அச்சந்தவிர்
- நல்லசிவம்.
வினாயகபுரம் கிராமத்தின் எல்லையோரத்தில் ஆறு ஒன்று இருந்தது.
தொடர்ந்து பெய்து முடித்த அடைமழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் கரை
புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
கிராமத்துச் சிறுவர்கள் எல்லோரும் அந்த ஆற்றில் நீந்திக் குளித்துக்
கொண்டிருந்தார்கள்.
வழக்கம் போல் கணபதியும் மணியும் ஆற்றில் குளிக்க வந்தார்கள்.
பள்ளித் தோழர்களான இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சேர்ந்து செல்வது
வழக்கம். எனவே இப்போதும் கூட இருவரும் சேர்ந்தே ஆற்றுக்கு வந்தனர்.
சிறுவன் கணபதி தனது ஆடைகளை எல்லாம் களைந்துவிட்டு ஆற்றில் இறங்கினான்.
மணியோ ஆற்றங்கரை மணல்மேட்டின் மீது அமர்ந்து கொண்டான்.
"கணபதி" நீ மட்டும் குளித்துவிட்டு வா! நான் கரையில் அமர்ந்து
கொள்கிறேன்" என்றான்.
அதனைக் கேட்ட கணபதியோ!"மணி எதற்காக இப்படி பயப்படுகிறாய்! நானும்
உன்னைப் போன்றவன்தானே! எவ்வளவு ¨தா¢யமாக ஆற்றில் இறங்கி நீந்திக்
குளிக்கின்றேன். என்னைப் போன்று நீயும் குளிக்க வேண்டியது தானே!"
என்று கூறினான்.
"வேண்டாம் கணபதி! வேண்டாம்! ஆற்றில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது. எனக்கு
நீச்சல் சா¢யாகத் தொ¢யாது. நீ மட்டும் நீந்திக் குளிப்பதை நான்
கரையில் நின்றபடி வேடிக்கை பார்க்கிறேன்" என்று கூறினான் மணி.
மணி எதற்கெடுத்தாலும் அச்சப்படுகிறான். அவனின் அச்சத்தைப் போக்க
வேண்டும் என்று மனதுள் நினைத்த கணபதி உடனே தன் ஆடைகளை எல்லாம்
மீண்டும் அணிந்து கொண்டு மணியைப் பார்த்தான்.
"நண்பா! நீயும் குளிக்கவில்லையென்றால் நானும் குளிக்க மாட்டேன். நாம்
இருவரும் ஆற்றின் கரையின் வழியாக சிறிது தூரம் நடந்து செல்லலாம்'
என்று கூறினான்.
கணபதியின் பேச்சுக்கு இணங்கியவாறு மணியும் கணபதியோடு சேர்ந்து கொண்டு
நடக்கலானான்.
இருவரும் ஆற்றங்கரையில் சிறிது தூரம் நடந்து வந்தனர்.
அப்போது ஒன்றிரண்டு மீன் கொத்திப் பறவைகள் தண்ணீ¡¢ன் மேலே பறந்தவாறு
பின்னர் தண்ணீ¡¢ல் மூழ்கி மீன்களைப் பிடித்துக் சென்று கொண்டிருந்தன.
கணபதி மணியை பார்த்தான் "மணி! அதோ அந்த மீன் கொத்திப் பறவைகளைப்
பார்த்தாயா? ஆகாயத்தில் பறந்தபடியே மீன்கள் இருப்பதை அறிந்து பின்னர்
தண்ணீ¡¢ல் மூழ்கி மீன்களைப் பிடித்துச் செல்கிறதே! அதன் ¨தா¢யத்தைக்
கவனித்தாயா? இந்த சாதாரணப் பறவைகளுக்கு இருக்கின்ற ¨தா¢யம் கூட
உன்னிடம் இல்லையே தண்ணீ¡¢ல் மூழ்கி மீன்களை பிடிக்கின்ற போதே, நாம்
உள்ளேயே சென்றுவிடுவோம் என்று அந்தப் பறவைகள் அச்சப்படவில்லையே.
நீதான் சுத்த பயந்தாங்கொள்ளியாக இருக்கின்றாய்" என்றான்.
மணி மீண்டும் ஒரு முறை அந்த மீன் கொத்திப் பறவைகளைப் பார்த்தான்.
தன் செயலை நினைத்து நினைத்து வெட்கமடைந்தான்.
"நண்பனே! இந்தப் பறவைகளின் மூலம் நான் பாடம் படித்துவிட்டேன். இனிமேல்
ஆற்று நீ¡¢ல் குளிப்பதற்கு அச்சப்படமாட்டேன். இதோ இப்போதே நாம்
குளிக்கலாம் என்று தன் ஆடைகளை எல்லாம் கழற்றத் தொடங்கினான்.
மணியின் திடமான முடிவை கணபதி பாராட்டினான்.
"நண்பனே! உன் மனமாற்றத்தைக் கண்ட நான் மகிழ்ச்சியடைகிறேன். நம் இளம்
வயதில் நமக்கு பயமே இருக்கக் கூடாது! பயம் நம் வாழ்க்கையின்
முன்னேற்றத்தையே கெடுத்துவிடும். இனிமேல் உன்னிடம் அச்சம் இருக்காது
என்று நம்புகிறேன்" என்றான்.
தன் நண்பன் தனக்கு கூறிய அறிவுரைகளை அன்போடு ஏற்றுக் கொண்ட மணி.
அன்றிலிருந்து தன்னை ¨தா¢யச் சிறுவனாக மாற்றிக் கொண்டான்.
அச்சத்தை தவிர்த்து வாழ்வதால்
நம் வாழ்க்கை மேன்மையடையும்.
மேலும்>>