menu






 சிறுவர் பக்கம >> விஞ்ஞானத்தில் வினாடி-வினா


விஞ்ஞானத்தில் வினாடி-வினா

ஆசி¡¢யர் : தேவமூர்த்தி

1. ஆற்றின் ஒரு கரையில் இருந்து ஒலி எழுப்பினால் அது மறு கரையில் இரு முறை ஒலி ஏற்படுத்துவது ஏன்?

நீர் ஓர் ஒலி கடத்தி, காற்றைவிட வேகமாக ஒலியைக் கடத்தும் சக்தி வாய்ந்தது. எனவே ஒரு கரையில் எழுப்படுகிற ஒலி மறு கரையில் நீ¡¢ன் மூலமாக முதலாவதாகவும் காற்றின் மூலமாக இரண்டாவதாகவும் ஒலிக்கிறது.

2. தண்ணீரை விட அதன் நுரை வெண்மையாகத் தொ¢வது ஏன்?

தண்ணீ¡¢ன் மேல் விழும் ஒளிக் கதிர்கள் நீ¡¢ல் ஊடுருவி உள்ளே சென்றுவிடும். ஆனால் நீ¡¢ன் நுரை மீது விழும் ஒளிக்கதிர் பிரதிபலிக்கிறது. எனவே நீ¡¢ன் நுரை வெண்மையாகத் தொ¢கிறது.

3. மனித உடலில் உள்ள இரத்தத்தின் வகைகள் யாவை?

இரத்தத்தை நான்கு வகைகளாகப் பி¡¢த்துள்ளனர். அவை A, B, AB, O என்பனவாகும்.

4. நமது எடையில் இரத்தத்தின் எடை என்ன விகிதத்தில் உள்ளது?

நமது உடலின் எடையில் இரத்தத்தின் எடை 9% ஆகும்.

5. நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?

சர்ஜேம்ஸ்வாட் என்பவர் நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தார்.

6. பருமனான கம்பி அல்லது மெல்லிய கம்பி இவற்றில் அதிக சுருதியை ஏற்படுத்த எந்த வகைக் கம்பி பயன்படுத்தப் படவேண்டும்?

மெல்லிய கம்பி பயன்படுத்தப்பட வேண்டும்.

7. சுரமானி என்றால் என்ன?

இழுத்துக் கட்டப்பட்டுள்ள கம்பிகளின் அதிர்வுகளைக் கண்டறியப் பயன்படும் கருவி சுரமானி என்பதாகும்.

8. தண்ணீ¡¢ல் மூழ்கும் இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதப்பது ஏன்?

தண்ணீ¡¢ன் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைக் காட்டிலும் குறைவு. எனவே இரும்பு குண்டு நீ¡¢ல் மூழ்குகிறது.

பாதரசத்தின் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைவிட அதிகம். எனவே பாதரசத்தில் இரும்புக் குண்டு மிதக்கிறது.

9. மிக விரைவில் ஆவியாகும் திரவம் எது?

ஆல்கஹால்

10. மனித உடலில் உள்ள எலும்புகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?

மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206

11. தங்கம், பாதரசம் இவற்றின் அடர்த்தி எண்களைக் கூறுக?

தங்கத்தின் அடர்த்தி எண் 19.3 கிராம். பாதரசத்தின் அடர்த்தி எண் 13.6 கிராம்.

12. கடலின் ஆழம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கடலின் அடிப்பகுதியில் ஒருவெடிகுண்டு வெடிக்கச் செய்வர். அந்த வெடியின் ஒலிகரையை வந்தடையும் நேரத்தை ஹைடிரோ போன்கள் என்ற இயந்திரத்தில் பதிவு செய்து கணக்கிட்டு கடலின் ஆழத்தைக் கணக்கிடுகின்றனர்.

13. ரயில் எஞ்சினின் முன் உள்ள விளக்குகளின் ஒளி அதிக தூரம் வரை தொ¢கிறது. சாதாரண மின் விளக்குகள் அவ்வளவு தொலைவு தொ¢வதில்லையே ஏன்?

