சட்டங்களுக்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவர். இதற்கு நீண்டு வளர்ந்த,
கணுவு குறைந்த அகத்தி மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம் நாட்டில்
பெரும்பாலும் அகத்தியைத் தனியாகப் பயி¡¢டுவதில்லை. வெற்றிலைக்
கொடிக்கால்களில்தான் இதனை மிகுதியும் பயி¡¢டுகின்றனர்.
அகத்திச் செடி வளர, வளர இதன் கிளைகளை முறித்துவிட்டுக் கொண்டு வருதல்
நலம். இவ்வாறு செய்வதினால் மிகக் குறுகிய காலத்திலேயே அகத்த மரமாக
வளர்ச்சி பெற்றுவிடுகிறது.
அகத்தி எல்லாவித மண்ணிலும் வளரும். சிறிது களிப்பசையுடைய நிலம்
இக்கீரைக்கு ஏற்ற நிலமாகும். இந்நிலத்தில் இக்கீரை மிக நன்றாக
விளையக்கூடியது. மேல் மண் இறுக்கமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அகத்தி வறட்சியைத் தாங்கும் சக்தியுடையது. இது செப்படம்பர் முதல்
டிசம்பர் வரை நன்றாகப் பூக்கிறது. வெய்யிற்காலத்தில் காய்க்க
ஆரம்பிக்கிறது.
அகத்திச் செடிகளை விதை மூலம் எளிதாக உற்பத்தி செய்யலாம்.
கொடிக்கால்களில் பயி¡¢டும்போது வெற்றிலை நடுவதற்கு முள் திண்ணைப்
பாத்திகளில் நெருக்கமாக விதைத்து விடுவார்கள். செடிகள் சுமார் இரண்டடி
வளர்ந்தபின் வெற்றிலைக் கொடியை நடுவார்கள். பிறகு நெருக்கமாக
வளர்ந்துள்ள அகத்திச் செடிகளை ஓரளவிற்கு கலைத்துப் பிடுங்கி
விடுவார்கள்.
அகத்தி மிக வேகமாக வளரக் கூடிய பயிராதலால் வெற்றிலைக்கு மேல் வளர்ந்து
கொண்டே போகும். அடியிலிருந்து கிளைகள் கிளைக்க விடுவதில்லை.
வெற்றிலை நடும் வயல்களில் அதிகளவு தொழுஉரம் இருப்பதால் அந்த உரத்தைக்
கொண்டே அகத்தி செழித்து வளரும். மேல்க் கிளைகளிலிருந்து கீரையை
அடிக்கடி ஒடித்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
வீட்டுத் தோட்டங்களில் பயி¡¢டும் போது இரண்டு மீட்டர் இடை¨வெளியில்
குழி தோண்டி குழிகளில் நன்கு மக்கிய தொழுஉரம் இரண்டு கூடை இட்டு
மண்ணோடு கலந்துவிட வேண்டும். இவ்வாறு தயா¡¢க்கப்பட்ட குழிகளில்
ஐந்தாறு விதைகளை ஊன்றித் தண்ணீர் ஊற்றி வர ஏழெட்டு நாட்களில் முளைத்து
விடும்.
செடிகள் அரையடி வளர்ந்த உடன் நல்ல செடி ஒன்றை வைத்துக் கொண்டு
மற்றவைகளைப் பிடுங்கிவிடஇ வேண்டும் செடிகளுக்கு மூன்று நாட்களுக்கொரு
முறையாவது தண்ணீர் விட வேண்டும். நன்கு வளர்ந்தபின் பத்து நாட்களுக்கு
ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. அகத்தச் செடிகளுக்கு அடிக்கடி
தண்ணீர் விட்டால் அதிக மகசூல் கிடைக்கும். அதே சமயத்தில் நன்கு
வளர்ந்த செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சாவிட்டாலும் கூட ஓரளவு நல்ல
மகசூலைக் கொடுக்கும்.
தனிமரமாக இருக்கும்போது செடிகள் பத்து வருடத்திற்கு மேல் உயிரோடு
இருக்கும். ஆனால் மரங்கள் அதி உயரம் வளர்ந்து விடுவதால் கீரைகளைப்
பறிப்பது சிரமமாக இருக்கும் ஆகவே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செடிகளை
வைத்திருக்க வேண்டியதில்லை. செடிகளை அகற்றிவிட்டு வேறு புதிய கன்றுகளை
நட்டுக் கொள்ளலாம்.
(கே. பாலசுப்பிரமணியன்)
( கே. கருப்பஞானி)
தொடரும்...