menu






 சிறுவர் பக்கம >> சிறுவர் பாடல்
காகம்

காகம்ஒன்று வந்தது
கார்கார் என்றது
வேகமாகச் சென்றது
வேலி முள்ளை எடுத்தது

புளிய மரத்துக் கிளையிலே
புதிய வீடு செய்தது
செல்லக் குஞ்சு தன்னையே
சேர்த் தணைத்துக் கொண்டது!

அம்மாபோட்ட தோசையை
அலகால் கொத்திச் சென்றது
தான் பெற்ற குஞ்சுக்குத்
தந்து தானும் உண்டது!