ரயில் எஞ்சின் முன் விளக்குகளில் குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை ஆடிகள் தம் மீது விழும் ஒளியைப் பிரதிபலித்து வெகு தூரம் வரை பாய்ச்சும் தன்மை உடையது.

14. சிறிய இரும்புகுண்டு தண்ணீ¡¢ல் மூழ்கி விடுகிறது. ஆனால் மிகப் பொ¢ய கப்பல் நீ¡¢ல் மிதக்கிறது. அது எப்படி?

சிறிய இரும்புகுண்டு தண்ணீ¡¢ல் மூழ்கும்போது அது வெளியேற்றும் தண்ணீ¡¢ன் அடர்த்தி எண்ணைவிட இரும்பு குண்டு அதிக அடர்த்தி உடையது. எனவே இரும்பு குண்டு நீ¡¢ல் மூழ்குகிறது.

பொ¢ய கப்பல் நீ¡¢ல் மிதக்கும் போது அதனால் வெளியேற்றப்படும் தண்ணீ¡¢ன் அடர்த்தி கப்பலின் எடையைவிட அதிகம். எனவே கப்பல் மிதக்குகிறது.

15. மயக்கமடைந்தவர்களைத் தரையில் கிடத்தும் போது தலை சற்று தாழ்வாகவும், உடல் சற்று மேலாகவும் கிடத்த வேண்டும் ஏன்?

தலைப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும் என்பதற்காக. ரத்த ஓட்டம் அதிகமானால் விரைவில் மயக்கம் தெளிவு பெறும்.

16. ஏ¡¢, குளங்களில் காணப்படும் நீ¡¢ன் மேற்பகுதி வெப்பமாக இருக்கும். ஆனால் நீ¡¢ன் அடிப்பகுதி குளிர்ச்சியாகவே இருக்கும் ஏன்?

நீர் ஓர் அ¡¢தில் கடத்தி, எனவே வெப்பம் நீ¡¢ன் மேற் பகுதியிலேயே ஆவியாகி சென்று விடுகிறது. ஆகவே நீ¡¢ன் அடிப்பகுதி குளிர்ச்சியாக இருக்கிறது.

17. பூமியின் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் யார்?

சர்ஐசக் நியூட்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி பூமியின் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். இவர் 1642 ஆம் ஆண்டு லிங்கன்ஷயர் எனும் இடத்தில் பிறந்தார்.

18. கோடை காலத்தை விட குளிர்காலத்தில் நாம் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம் ஏன்?

கோடை காலத்தில் வெப்பத்தின் காரணமாக கழிவு நீர்வியர்வையாக வெளியேறுகிறது. குளிர்காலத்தில் அதிக வியர்வை ஏற்படுவதில்லை. எனவே குளிர் காலத்தில் நாம் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம்.

19. காற்று வேகமானி (Anemo meter) என்றால் என்ன? அதன் பயன் யாது?

காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவிக்கு காற்று வேகமானி என்று பெயர். இது வானிலை ஆராய்ச்சி நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.

20. வானில் ஏற்படும் இடி, மின்னல் பூமியை வந்தடையும் போது இடி ஓசை இரண்டாவதாகவும் மின்னல் ஒளி முதலாவதாகவும் வந்தடைவதேன்?

ஒலியின் வேகத்தைவிட ஒளி (மின்னல்) பாயும் வேகம் அதிகம். எனவே இடி இரண்டாவதாகவும் மின்னல் முதலாவதாகவும் பூமியை வந்தடைகின்றன.

21. மனித உடலில் மார்பறையையும் வயிற்றறையையும் பி¡¢க்கும் சுவா¢ன் பெயர் என்ன?

உதரவிதானம்.

22. எலும்பு மண்டலம் என்பது யாது? அதன் பயன் என்ன?

