ஈசாப் குட்டிக் கதைகள்
தவளைகளும் முயல்களும்
காட்டிலுள்ள முயல்கள் ஒரு நாள் கூட்டம் போட்டுத் தங்களுடைய
பா¢தாப நிலைமையைப் பற்றி யோசித்தன. அவை "இ·து என்ன வாழ்வு? நிம்மதி
துளிக்கூட இல்லை. அமைதியாய்ச் சாப்பிட முடிவதில்லை. தூங்கக் வட
முடிவதில்லை. ஒரு நிழலைக் கண்டாலும் பயப்பட வேண்டியிருக்கிறது. இலைகள்
அசையும் சப்தம் கேட்டாலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட
வேண்டியதாய் இருக்கிறது. இப்படிப் பயந்து பயந்து உயிர் வாழ்வதைவிட
சாவதே மேல்" என்று பயந்து பேசின.
இதைக் கேட்ட எல்லா முயல்களும் செத்துப் போவது என்று முடிவுகட்டி ஒரு
குளத்தை நோக்கிப் போயின.
அந்தக் குளக்கரையில் பல தவளைகள் நிலாவை அனுபவித்துக் கொண்டிருந்தன:
முயல்கள் வரும்
சப்தத்தைக் கேட்டுப் பயந்துபோய் தவளைகள் குளத்திற்குள் குதித்தன.
தண்ணீ¡¢ல் பாய்ந்த சப்தத்தைக்
கேட்ட முயல்கள் பயந்துபோய்ச் சட்டென்று நின்றன. உடனே ஒரு புத்திசாலி
கிழட்டு முயல்,
"சகோதரர்களே, நில்லுங்கள். நாம் எவ்வளவோ பயந்தவர்களாய் இருந்தும்
நம்மைவிடப் பயந்த
பிராணிகளும் உண்டு என்பது தொ¢ந்து போயிற்று. அப்படியானால் நாம்
எதற்காகச் சாகவேண்டும்?
உள்ளதைக் கொண்டு நாம் சிறப்பாக வாழ முயற்சிப்போய் திரும்புங்கள்"
என்று சொன்னது.
உங்களைவிடக் கேவலமான நிலைமையில் உள்ளவர்கள்
எப்பொழுதுமே இருக்கிறார்கள்
மேலும்>>