menu






 சிறுவர் பக்கம >> சிறுவர் பாடல்

பள்ளி மணி

பள்ளிமணி அடித்ததும்
பறந்து நாங்கள் செல்லுவோம்!
எல்லோரும் ஒன்று கூடி
இறை வணக்கம் பாடுவோம்!

வகுப்பறைக்குச் சென்றதும்
வாத்தியாரை வணங்குவோம்
வகுத்தல் கூட்டல் கணக்கையெல்லாம்
வருத்தமின்றிச் செய்குவோம்!

இடைவேளை நேரத்தில்
எல்லாநண்பரும் கூடியே
ஓடி ஆடி விளையாடி
உடலை நன்கு தேற்றுவோம்

மாலைமணி அடித்ததும்
மாணவர்கள் கூடுவோம்
ஜனகன பாட்டுப் பாடி
ஜெய்ஹிந் என்று கூறுவோம்!