menu






 சிறுவர் பக்கம >> நீதிக்கதை-2

பேராசை பெருநஷ்டம்

ஒரு சமயம் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. எங்கும் வெள்ளம் கரைபுரண்டு ஓட, மக்கள் தத்தளித்தனர். பலர் நீ¡¢ல் அடித்துச் செல்லப்பட்டனர். மக்களைக் காப்பாற்ற ஒரு படகு அனுப்பப்பட்டது. மக்கள் தாம் உயிர் தப்பினால் போதுமென்று தம் பொருள்களை எல்லாம் துறந்து படகில் ஏறினர்.

பண ஆசையுள்ள ஒருவன், வெள்ளம் திரண்டு வருவதைக் கண்டதும், முதலில் தன் பணத்தையெல்லாம் துணியில் வைத்து தன் இடுப்பில் கெட்டியாகக் கட்டிக் கொண்டிருந்தான். அவனும் படகில் ஏறினான்.

நீ¡¢ல் சென்று கொண்டிருந்த போது சூறாவளிக் காற்று வரவே, படகு கவிழ்ந்துவிட்டது. நீச்சல் தொ¢யாதவர்கள் நீ¡¢ல் முழ்கிவிட்டனர். தொ¢ந்தவர்கள் கரையை நோக்கி நீச்சலடித்துக் கொண்டிருந்தனர்.

பண ஆசையுள்ளவன் நீச்சல்வீரன் என்று பெயர் பெற்றவன். அவன் இடுப்பில் கனம் இருந்ததால் வேகமாக நீந்தமுடியாமல் திணறினான். அருகில் இருந்தவர்கள், இடுப்பில் உள்ளதை அவிழ்த்துவிடு, உயிர்தப்பலாம் என்றனர். ஆனால், அவன் பணத்தை இழக்க சிறிதும் விரும்பவில்லை. இடுப்பில் கணம் அதிகமாகவே நீந்த முடியாமல் கஷ்டப்பட்டு கடைசியில் நீருக்குள் மூழ்கினான். ஆபத்தில் பணம் அவனைக் காப்பாற்றவில்லை. அவன் உயிருக்கு அது எமனாக அமைந்தது.

நீதி:-
பேராசை பெருநஷ்டம்
ஆசையே நம் துன்பத்திற்கு மூல காரணம்.
-புத்தர்.