நா¢யும் சப்பாத்திக்கள்ளியும்
வேட்டை நாய்களுக்குப் பயந்து நா¢ ஓடி வந்து கொண்டிருந்தது. ஒரு
வேலியைத் தாண்ட அது குதித்தது; வேலிக்கு அப்புறமுள்ள சப்பாத்திப் புதா¢ல்
போய் விழுந்தது. சப்பாத்தி முட்கள் அதன் கால்களை குத்திக்
கிழித்துவிட்டன. கோபமடைந்த நா¢, கால்களை நக்கிக் கொண்டே அந்தச்
சப்பாத்திப் புதரைச் சபித்தது.
சப்பாத்தி புதர் சொல்லிற்று: "கோபப்படாதே, எல்லையைத்
தாண்டுகிறவர்களைத் தடுப்பதுதானேப்பா என் வேலை? என்மேல் கோபிக்கலாமா?"
எல்லைக்கோட்டைத் தாண்டுவதால் துன்பமே நேரும்.
நா¢யும், முகமூடியும்
ஒரு நடிகா¢ன் வீட்டுக்குள் ஒரு நா¢ புகுந்தது; விதம் விதமான,
அழகு அழகான முகமூடிகள், வா¢சை வா¢சையாக வைக்கப்பட்டிருந்ததைப்
பார்த்தது. ஓர் அழகான முகமூடியை எடுத்துக் தன் தலையில் மாட்டிக்
கொண்டு கண்ணாடியில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தது. "அடடா! என்ன அழகான
முகமூடி! அதற்கு மூளை மட்டும் இருந்திருந்தால். . . ?" என்று
பெருமூச்சு விட்டது.
மூளையில்லாத அழகினால் ஒரு பயனும் இல்லை
நா¢யும், காட்டுப்பன்றியும்
ஒரு காட்டுப் பன்றி ஒரு மரத்தில் தன் கொம்புகளைத் தீட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த நா¢, "எதி¡¢ ஒருவரையுமே காணவில்லையே, நீ ஏன் கொம்புகளைத் தீட்டுகிறாய்?" என்று கேட்டது.
காட்டுப் பன்றி, "எதி¡¢ நம் முன்னால் வந்துவிட்டால் அப்பொழுது எப்படிக் கொம்புகளைத் தீட்ட முடியும்" சும்மா இருக்கிற நேரத்தில்தானே தயார் செய்து கொள்ள வேண்டும்" என்று சொன்னது.
யுத்த காலத்திற்கு வேண்டிய கா¡¢யங்களை
சமாதான காலத்தில் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நா¢யும், முள் எலியும்
ஓர் ஆற்றில் நீந்தி அக்கரை போய்ச் சேர்த்தது ஒரு நா¢. நீந்திய களைப்பு மேலிடவே, கரையில் ஏறியதும் அப்படியே சோர்ந்து விழுந்துவிட்டது. அது விழுந்த இடத்தில் ஈக்கள் அதிகமாய் இருந்தபடியால், அதன் முகத்தில் வந்து மொய்த்துக் கொண்டன. அப்பக்கமாய் போன முள்எலி அதைப் பார்த்துப் பா¢தாபப்பட்டது. இந்த ஈக்களை நான் விரட்டிவிடட்டுமா? என்று நா¢யிடம் முள்எலி கேட்டது.
நா¢, "வேண்டாம் அப்பா, வேண்டாம். இப்பொழுதே இந்த ஈக்கள் வயிறுநிறையக் குடித்துவிட்டன. இவற்றை விரட்டினால் மறுபடியும் ஓரு கூட்டம் பசியுள்ள ஈக்கள் வந்து சேரும். அவையும் என் இரத்தத்தைக் குடிக்க ஆரம்பித்தால் அப்புறம் என் உடம்பில் இரத்தமே இருக்காது என்று சொல்லியது.
புதிய சனியன்களைவிட பழகிப்போன சனியன்கள் மேல்
- வை. கோவிந்தன்