கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
உடலின் ஒளியாய் இருக்கிறது கண். எனவே உனது கண் தூய்மையாக இருந்தால்
உடம்பு முழுவதும் ஒளி உள்ளதாய் இருக்கும்.
கண்கள் நமது உடலின் மிக மென்மையான முக்கிய மற்றும் போற்றத்தக்க
உறுப்பு என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அதற்கு
அளவுக்கு மீறின வேலைப்பளு கொடுத்து மற்றும் அதனைச் சா¢யான முறையில்
பாதுகாத்திடும் வழி முறைகள் தொ¢யாமல் கண் பார்வையைக் கெடுத்து கண்
பார்வை கோளாறுகளினால் அவதிப் படுகின்றனர். கண் பார்வை கோளாறுகளை சா¢
செய்ய இயலுமா? சா¢யான கண் பாதுகாப்பு முறைகள், உடம்பின் கழிவு
வெளியேற்றும் மற்றும் தேவையான பயிற்சிகள் கண் பார்வையை தெளிவடைவதற்கு
உதவிகள் செய்கின்றன. முயற்சி உடையார் பயன் அடைவர். நம்பிக்கையே
நல்வாழ்விற்கு அடிப்படை எந்த வயதிலும் கீழே கொடுத்துள்ள பயிற்சிகளை
செய்து பயன் அடையலாம்.
|
பயிற்சி ஆரம்பிக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை:
|
1. முடிந்தவரை பயிற்சியின் போது கண்ணாடி அணியத் தேவையில்லை.
2. வா¢சை கிரமத்தில் தான் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
3. குறைந்த கால அவகாசத்தில், முதல் சில பயிற்சிகள் மட்டும் செய்யலாம்.
4. கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும் உணவுகளான வெள்ளை சீனி, உப்பு
மற்றும் அளவுக்கு மீறிய பால் மற்றும் மாவுப் பொருள் குறைத்தல் நலம்.
5. காரட், பொன்னாங்கன்னி, எலுமிச்சை, பலா, மா, கொத்தமல்லி, பப்பாளி,
தக்காளி, முருங்கை, கருவேப்பிலை, சாத்துக்குடி, திராட்சை, நெல்லி,
வெள்ளா¢, போ£ட்சை, இளநீர் போன்ற உணவுகள் சாப்பாட்டில் அளவுடன்
சேர்த்தல் நலம்.
6. மலச்சிக்கல், டி.பி, ஆஸ்துமா, சளித் தொல்லை, இரத்த அழுத்தம் போன்ற
வேறு வியாதிகள் சேர்ந்து இருப்பின் அவைகளை சா¢ செய்த பிறகு கண்
பயிற்சிகள் செய்தால் மிகுந்த பயன் கிடைக்கும்.
7. கண் பயிற்சிகள் மையம் மற்றும் இயற்கை நல வாழ்வு முகாமில் சில
நாட்கள் கண் பயிற்சி பெறுவது மிக்க நலம்.
8. முந்திய இரவில் சா¢யாக தூங்காது வெகு நேரம் கண்விழித்து இருந்தால்
மறுநாள் கண்டிப்பாக சூ¡¢ய ஒளி பயிற்சிகள் செய்யக்கூடாது.
கண்காணி இல்என்று கள்ளம்பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் கள(வு) ஒழித்தாரே
-திருமந்திரம்
எந்த ஒரு நற்செயலுக்கும் பொறுமை வேண்டும் - இரண்டு அங்குல சதுரமுடைய
பஞ்சு அல்லது மெல்லிய துணியை எடுத்துக் கொண்டு சாதாரணமாக தண்ணீ¡¢ல் (நீர்
சூடாகவோ அல்லது குளிர்ந்தோ இருத்தல் கூடாது) நனைத்து மூடிய கண்
இமைகளின் மீது பரப்பிக் கொண்டு ஓய்வில் இருக்கவும், உட்கார்ந்த
நிலையிலோ, படுத்த நிலையிலோ, சாந்தி ஆசனத்திலோ இப்பயிற்சியை செய்யலாம்.
