திருடர்களின் திறமை
ஒரு சமயம் பிராமணன் ஒருவன் ஒரு யாகம்செய்ய விரும்பினான். அதற்கு ஒரு
பசு தேவைப்பட்டது. அதைத் தானமாகப் பெற்றுவர பக்கத்து ஊருக்குச்
சென்றான். பசு கிடைக்கவில்லை. ஒரு கொழுத்த ஆடு கிடைத்தது. அதை தோளில்
கமந்தபடி திரும்பிக் கொண்டிருந்தான்.
மூன்று திருடர்கள் ஆட்டுடன் வரும் பிராமணனைப் பார்த்தனர். அந்த ஆட்டை
அபகா¢க்கத் திட்டமிட்டனர். ஒருவன் பிராமணன் முன்சென்று, “ஐயா...
பிராமணரே... என்ன இது அநியாயம்? நாயைச் சுமந்து செல்கிறீர்களே...
என்றான். பிராமணன் கோபத்துடன், “நீ குருடனா? இது நாய் இல்லை. ஆடு!”
என்று கூறிவிட்டு நடந்தான்.
சிறிது தூரம் சென்றதும் இன்னொருவன் வந்து “பிராமணரே... இறந்து போன
கன்றுக்குட்டியைச் சுமந்து செல்கிறீர்களே! உங்களுக்கு என்ன கஷ்டகாலம்?
“ என்றான். அதைக் கேட்டு கோபத்துடன், “உயிருடன் இருக்கும் ஆட்டை
இறந்த கன்றுக்குட்டி என்கிறாயே?” என்று சொல்லியபடி நடந்தான் பிராமணன்.
இன்னும் கொஞ்சதூரம் சென்றதும் முன்றாமவன் வந்து “ஐயா.. பிராமணரே! நீர்
கழுதையைச் சுமந்து செல்லலாமா?” என்று கேட்டான். பிராமணன் தன்
தோளின்மீது இருந்ததைப் பார்த்தான். ஆடாகத் தொ¢ந்தது. ஆனால், இது
மற்றவர்களுக்கு வெவ்வேறு உருவமாகத் தொ¢கிறதே... அதனால், இது பேயாக
இருக்குமோ?” என்று நினைத்து பயந்து, ஆட்டைக் கீழே போட்டுவிட்டு
ஓடினான்.
திருடர்கள் நினைத்தபடி ஆட்டை எடுத்துக் கொண்டு சென்றனர்.
நீதி:- ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை
ஏமாறுபவர்களும் இருப்பார்கள்!
(தொடர்ந்து வரும்)