menu






 சிறுவர் பக்கம >> சிறுவர் பாடல்

கிழமைகள்

பள்ளி திறக்கும் திங்கள் தான்
பார்! பார்! அடுத்து செவ்வாய் தான்
பொன்கிடைத்தாலும் கிடைக்காத
புதனே அடுத்து வரும் நாளாம்!
வியாழன் என்றால் வெறுப்புண்டோ?
வீட்டைச் சுத்தம் செய்கின்ற
வெள்ளிக் கிழமை தொ¢யாதோ?
தலையில் எண்ணெய் தேய்த்தேதான்
குளிக்கும் நாளே சனியாகும்!
அடுத்த நாளே நமக்கெல்லாம்
படுத்து உறங்கிச் சுகம் காணக்
கொடுத்து வைத்த திருநாளாம்
அந்த நளைத் தொ¢யாதோ?
அதுதான் ஞாயிறு பு¡¢யாதோ?
வார நாட்கள் ஏழாகும்
வாவா! தம்பி! தெளிவாகும்.