பயிற்சியின் கால அளவு :
10 நிமிடங்கள். ஜலதோஷம், ஆஸ்த்துமா, இருமல் போன்ற தொல்லைகள்
உடையவர்கள் அதை சா¢ செய்த பிறகு பயிற்சிகள் செய்யலாம்.
பயன்:
கண்களுக்கு தேவையான தெம்புடன் கூடிய இதமான ஓய்வு கிடைக்கிறது
தேவையற்ற சூடு தணிகிறது. கண் தசைகள் மற்றும் நரம்புகளில் கழிவு
இரத்தம் வெளியேறி புது இரத்தம் கிடைக்கிறது. கண் பார்வை பிரகாசம்
அடைகிறது. இரத்த அழுத்தக் குறைபாடு சா¢யாகிறது. மற்றும் சில
வியாதிகளுக்கும் இப்பயிற்சி மிக நல்லது.
கண் கழுவுதல்:
கண்களை மூடிக் கொண்டு கைகளில் நீரை எடுத்து மிக மெதுவாகக் கண் மற்றும்
முகத்தில் நீரை தெளித்துக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு
குறைந்தது ஏழு அல்லது எட்டு முறை கண்களைக் கழுவ வேண்டும். கழுவிய
பின்பு துணி கொண்டு கண்களை துடைக்காமல் அப்படியே காற்றில் உலர விடுதல்
மிகுந்த நலம் தரும்.
பயன்: முதல் பயிற்சியின் பலன் அனைத்தும் கிடைக்கும்.
அண்டஞ் சுருங்கின் அதற்கோர் அழிவில்லை.
பிண்டஞ் சுருங்கின் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கின் உபாயம் பலவுள
கண்டங் கருத்த கபாலியுமாமே.
கண் குவளை கொண்டு கழுவுதல் அல்லது கண் குளியல்:
கண் குவளையை நன்கு கழுவவும். அது நிரம்புமாறு சுத்தமான குடிக்கும்
நீரை ஊற்றிக் கொள்ளவும். (நீர் சூடாகவோ, குளிர்ந்ததாகவோ இருத்தல்
கூடாது) நன்கு முன்புறம் குனிந்து ஒரு கண்னை (அழுத்தாமல்) குவளை
நீ¡¢ல் மூழ்க வைக்க வேண்டும். இந்நிலையில் கண்களை பத்து முறை இமைக்க
வேண்டும். பின்பு புது நீர் குவளையில் நிரப்பி மற்ற கண்ணிற்கும்
இதுபோல் செய்தல் வேண்டும்.
பயன்:
கண்களில் தூசுகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் கண்களில் இருந்து
வெளியேறுகிறது. முதல் பயிற்சியில் கொடுத்துள்ள பலன் அனைத்தும்
கிடைக்கும்.
கண்களை இமைத்தல்:
நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம்,
கோமுகாசனம் இவைகளில் ஒன்றில் உட்கார்ந்து செய்தால் கூடுதல்
பலன்கிட்டும். இரு கண் இமைகளை 10 வினாடிகள் இறுக மூடிபின் நன்றாக
கண்களை வி¡¢த்து திறக்க வேண்டும். இதே போல் 20 முதல் 25 முறை செய்தல்
வேண்டும். பின் ஒவ்வொரு கண்ணிற்கும் தனியாக இமைத்தல் பயிற்சி செய்தல்
வேண்டும். இவைகளை எந்த நேரமும் செய்யலாம்.
பயன்: முதல் பயிற்சியின் பலன் கிடைக்கிறது. மற்றும் கண்களை
சுற்றியுள்ள நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள கழிவுகள் வெளியேற புது
வலிமை பெறுகின்றன.
மேலும்»