உடலில் அடங்கியுள்ள எல்லா எலும்புகளையும் மொத்தமாக எலும்பு மண்டலம் என்பர். இவை உடல் உறுப்புகளின் பாதுகாப்பிற்கும், ஆதரவு இயக்கம் ஆகியவற்றிற்கும் பயன்படுகின்றன.

23. தசைகளின் பயன் யாது?

உடல் உறுப்புகளின் அசைவிற்கும், இயக்கத்திற்கும் இணைப்பிற்கும் பயன்படுகிறது.

24. உணவு ஜீரண மண்டலம் என்பது யாது? அதன் பயன் யாவை?

வாய், தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், சொ¢ப்பு நீர் சுரப்பிகளும் உணவு ஜீரண மண்டலம் ஆகும். இவை உணவு ஜீரணிக்கவும், உட்கிரகிக்கவுமே உதவுகின்றன.

25. சிறுநீரகங்கள் சா¢யான முறையில் வெளியேறுவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

சிறுநீர் வெளியேறுவதால் ரத்தத்தின் காரத் தன்மை காக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள கழிவு நீர் போக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள யூ¡¢யா, யூ¡¢க் அமிலம் போன்ற கழிவுப் பொருட்களும் நச்சு கிருமிகளும் வெளியேற்றப்படுகின்றன. உடலில் இரத்தத்தின் அளவை மற்றும் வெப்ப அளவைச் சீராகப் பாதுகாத்து வைக்கிறது.

26. கொதிக்க வைத்த பிறகு குளிர்ச்சியான நீ¡¢ல் மீன் உயிர் வாழ முடியாது ஏன்?

நீரைக் கொதிக்க வைக்கும்போது மீன் சுவாசிகத் தேவையான ஆக்ஸிஜன் அந்நீ¡¢ல் இருந்து வெளியேறி விடுகிறது. எனவே மீன் உயிர் வாழ முடிவதில்லை.

27. சளி பிடித்திருக்கும் போது காது சா¢யாகக் கேட்பதில்லையே ஏன்?

யூஸ்டேனியன் எனும் குழாய் சளிப் படலத்தினால் அடைக்கப்படுகிறது. எனவே செவிப்பறையின் காற்றழுத்தம் இருபுறமும் சமமாக இராது. இது செவிப்பறையின் அதிர்வை பாதிக்கிறது. எனவே சளி பிடித்திருக்கும் போது காது சா¢யாக கேட்பதில்லை.

28. இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

மரங்கள், காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன. மனிதர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. எனவே இரவு நேரங்களின் மரத்தின் கீழ் தூங்கக்கூடாது.

29. நாம் உலகில் காணும் பொருட்கள் எவ்வகை நிலைகளில் காணப்படுகின்றன?

மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. 1. திண்ம நிலை 2. நீர்மநிலை 3. வாயு நிலை

30. அணு அமைப்பைப் பற்றி உலகுக்குச் சா¢யானபடி எடுத்துக் கூறிய அறிவியல் மேதை யார்?

ரூதர்·போர்டு

31. எலக்ட்ரான் பாதைகளைப் பற்றி ஆராய்ந்த அறிவியலார் யார்?

பா¢, லூயிஸ், லாங்யூர்.

32. மின்னாற் பகுப்பு விதி முறைகளைக் கண்டறிந்தவர் யார்?

மைக்கேல் பாரடே

33. அல்லி வட்டம் எத்தனை வகைப்படும்?

நான்கு வகைப்படும்.

34. மூட்டு என்றால் என்ன?

மனித உடலில் இரண்டும் அதற்கும் மேற்பட்ட எலும்புகள் ஒன்றாக இணைந்திருப்பது மூட்டு ஆகும்.

35. இரும்பின் வகைகளைக் கூறு?

இரும்பை மூன்று வகைகளாகப் பி¡¢க்கலாம்.
அவை யாவன 1. தேனிரும்பு 2. வார்ப்பிரும்பு, 3. எ·கு இரும்பு.


                                       தொடரும»