தன் குட்டியைத் தானே தின்னும் நாய், பாம்பு பற்றி
கேள்விப்படுகிறோம். அவை எல்லாம் புலால் உண்பவை. ஆனால் தன்
வயிற்றுக் குழந்தையை பிறக்கும் முன் தானே கொல்லும் கொடூர
தாயைப் பற்றி கேள்விப்படுகிறோம் இப்போது! இனி அம்மா என்று
யாரை அழைப்பது?
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
Abortion is Sin
தாய் வயிற்றில் வளரும் கரு மனமுள்ள ஐந்து இந்தி¡¢யம்
உடைய ஜீவன். அதனை வயிற்றிலேயே மடியச் செய்தல் மகாபாபம்
ஆகும்! அது தாய்மையைக் கொல்லுதலாகும்! மனிதத் தன்மையைக்
கொல்லுதலாகும்! தாயே தன் குழந்தைக்கு எமன் ஆகிறாள்!
கருக்கலைப்பு சாதாரண "ஆபரேஷன்" அன்று. அது திட்ட மிட்டு
செய்யும் மனிதக் கொலை!
கருக்கலைப்பு செய்யும் பெண்களில் 33 சதவீதம் மீண்டும்
குழந்தை பெற முடிவதில்லை!
கருக்கலைப்பு செய்யும் பெண்களில் 30 சதவீதம் மன நோய்க்கு
இரையாகி வாழ்வை இழக்கின்றனர்!
பொ¢ய உயிரைக் காக்க சிறிய உயிரைக் கொல்லுதல் "அபார்ஷன்
" என்பது தவறு! உயி¡¢ல் பொ¢யது சிறியது என்பது இல்லை!
இன்று கொலை செய்யப்படுவது குழந்தையல்ல! அது நாளைய ஞானி,
விஞ்ஞானி, வழிகாட்டும் தலைவன், தலைவி, கவிஞன், சிந்தனையாளன்
சிறந்த படைத்தலைவன் என்பதை நினைவில் கொள்க.!
இத்தகைய பஞ்சேந்தி¡¢ய இம்சை செய்யும் மகா பாபத்தை
செய்வோர் செய்யத் தூண்டுவோர் தார்மீக கா¡¢யங்களில் - தேவ
குரு சேவை தானம் முதலான கா¡¢யங்களில் - ஈடுபட முடியாது.
ஈடுபட விரும்பினால் நல்ல குருவிடம் சென்று தன் பாபத்தை
மறைக்காமல் கூறி பெரும் பிராயச்சித்தம் எடுத்த பின்பே
செய்ய முடியும்.
- பகவான் மகாவீரர் 2600-ம் ஜன்ம கல்யாண விழா ஆண்டு
வெளியீடு
(6.4.2001- 5.4.2002)