வண்டிக்காரனும் தேவதையும்
ஒரு வண்டிக்காரன் தன் வண்டியை ஓட்டிக்கொண்டு போனான். வழியில் ஓர்
இடத்தில் சகதி அதிகமாய் இருந்தபடியால் சக்கரங்கள் அதில்
பதிந்துவிட்டன. மேலே போக முடியவில்லை. உடனே வண்டிக்காரன் தன் இஷ்ட
தேவதையை நினைத்துப் பிரார்த்தனை செய்தான்; தன் வண்டியை சகதியிலிருந்து
மீட்கும்படி கோ¡¢னான். தேவதை வந்தது. வண்டிக்காரனைப் பார்த்து, "அடே
சோம்பேறி, நீ வண்டியை நகர்த்த ஒரு முயற்சியும் செய்யாமல் என்னைப்
பிரார்த்தனை செய்கிறாயே, முதலில் உன் கடமையைச் செய். மாடுகளை அடித்து
முடுக்கிவிடு. அப்புறம் சக்கரத்தில் உன் தோளைக் கொடுத்துத் தூக்கி
விடு, இந்த இரண்டையும் செய்த பின்பும் வண்டியை நகர்த்த என் உதவி
வேண்டி இருந்தால் கேள், செய்கிறேன்" என்று சொல்லிற்று.
முயற்சி உடையவனுக்குத்தான் தெய்வமும் உதவி
செய்கிறது.
மேலும்>>