ஒரு வார்த்தை போதும்
ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் தீபா என்ற மாணவி
சென்றாள். தெய்வ தா¢சனத்திற்குப் பிறகு அவள் மடத்து சந்நியாசி
ஒருவரைச் சந்தித்தாள். அவர் அவளது படிப்பைப் பற்றி விசா¡¢த்ததும்
பற்றிக்கொண்டது அவளது நெஞ்ச நெருப்பு.
"சுவாமி, நான் நன்றாகப் படிக்க வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை.."
என்று தன் பிரச்னை முழுவதையும் கொட்டித் தீர்த்தாள் தீபா.
சென்னை, சாந்தோம் தூய அந்தோணியார் மேனிலைப் பள்ளி மாணவியான தீபா
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு நன்கு படிக்க ஆசை. ஆனால்
யாரும் அவளை ஊக்கப்படுத்துவதில்லை. 'நீ ஒரு சோம்பேறி. படித்து என்ன
செய்யப் போகிறாய்?' என்று அவளைப் பார்த்து பலரும் நினைப்பதுண்டு.
சிலர் சொல்லிவிடுவதே உண்டு.
இதையெல்லாம் தீபா கேட்பதோடு சா¢; மனதில் கொள்வதில்லை. நன்கு படிக்க
வேண்டும் என்பதுதான் அவளது லட்சியம். ஆனாலும் படிக்க ஆரம்பித்தால்,
அவளது மனம் எங்கேயோ பறந்து விடும். கஷ்டப்பட்டுப் படிப்பதெல்லாம் பா£ட்சை
பயத்தில் பதுங்கிப் போகும்.
தீபாவின் பிரச்னைகளைக் கேட்ட சுவாமி, அவளிடம் உள்ள உண்மையான குறையைக்
கண்டார். தன்னம்பிக்கை என்ற 'டானிக்' அவளுக்குத் தேவைப்பட்டது; ஆதலால்
விவேகானந்தரைப் பற்றி அவளிடம் கூறினார்.
அதனால் தீபாவிடம் தன்னம்பிக்கை என்ற நெருப்பு லேசாகப் புகைய
ஆரம்பித்தது. மடத்திற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள். அதோடு, ஏழை
மாணவர்களுக்காக மடம் நடத்தும் 'இலவச டியூஷன் சென்டா¢ல்' தீபா சேர்ந்து
படிக்க ஆரம்பித்தாள்.
பா£ட்சையோடு பயமும் வந்தது! 'இந்த அரையாண்டுத் தேர்வும்
அரைகுறையாகிவிடுமோ நான் நல்ல மதிப்பெண்கள் பெறுவேனோ?'என்றெல்லாம் பயம்
அவளைப் பிய்த்தது.
என்றாலும் அவள் விடாது விவேகானந்தா¢டம் தன்னம்பிக்கையும்
விடாமுயற்சியும் ஸ்ரீசாரதாதேவியிடம் கல்வியையும் நினைவாற்றலையும்
வேண்டிப் பிரார்த்தித்து வந்தாள்.
பிப்ரவா¢ 14 அன்று தீபாவிற்குப் பா£ட்சை. 'இனி மேலாவது ஒழுங்காகப் படி'
என்று 'ப்ராக்ரஸ் ¡¢ப்போர்ட்டில்' திட்டாத குறையாகத் தலைமையாசி¡¢யை
எழுதியிருந்தது தீபாவின் தூக்கத்தைக் கெடுத்து வந்தது.
பயமும் தன்னம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்துப் போ¡¢ட்டன. அந்தப்
போராட்டத்தைப் போக்கும் மருந்தாக மடம் இருந்தது.
அந்தச் சமயத்தில்தான் அவள் அதைப் படித்தாள். "நான் எதையும் சாதிக்க
வல்லவள்" என்று சொல். 'நீ உறுதியுடன் மட்டும் இருந்தால், பாம்பின்
விஷம் கூட சக்தியற்றதாகிப் போய்விடும்' என்ற சுவாமி விவேகானந்தா¢ன்
உறுதிமொழிதான் தீபாவை அவளது பயத்திலும் பிரகாசிக்க வைத்தது.
'என்னை நன்றாக எழுத வையுங்கள்' என்று இறைவனை வேண்டி பா£ட்சை எழுதினாள்.
தெய்வ நம்பிக்கையோடு தன்னம்பிக்கையும் துளிர்த்தது.
பா£ட்சையின் முடிவு வந்தது. தீபாவின் அவநம்பிக்கைக்கும் ஒரு முடிவு
வந்தது. ஆம், தீபா தற்போது எழுதிய பா£ட்சையில் நல்ல மதிப்பெண்கள்
பெற்று 48-லிருந்து 21-ஆவது தரத்திற்குத் தாவியிருக்கிறாள்.
மாணவ மாணவிகளே, தீபாவைப் போல் நீங்களும் உங்கள் படிப்பில் உள்ள
அவநம்பிக்கை, ஆர்வமின்மை, பா£ட்சைப் பயம், மறதி போன்ற விஷயங்களை வீ¡¢யம்
இழக்கச் செய்யுங்கள். அவ்வாறு செய்ய விவேகானந்தா¢டமிருந்து
தன்னம்பிக்கை, மனோதிடம், திறமை போன்ற ஒரு சில செய்திகளே போதும்.
மேலும்>>